12.01.2016, விழுப்புரம்,
மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் தின விழா
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் இவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பேசினார்.
சிறப்பு முகாம்
அப்போது அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6–ஐ பூர்த்தி செய்து பெயரை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்களிப்பது நமது அடிப்படை உரிமை. அதனை கட்டாயம் நமது ஜனநாயக கடமையாக கருதி ஒவ்வொரு குடிமகனும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஜெயசீலன், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment