FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 12, 2016

கோவையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 10,155 பேருக்கு பணி நியமன ஆணை

12.01.2016
தமிழக அரசு சார்பில் கோவையில் நடத்தப்பட்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், ஒரே நாளில் 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு முகாம் கோவை குனியமுத்தூ ரில் உள்ள  கிருஷ்ணா பொறி யியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பெயர்ப்பதிவு செய்யப் பட்ட பயனாளிகள் தனியார் நிறுவன அரங்குகளுக்கு நேர்காணலுக்கு அனுப்பப்பட்டனர். கலை, அறிவியல், பொறியியல், பட்டயம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கல்வித் தகுதி, அனுபவம் அடிப்படையில் பயனாளிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. பின்னர் சுருக்கப் பட்டியல் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் ஆட்களைத் தேர்வு செய்தன.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பணியாணைகள் வழங்கும் நிகழ்ச்சி யில், ஊரக வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமை வகித்தார். ஊரக தொழில்துறை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன், தொழில்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினர்.

பிரம்மாண்ட முகாம்

அதிகாரிகள் கூறும்போது, ‘முகாமில் 535-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பங்கேற் றன, 56,263-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப் பட்டன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் அதிகாலை 4 மணி முதலே வரத் தொடங்கினர். போக்குவரத்துக்காக 20 அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட 1600 பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரில் 7 தற்காலிக பேருந்து நிறுத் தங்கள் அமைக்கப்பட்டன. அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. நெரிசலைக் கட்டுப்படுத்த 2500 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்’ என்றனர்.

முகாமில் 14 மாற்றுத்திறனாளிகள் உட்பட 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகளும், 14,503 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகளும், 938 பேருக்கு வெளிநாட்டுப் பணிக்கான பதிவுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 25,596 பேர் முகாம் மூலம் பயன்பெற்றுள்ளனர் என்றனர்.

No comments:

Post a Comment