Ln.S.தனராஜ், Executive Direct, Sharon (Society for help and Rehab of Needy) அவர்கள் சிறப்பு உரையாற்றினார். அறம் மகிழ் அறக்கட்டளையில் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் குழு பிரிவு செயலாளர் D.சுதா என்பவருக்கு சிறந்த சமூக சேவையர் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. மேலும் பெண் உறுப்பினர்களுக்கு இலவச புடவையை வழங்கினோம் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ந.ரமேஷ்பாபு அவர்கள் காதுகேளாத பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் உரிமையை பற்றி விளக்கி உரையாற்றினார். செயலாளர் H.நாகேந்திரன் மற்றும் உதவி செயலாளர் G.ராஜூ அவர்கள் நன்றி உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment