FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, July 28, 2023

காதுகேளாதோர் பாட்மின்டன்: மதுரை மாணவி சாதனை


27.07.2023 மதுரை, காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாட்மின்டன் விளையாட்டு போட்டியில் மதுரையை சேர்ந்த ஜெர்வின் அனிகா தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரேசிலில் ஜூலை 10 முதல் போட்டிநடந்தது மதுரை லேடிடோக கல்லுாரி பி.ஏ. பொருளியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஜெர்வின் அனிகா இப்போட்டியின் ஜூனியர் இரட்டையர் பிரிவு

இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனைகளுடன் மோதினார் மதுரை ஜெர்லின் அனிகா, உத்தரபிரதேச ஆதித்யா ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.

ஜூனியர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் இரட்டையர் பிரிவில் வெள்ளி சீனியர் குழு பிரிவில் தங்கம், சீனியர் இரட்டையர் பிரிவில் தங்கம் என மொத்தம் 4 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இப்போட்டியில் ஏற்கனவே 2019 ஜூனியர் ஒற்றையர் பிரிவில் ஜொலின் அனிகா தங்கம் வென்று சாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





இனி மாணவர் சேர்க்கையின்போது வாய் பேசாதவர், காது கேளாதவர் எனும் சொற்கள் பயன்படுத்தப்படாது



சென்னை: பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது சில சொற்கள் பயன்படுத்தப்படாது என்று பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காது கேளாத,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இந்நிலையில், காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் ஆகியசொற்கள் மாணவர் சேர்க்கையின்போது பயன்படுத்தக்கூடாது என்று பல்கலைக்கழகம் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது, மாற்றுத் திறனாளிகள் என மட்டும் குறிப்பிட வேண்டும். தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தம் மூலம் மாணவர் சேர்க்கையின்போதே மாற்றுத் திறனாளி வகையை கேள்வியாக கேட்பது தவிர்க்கப்படும். மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிட்டே விண்ணப்ப பதிவு, தேர்வுக்கான சலுகை கோருதலை இனிமேல் மேற்கொள்ள முடியும். தமிழகம் முழுவதும் காது கேளாத,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் செவித்திறன்களை பரிசோதனை செய்ய மாவட்டம்தோறும் சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.



Wednesday, July 26, 2023

India ties with South Korea on top spot with two medals at the 6th Senior World Deaf Badminton Championships


25.07.2023
The Indian badminton contingent has left an indelible mark of excellence at the 6th Senior World Deaf Badminton Championships held in São Paulo, Brazil. They secured two prestigious medals, one gold and a silver.

This remarkable achievement has propelled India to the top spot in the medal tally, where they share the glory with other outstanding athletes from around the world.

Aaditya Yadav and Jerlin Jayaratchagan, the dynamic duo in Women's Doubles, showcased their remarkable teamwork and skills, leading to a thrilling comeback in the finals. Their journey to the top was not without challenges.
In the semi-finals, they faced Taipei's formidable duo, Chiao-Yu Chiang and Yan-Ru Shen, and experienced a setback in the first set with a scoreline of 21-15. Undeterred, they bounced back with incredible determination, securing the next two sets with scores of 21-10 and 21-11, respectively, to reach the finals.

The gripping finals saw India pitted against Malaysia's Wei Ying Boon and Zu Tung Foo. The Indian pair displayed incredible resilience, clinching the first set with a score of 19-21.

While the second set was narrowly lost with a score of 22-20, they made a triumphant comeback in the third set, dominating with a stylish scoreline of 14-21, ultimately securing the coveted gold medal for India.

The exceptional performance of Aaditya Yadav extended beyond the doubles event, as she displayed her brilliance in the Women's Singles category. Her journey to the finals included a hard-fought victory against Katrin Neudolt in the semi-finals, setting the stage for an intense battle for the gold.

In the finals, Aaditya faced a formidable opponent in Korea's Min Kyeong Park. With unwavering determination, she put up a fierce fight, showcasing her skill and talent on the court.

Although she ultimately settled for the silver medal, her exemplary performance has earned her immense praise and respect from fellow athletes and fans worldwide.


பானிபூரி வியாபாரத்தில் அசத்தும் வாய் பேச, காது கேட்க முடியாத தம்பதி




கிஷோர் மற்றும் அவரது மனைவி மனிஷாவுக்கு பேச மற்றும் காது கேட்க இயலாது. ஆனால், இந்தத் தடைகளைக் கடந்த அவர்கள் தற்போது நாசிக்கில் பானிபூரி கடை நடத்திவருகின்றனர். அவர்களால் கேட்க மற்றும் வாய் பேச முடியாவிட்டாலும்கூட அவர்களின் சிரிப்பு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

வாழ்க்கையின் எத்தனையோ கஷ்டங்கள் வந்த போதும் சோதனைகளை புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை மந்திரமாக வைத்துள்ள இந்தத் தம்பதியின் கதை பலருக்கும் ஊக்கமளிக்கும்.



மாநில அளவிலான கபடி போட்டி; தங்கம் வென்ற ராமநாதபுரம் அணி


25.07.2023 ராமநாதபுரம்: சென்னையில் நடந்த முதல்வர் கோப்பை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் ராமநாதபுரம் அணி முதலிடம் பெற்று தங்கம் வென்றது.

சென்னை வண்டலுாரில் மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்

திறனாளிகளுக்கான போட்டிகள் நடக்கிறது. இதில் கபடி போட்டியில் காது கேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் பிரிவில் கன்னியாகுமரி அணியை வென்று ராமநாதபுரம் அணி முதலிடம் பெற்று தங்கம் வென்றது.

சாதித்த வீரர்களை அணியின் மேலாளரும், ராமநாதபுரம் மாவட்ட காது கேளாதோர் சங்க தலைவர் ரவிசங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் பாராட்டினர்.

சென்னையில் நடைபெறும் முதல்வர் கோப்பை மாநில அளவிலான போட்டியில் பள்ளி, கல்லுாரி, பொதுப்பிரிவினர் ஆகியோர் இதுவரை தங்கம்-5, வெள்ளி-2, வெண்கலம் 4 பெற்று மாநில அளவிலான பதக்க வரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் 13வது இடத்தில் உள்ளது.



காது கேளாமைக்கு வைரஸ்களைக்கொண்டு சிகிச்சையளிக்க முயற்சி

 

வைரஸ்கள் உதவியுடன் காதுகளின் உள் ரோமங்களை செயற்பட வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்

ஒரு குறிப்பிட்ட வகை காது கேளாமைக்கு வைரஸ் மூலம் சிகிச்சையளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

சிலவகை காதுகேளாமை பிரச்சினைகளை குணப்படுத்தும் முயற்சிகளில் முன்னேற்றம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் பின்னர் இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

காதுகேளாமை குறைபாடுள்ள குழந்தைகளில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மரபணுப் பிரச்சனைகளே காரணமாக இருக்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Science Translational Medicine என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மரபுரீதியான இந்தப் பிரச்சனையை வைரஸ்களின் மூலம் சரிசெய்து, சிலவகை காது கேளாமை பிரச்சினைகளை போக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்குள் இந்தப் பிரச்சனைக்கு சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்க இந்த ஆய்வின் முடிவுகள் இட்டுச்செல்லக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காது கேளாமை என்பது பல காரணிகளால் உருவாகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட வகை காது கேளாமையை மையப்படுத்தியே இந்த குறிப்பிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

காதுகளில் இருக்கும் நுண்ணிய ரோமங்களே சத்தங்களை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன. பிறகு இந்த சமிக்ஞைகளை மூளை புரிந்துகொள்கிறது.

அமெரிக்கா மற்றும் சுவிஸர்லாந்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் இந்த ரோமங்களின் கவனம் செலுத்தி, ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆனால், மரபணுவில் உள்ள பிறழ்வுகளின் காரணமாக, இந்த ரோமங்களால் மின் சமிக்ஞையை உருவாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், காது கேளாமை ஏற்படுகிறது.

இந்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் குழுவினர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வைரஸை உருவாக்கினர். அந்த வைரஸ் ரோமங்களின் செல்களில் தொற்றிக்கொண்டு, இந்தப் பிறழ்வை சரிசெய்தது.

