FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, January 12, 2016

Bihar couple claims Geeta is their daughter

12.01.2016, INDORE: An elderly couple from Bihar on Monday claimed that Geeta, who was brought from Pakistan last year, was actually their daughter Rubeda.

The 23-year-old hearing-speech impaired girl has been staying at city-based Mook Badhir Sansthan after her return to India on October 26. Mohd Isha, his wife and grandson, residents of Mirzapur town in Bihar's Chhapra district, reached Indore and claimed that Geeta was their estranged daughter, district collector P Narahari told TOI. Isha Mohd told reporters here that the structures which Geeta recalled are located near his house. "Rubeda (Geeta) was deaf and dumb. She went missing from a wedding ceremony," he claimed. However, Geeta apparently failed to recognise them. "Their photographs were sent to Geeta, who did not remember them as parents," the district collector said. As per the procedural guidelines laid down by the external affairs ministry, couples claiming to be Geeta's parents have to show "substantial evidence", Narahari said, adding Geeta has to confirm that she recognises them, even faintly, before DNA tests are conducted to corroborate any claim. "Since Geeta did not recognise them, there was no question of proceeding with the DNA test," he added.

Geeta is believed to have been found by Pakistan rangers sitting alone aboard the Samjhauta Express at the Lahore railway station around 10 years ago. External affairs minister Sushma Swaraj had made fervent appeal to locate the family of Geeta. "There is a hospital at the end of the lane of her house. There are paddy and sugarcane fields. On the other side is a railway track and Durga Mandir. There is a rivulet close by where people do fishing. From what she has conveyed, she appears to be from Bihar or Jharkhand," Swaraj had claimed.

Geeta Refuses To Recognise Uttar Pradesh Couple Who Claim To Be Her Parents


12.01.2016, INDORE: Geeta, the deaf-mute girl who was stranded in Pakistan for 15 years, did not recognise a couple from Uttar Pradesh who had claimed that she could be their lost daughter, an official said today.

"Mohammad Issa, from Uttar Pradesh, had submitted an application that Geeta resembles his daughter, Rubaida, who went missing 14 years ago. At that time she was 9-years-old," Indore Collector P Narhari told news agency PTI.

But when Geeta met Issa and his wife, she didn't recognise them, he said.

Many people have come forward claiming that Geeta was their long-lost daughter or relative but no one has been able to establish the claim.

Geeta was reportedly 7-8 years old when she was found sitting alone on the Samjhauta Express at Lahore railway station by the Pakistan Rangers 15 years ago.

She was adopted by the Edhi Foundation's Bilquis Edhi and lived with her in Karachi.

Geeta returned to India on October 26, and presently she is residing at an institute run by an NGO where she will remain till her family is found.


ராணுவத்தில் 1296 வேலைவாய்ப்புகள் ஐ.டி.ஐ. படிப்பு தகுதி

எம்.இ.எஸ். ராணுவ படைப்பிரிவில் 1296 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தில், மிலிட்டரி என்ஜினீயர் சர்வீசஸ் எனும் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவின் பல்வேறு மண்டலங்களிலும் மேட்ஸ் (டிரேட்ஸ்மேன்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கு கமாண்டிங் மண்டலத்தில் 580 பேரும், கிழக்கு கமாண்டிங் மண்டலத்தில் 480 பேரும், வடக்கு கமாண்டிங் மண்டலத்தில் 236 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 1296 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

எலக்ட்ரீசியன், ரெப்ரிஜிரேட்டர் மெக்கானிக், பிட்டர், கார்பெண்டர், மாசன், பைப் பிட்டர், பெயிண்டர், வெகிகிள் மெக்கானிக், வால்வ்மேன், மேட் அப்ஹோல்ஸ்டெர் உள்ளிட்ட பிரிவில் பணிகள் உள்ளன. இது சார்பான ஐ.டி.ஐ. படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இதில் சேர்வதற்கு தேவையான மேலும் சில தகுதிகளை இனி பார்க்கலாம்...

வயதுத் தகுதி

விண்ணப்பதாரர்கள் 15-1-2016-ந் தேதியில் 18 வயது முதல் 27 வயதிக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.டி.ஐ. படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவ மாதிரியைக் கொண்டு விண்ணப்பபடிவத்தை தயாரித்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை சொந்த கையப்பத்தில் நிரப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். சுய முகவரியிட்ட அஞ்சல் முகவரி இணைக்கபட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-1-2016.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 6-5-2016

கிழக்கு மண்டலம்

கிழக்கு கமாண்டிங் மண்டலத்தில் 480 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக பிட்டர் ஜெனரல் மெக்கானிக் பணிக்கு 148 பேரும், எலக்ட்ரீசியன் பணிக்கு 156 பேரும், கார்பெண்டர் பணிக்கு 37 பேரும், ஆர் அண்ட் ஏ.சி. மெக்கானிக் 42 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், ஐ.டி.ஐ. படித்தவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை 20-2-16ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு 15-5-2016 அன்று நடைபெறும்.

வடக்கு மண்டலம்

எம்.இ.எஸ். வடக்கு கமாண்டிங் மண்டலத்தில் 236 'மேட்' பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் அதிகபட்சமாக பிட்டர் ஜெனரல் மெக்கானிக் பணிக்கு 68 பேரும், பைப் பிட்டர் பணிக்கு 35 பேரும், மாசன் பணிக்கு 18 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஐ.டி.ஐ. படித்த விண்ணப்பதாரர்கள், 13-2-16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 8-5-16-ந் தேதி இதற்கான எழுத்து தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப மாதிரி படிவம் மற்றும் கூடுதல் விவரங்களை அறிய ஜனவரி 2-8 மற்றும் 9-15-ந் தேதியிட்ட 'எம்ளாய்மென்ட் நியூஸ் இதழ்களை பார்க்கவும்.

நால்கோ நிறுவனத்தில் டிரெய்னி பணி

தேசிய அலுமினிய கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 39 Junior Fireman, Mining Mate & Skill Up-Gradation Practical Trainee பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 39

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Foreman (Civil)

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Mining Mate

காலியிடங்கள்: 10

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Skill Up-Gradation Practical Trainee (SUPT)/ Junior Operative Trainee(JOT)-HEMM

காலியிடங்கள்: 27

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை "National Aluminium company limited, Alumina Refinery" என்ற பெயருக்கு DAMANJODI–763008 மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட்டுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Sr. Manager(HRD), Recruitment Cell,

Mines & Refinery Complex;

National Aluminium Company Limited,

DAMANJODI, Koraput-763008, Odisha

ஆன்லைன் பதிவு ஆரம்பிக்கும் தேதி: 16.01.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.nalcoindia.com/download/Final%20Advt%20-%20CIVIL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
CLICK HERE

மத்திய சேமிப்பு கிடங்கில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு நிறுவனமான சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷனின் (மத்திய சேமிப்பு கிடங்கு) சென்னை மையத்தில் காலியாக உள்ள 26 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 26

பணி: Warehouse Assistant Grade-II

வயது வரம்பு: 04.02.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி மற்றும் ஆங்கில் தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறனும் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. இதனை "Central Warehousing Corporation" என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Regional Manager,

Central Warehousing Corporation,

Regional Office, 4 North Avenue,

Srinagar Colony, Saidapet, Chennai-600 015.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:04.02.2016

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://cewacor.nic.in/Docs/recrtt_wag_II_ro_cni_060116.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

CLICK HERE

கோவையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 10,155 பேருக்கு பணி நியமன ஆணை

12.01.2016
தமிழக அரசு சார்பில் கோவையில் நடத்தப்பட்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், ஒரே நாளில் 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு முகாம் கோவை குனியமுத்தூ ரில் உள்ள  கிருஷ்ணா பொறி யியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பெயர்ப்பதிவு செய்யப் பட்ட பயனாளிகள் தனியார் நிறுவன அரங்குகளுக்கு நேர்காணலுக்கு அனுப்பப்பட்டனர். கலை, அறிவியல், பொறியியல், பட்டயம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கல்வித் தகுதி, அனுபவம் அடிப்படையில் பயனாளிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. பின்னர் சுருக்கப் பட்டியல் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் ஆட்களைத் தேர்வு செய்தன.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பணியாணைகள் வழங்கும் நிகழ்ச்சி யில், ஊரக வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமை வகித்தார். ஊரக தொழில்துறை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன், தொழில்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினர்.

பிரம்மாண்ட முகாம்

அதிகாரிகள் கூறும்போது, ‘முகாமில் 535-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பங்கேற் றன, 56,263-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப் பட்டன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் அதிகாலை 4 மணி முதலே வரத் தொடங்கினர். போக்குவரத்துக்காக 20 அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட 1600 பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரில் 7 தற்காலிக பேருந்து நிறுத் தங்கள் அமைக்கப்பட்டன. அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. நெரிசலைக் கட்டுப்படுத்த 2500 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்’ என்றனர்.

முகாமில் 14 மாற்றுத்திறனாளிகள் உட்பட 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகளும், 14,503 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகளும், 938 பேருக்கு வெளிநாட்டுப் பணிக்கான பதிவுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 25,596 பேர் முகாம் மூலம் பயன்பெற்றுள்ளனர் என்றனர்.

மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

12.01.2016, விழுப்புரம்,
மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் இவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பேசினார்.

சிறப்பு முகாம்

அப்போது அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6–ஐ பூர்த்தி செய்து பெயரை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்களிப்பது நமது அடிப்படை உரிமை. அதனை கட்டாயம் நமது ஜனநாயக கடமையாக கருதி ஒவ்வொரு குடிமகனும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஜெயசீலன், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Saturday, January 9, 2016

விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 34 ஆயிரம் பேருக்கு சிகிச்சை கலெக்டர் தகவல்

09.01.2016, கடலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 34 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்

தமிழகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள 1½ லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. காதுகேளாத, வாய்பேசமுடியாத 6 வயதுக்குபட்ட குழந்தைகளுக்கு குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை(காக்ளியர் இம்பிளான்ட் கருவி பொருத்தும் சிகிச்சை) மேற்கொள்ள தலா 8 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஆகும் செலவினத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இச்சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் செய்து கொள்ளலாம். எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இச்சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் பெறலாம். மேற்கண்ட 4 நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். இதுபோன்ற உயர்தர சிகிச்சை சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய பெருநகரங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது.

1016 நோய்கள்

இதுதவிர முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,016 நோய்களுக்கு சிகிச்சைகளும், 23 வகையான நோய்களுக்கான பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 113 தொடர் சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இதற்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சில நோய்களுக்கு 1½ லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறலாம்.

கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 515 பேருக்கு தீக்காயம் தொடர்பான சிகிச்சையும், 5,498 பேருக்கு புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சையும், 1,726 பேருக்கு கண்நோய் சிகிச்சையும், 9,785 பேருக்கு ரத்த சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக நோய் தொடர்பான சிகிச்சையும், 3,314 பேருக்கு இருதய நோய்களுக்கான சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

34 ஆயிரம் பேர் பயன்

இதன் மூலம் இதுவரை மொத்தம் 33 ஆயிரத்து 882 பேர் பயனடைந்து உள்ளனர். இதற்காக 70 கோடியே 60 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 1800 425 3993 FREEஎன்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் புதிய அடையாள அட்டை பெற 7373004559, 7373004561, 7373004564 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விளையாட்டு பயிற்சிக் கூடம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, ஜன. 7-
மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விளையாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பயிற்சி கூடங்கள் அமைக்க உள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கோல்ட் கூறியுள்ளார்.

மேலும், ”இந்தப் பயிற்சி கூடங்களுக்காக சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்கனவே நிலம் வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அயல் நாடுகளில் இருந்து சிறந்தவற்றை இறக்குமதி செய்ய உள்ளோம். ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

டுவிட்டர் வலைதளத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இந்த தகவல்களை கூறினார்.