FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, January 12, 2016

ராணுவத்தில் 1296 வேலைவாய்ப்புகள் ஐ.டி.ஐ. படிப்பு தகுதி

எம்.இ.எஸ். ராணுவ படைப்பிரிவில் 1296 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தில், மிலிட்டரி என்ஜினீயர் சர்வீசஸ் எனும் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவின் பல்வேறு மண்டலங்களிலும் மேட்ஸ் (டிரேட்ஸ்மேன்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கு கமாண்டிங் மண்டலத்தில் 580 பேரும், கிழக்கு கமாண்டிங் மண்டலத்தில் 480 பேரும், வடக்கு கமாண்டிங் மண்டலத்தில் 236 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 1296 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

எலக்ட்ரீசியன், ரெப்ரிஜிரேட்டர் மெக்கானிக், பிட்டர், கார்பெண்டர், மாசன், பைப் பிட்டர், பெயிண்டர், வெகிகிள் மெக்கானிக், வால்வ்மேன், மேட் அப்ஹோல்ஸ்டெர் உள்ளிட்ட பிரிவில் பணிகள் உள்ளன. இது சார்பான ஐ.டி.ஐ. படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இதில் சேர்வதற்கு தேவையான மேலும் சில தகுதிகளை இனி பார்க்கலாம்...

வயதுத் தகுதி

விண்ணப்பதாரர்கள் 15-1-2016-ந் தேதியில் 18 வயது முதல் 27 வயதிக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.டி.ஐ. படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவ மாதிரியைக் கொண்டு விண்ணப்பபடிவத்தை தயாரித்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை சொந்த கையப்பத்தில் நிரப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். சுய முகவரியிட்ட அஞ்சல் முகவரி இணைக்கபட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-1-2016.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 6-5-2016

கிழக்கு மண்டலம்

கிழக்கு கமாண்டிங் மண்டலத்தில் 480 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக பிட்டர் ஜெனரல் மெக்கானிக் பணிக்கு 148 பேரும், எலக்ட்ரீசியன் பணிக்கு 156 பேரும், கார்பெண்டர் பணிக்கு 37 பேரும், ஆர் அண்ட் ஏ.சி. மெக்கானிக் 42 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், ஐ.டி.ஐ. படித்தவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை 20-2-16ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு 15-5-2016 அன்று நடைபெறும்.

வடக்கு மண்டலம்

எம்.இ.எஸ். வடக்கு கமாண்டிங் மண்டலத்தில் 236 'மேட்' பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் அதிகபட்சமாக பிட்டர் ஜெனரல் மெக்கானிக் பணிக்கு 68 பேரும், பைப் பிட்டர் பணிக்கு 35 பேரும், மாசன் பணிக்கு 18 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஐ.டி.ஐ. படித்த விண்ணப்பதாரர்கள், 13-2-16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 8-5-16-ந் தேதி இதற்கான எழுத்து தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப மாதிரி படிவம் மற்றும் கூடுதல் விவரங்களை அறிய ஜனவரி 2-8 மற்றும் 9-15-ந் தேதியிட்ட 'எம்ளாய்மென்ட் நியூஸ் இதழ்களை பார்க்கவும்.

No comments:

Post a Comment