முழுமையாக காது கேளாதிருந்த எலிகள் மீது முதல்கட்டமாக இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்த எலிகளின் காதில் ஊசி மூலம் வைரஸ் செலுத்தப்பட்டபோது, இயல்பான அளவுக்கு காது கேட்கும் திறன் வரவில்லையென்றாலும், ஓரளவுக்கு காது கேட்கும் திறன் ஏற்பட்டது.

அறுபது நாட்கள் அவற்றை ஆய்வுசெய்ததில், ஒலிகளுக்கு ஏற்ப அவற்றின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டது.

"இந்த ஆய்வு முடிவு உற்சாகமளித்திருக்கிறது. ஆனால், பொய்யானதொரு நம்பிக்கையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. காதுகேளாமைக்கு சிகிச்சையைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று இப்போதே கூற முடியாது" என இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் உருவரும் பாஸ்டன் சிறுவர் மருத்துவமனையைச் சேர்ந்தவருமான டாக்டர் ஜெப்ரி ஹோல்ட் தெரிவித்தார்.

"மரபணு காரணமாக ஏற்படும் காது கேளாமைக்கு சிகிச்சையளிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. எனவே இந்த ஆய்வு மிக முக்கியமானது" என்கிறார் அவர்.

ஆனால், மனிதர்களிடம் இந்த ஆய்வை நடத்த ஆய்வுக்குழுவினர் இன்னமும் தயாராகவில்லை.

வைரஸால் ஏற்படும் தாக்கம் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பது நீருபிக்கப்பட்டுவிட்டாலும், வாழ்நாள் முழுக்க நீடிக்க வேண்டிய தீர்வுதான் ஆய்வுக் குழுவின் இலக்காக இருக்கிறது.

வைரஸ் சிகிச்சையைப் பொறுத்தவரை, உள்காதில் இருக்கும் ரோமங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், வெளிக்காதில் இருக்கும் செல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.

இது மிக முக்கியமானது, ஏனென்றால், வெளிக்காதில் இருக்கும் ரோமங்கள் சத்தத்தின் தன்மையை மாற்றக்கூடியவை. அவைதான் மிக நுண்மையான சத்தத்தையும் கேட்க உதவுகின்றன.

டி.எம்.சி.1 என்றழைக்கப்படும் ஒரு மரபணுவின் பிறழ்வுதான் இப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. பாரம்பரியமாகக் கடத்தப்படும் 6 சதவீத காது கேளாமைப் பிரச்சனைகளுக்கு இந்த மரபணுப் பிறழ்வு காரணமாக இருக்கிறது.

டி.எம்.சி1 என்கிற மரபணுவைத்தவிர நூற்றுக்கும் அதிகமான வேறு மரபணுக்கள் இந்த காதுகேளாமை பிரச்சனையுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன.

மேலும், மிகச் சத்தமாக இசையைக் கேட்டதால் கேட்கும் திறனை இழந்த ஒருவருக்கு இந்த ஆய்வு பலன் தராது.



Wednesday, November 2, 2022

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நாடகமாடிய 2 திருடர்கள் கைது



01.11.2022 மும்பை, 
வீடு புகுந்து திருடிய சம்பவத்தில் பிடிபட்ட 2 பேர் போலீசாரிடம் மாற்றுத்திறனாளியாக நடித்தனர். டாக்டரின் பரிசோதனையில் அவர்கள் நாடகமாடியது தெரியவந்தது. 

வீடு புகுந்து திருட்டு 

மும்பை தாதர் அருகே பிரபாதேவியில் நேகா கேலக்சி என்ற கட்டிடத்தில் கடந்த 25-ந்தேதி 2 வாலிபர்கள் நுழைந்தனர். திறந்து கிடந்த வீட்டில் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடினர். பின்னர் அதேபோல மற்றொரு கட்டிடத்தில் நுழைந்து திருட முயன்றனர். 

இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திருடர்கள் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர்.

