குமார் என்பவர் மாற்றுத்திறனாளி (Deaf) சிறுவயதில் காதுகேளாதோர் பள்ளியில் படித்தான். பிறகு
அனைத்து மாணவர்கள் பயிலும் பள்ளியில் சமமாகப் படித்தான். அவனுடைய அப்பா சாதாரண
ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். அவன் பகலில் கல்லூரிக்கும், மாலை முதல் இரவு வரை
ஹோட்டலில் வேலை செய்தான். அப்பாவுக்கு மிகவும் உதவி செய்தான். இந்த சூழ்நிலையில்
அவன் B.Sc முடித்தான். பிறகு M.Sc முடித்தான். பிறகு முழு நேரமாக அப்பாவுக்கு உதவியாக ஹோட்டல்
வேலை முழுவதுமாக செய்து கொண்டிருந்தான்.
ரமேஷ்பாபு என்பவர் ஒரு நாள்
குமாரை சந்தித்து TNPSC Exam யைப் பற்றி பேசினார். உன்னால்
வெற்றி பெறமுடியும் முயற்சி செய் என்று பேசினார். அவனும் முயற்சி செய்தபோது
முதலில் தோல்வி அடைந்தான். ரமேஷ்பாபு என்பவர் குமாரிடம் திரும்புவும் பேசினார். நீ
முயற்சி செய்துகொண்ட இருக்கவும்
கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்றார். அதே போல் அவனும் தொடர்ந்து முயற்சி செய்து TNPSC IV Group –ல் வெற்றி பெற்றான். பிறகு விடாமுயற்சியால் TNPSC II Group –ல் வெற்றி பெற்றான். திருச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகள்
அனைவரும் பெருமையாக நினைக்கின்றனர். அதே போல் மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களும்
நமக்கு குறை உள்ளது என்று கருதாமல் குமாரைப் போல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே
இருக்கவேண்டும்.
No comments:
Post a Comment