புதுடெல்லி, ஜன. 7-
மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விளையாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பயிற்சி கூடங்கள் அமைக்க உள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கோல்ட் கூறியுள்ளார்.
மேலும், ”இந்தப் பயிற்சி கூடங்களுக்காக சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்கனவே நிலம் வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அயல் நாடுகளில் இருந்து சிறந்தவற்றை இறக்குமதி செய்ய உள்ளோம். ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.
டுவிட்டர் வலைதளத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இந்த தகவல்களை கூறினார்.
No comments:
Post a Comment