இதுபற்றி போலீசில் தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் 2 பேருக்கும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என சைகை மூலம் போலீசாருக்கு தெரிவித்தனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரை சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று டாக்டர்களிடம் பரிசோதனை நடத்தினர். 

2 பேர் கைது 

இந்த பரிசோதனையில் அவர்களுக்கு குறைபாடு எதுவும் இல்லை என தெளிவானது. இதனால் போலீசார் தங்கள் பாணியில் நடத்திய விசாரணையில் கன்னட மொழியில் பதில் தெரிவித்தனர். 

போலீசார் கன்னட மொழி பெயர்ப்பாளர் மூலம் நடத்திய விசாரணையில் சந்து கணேஷ் சென்டு (வயது25), கிரண் முங்கேஷ் குருப்பா (19) என்பது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து இவர்களுக்கு வேறு ஏதேனும் குற்றவழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Thursday, October 13, 2022

காணாமல் போய் 6 ஆண்டுகளுக்குப் பிறகு; `ஆதார்' உதவியால் குடும்பத்துடன் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்

 

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் நவம்பர் 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் (15 வயது) காணாமல் போயிருக்கிறான். சிறுவனின் குடும்பத்தினர் அவனைப் பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதே ஆண்டு, நவம்பர் மாதம் 28-ம் தேதி நாக்பூர் ரயில் நிலையத்தில் அந்த மாற்றுத்திறனாளி சிறுவனை மீட்ட ரயில் நிலைய அதிகாரிகள், அவனை நாக்பூரில் உள்ள அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் அவருக்கு பிரேம் ரமேஷ் இங்கலே என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் அந்தப் பெயரிலேயே சிறுவனுக்கு ஆதார் அட்டை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் காப்பகத்தின் கண்காணிப்பாளர் விண்ணப்பித்திருக்கிறார்.

ஆனால் அந்தச் சிறுவனின் கைரேகை ஏற்கெனவே ஒரு ஆதாரத்துடன் பொருந்தியதால், புதிய ஆதார் எண்ணை உருவாக்க முடியவில்லை. இதனால் குழப்பம் நீடித்திருக்கிறது. அதையடுத்து, மும்பையிலுள்ள ஆதார் ஆணையத்தின் மண்டலக் கண்காணிப்பாளர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டிருக்கிறார். விசாரணையில், பீகாரின் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற பெயருடன் 2016-ம் ஆண்டு ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதன் பிறகு நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், பீகாரில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுவனான சச்சின் குமார் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காணாமல்போயிருந்தது தெரியவந்தது. காது கேளாத, ஊமைச் சிறுவன் என்பதால் அவனால் தன்னுடைய விவரங்களைக் காப்பக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, ஆதார் அட்டையில் இருந்த முகவரிக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் நாக்பூருக்கு விரைந்து சச்சின் குமாரை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சச்சின் குமார் (21) ஆதார் அட்டையின் உதவியுடன் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்திருக்கிறது.



சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை - என்ன நடந்தது?!

05.10.2022
உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் 17 வயது காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, 21 வயது இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை அவரைத் தேடிவந்தது. அவர் அலிகார் நகரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறை, "பாலியல் வன்கொடுமை குற்றவாளி அலிகாரில் மறைந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் சகோதரருடன் சென்றிருக்கிறார். பின்னர் அவர் ராஜ்புரா பகுதியிலுள்ள கிராமத்தில் இருக்கும் தன் சகோதரியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு தங்கியிருந்த அவர் திடீரென வாந்தி எடுக்கத் தொடங்கியிருக்கிறார். உடனே, அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இறந்தார். உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் விஷம் அருந்தியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவரின் சகோதரர் கூறுகையில், ``என் சகோதரர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக பயந்துகொண்டிருந்தார். அதனால், நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துவைக்க சிறுமியின் குடும்பத்தினரைச் சமாதானப்படுத்த முயன்றோம். ஆனால் அவர்கள் மறுத்து, காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்.

போலீஸ் நடவடிக்கை மற்றும் சிறைத் தண்டனைக்கு பயந்து விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்' எனத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தீவிரமாக விசாரித்துவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது. காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.