FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, July 10, 2013

"பெற்றோர்களின் கவனத்திற்கு"

 

குறையொன்றும் இல்லை மலைமூர்த்திக் கண்ணா...

தங்களின் குழந்தைகள் காது கேட்க்க வில்லையென்றாலும் பேசமுடியாமல் இருந்தாலும் அவர்களை கட்டாயம் காது கேளாதோர் பள்ளியில்(சிறப்பு பள்ளி ) மட்டுமே சேர்க்கப்படவேண்டும் .ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் என்று சில விபரம் அறிந்த பெற்றோர்களே சாதாரண பள்ளியில் சேர்கின்றனர், பல பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும், தங்களது குழந்தைகளின் குறைகளை வெளிப்படுத்த தயங்கியும் சாதாரண பள்ளியிலேயே சேர்க்கப்படுகின்றனர்..

சாதாரண பள்ளி ஆசிரியர்களால் இவர்களுக்கு பாடம் கர்ப்பித்து தருவது என்பது இயலாத காரியம் , இவர்களுக்கு என்று சிறப்பு பள்ளி மற்றும் சிறப்பு ஆசிரியர்களால் மட்டுமே காதுகேளாத குழந்தைகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படமுடியும்,

இப்படிப்பட்ட மாற்றுதிரனாளிக்களின் நலனையும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படவேண்டும் அவர்களின் திறன் மேன்படவேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் அரசு சுமார் 30 பள்ளிகளுக்கும் மேல் நிறுவப்பட்டு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பது இல்லை, மாற்றுதிரநாழி மாணவர்களை சாதாரண பள்ளியில் சேர்ப்பதனால் அவர்களுக்குள் உள்ள பல திறமைகள் வெளிக்கொண்டு வர முடியாமல் , அப்படிப்பட்ட குழந்தைகள் தனிமைபடுத்தி விடக்கூடிய நிலை வந்து விடும், கோவையில் RS.புரம் பகுதியில் மாநகராட்சி காதுகேளாதோர் சிறப்புப்பள்ளி இயங்கி வருகிறது , இதில் ஆரம்பத்தில் 500 மாணவர்கள் பயிற்சிபெற்று வந்தனர் ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஒன்று முதல் பத்தாம்வகுப்புவரையில் வெறும் 35 மாணவர்களே பயிற்சி பெற்றுவருகின்றனர். இந்த நிலை நீடித்தால் இப்படி பட்ட சிறப்பு பள்ளிகள் மூடக்கூட்டிய நிலை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

Thanks to Penmai.

No comments:

Post a Comment