FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Thursday, July 25, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கான பயணச்சலுகைகள்


பேருந்தில்...
பேருந்தில் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் ஓர் உதவியாளருடன் பயணம் செய்யலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலை நடத்துநரிடம் அளித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் மாற்றுத்திறனாளிகள் தனியாகவும் பயணம் செய்யலாம். உதவியாளருக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள் அதன் நகலையும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் அளித்து, இருவரும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்யலாம்.

உதவியாளருக்கும் சலுகை விலையில் பயணச் சீட்டைப் பெற, ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம். உதவியாளருக்கான பேருந்து சலுகைப் படிவம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். இதனைப் பெற்று முறையாக மருத்துவரிடம் கையொப்பம் வாங்கி, அதன் நகலையும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் பயன்படுத்தலாம். புதுப்பிக்கத் தேவையில்லை.நிரந்தரமானது.


ரயிலில்...
ரயில் பயணிகளில் முழுமையான பார்வையற்றவர்களும் காது கேளாத, வாய் பேச இயலாதவர்களும் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்துடன் தனியாகப் பயணம் செய்யலாம். முதல் வகுப்பு, குளிரூட்டப்பட்ட வகுப்புகளில் ஐம்பது சதவிகிதக் கட்டணத்தில் பயணம் செய்யலாம். முறையான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.ரயிலில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய, குறிப்பிட்ட படிவத்தில் மருத்துவச் சான்றிதழ் பெற்று, அதன் நகலைக் கொடுத்து பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். 35 வயதுக்குப் பின்னர் பெறப்படும் சான்றிதழானது நிரந்தரமானது. அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டாம். ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம்.

கை, கால் குறைபாடு உள்ளவர்கள், தற்காலிக ஊனமுற்ற நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகியோர் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்துடன் உதவியாளர் ஒருவருடன் பயணம் செய்யலாம். உதவியாளருக்கும் மூன்றில் ஒரு பங்கு கட்டணம் மட்டுமே. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர சைக்கிள்,மோட்டார் பொருத்தப்பட்ட வண்டி, ஸ்கூட்டர் போன்றவற்றையும் அவர்கள் பயணம் செய்யும் ரயிலில் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

  விமானத்தில்...
இந்தியாவின் உள்ளூர் விமானங்களில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் ஐம்பது சதவிகிதக் கட்டணத்தில் பயணம் செய்யலாம். எண்பது சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் ஊனத்தின் சதவிகிதமுள்ள கை-கால் இயக்கக் குறைபாடு உடையவர்கள் ஐம்பது சதவிகிதக் கட்டணச் சலுகையில் பயணம் செய்யலாம் என்று இந்திய விமானப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் பார்வையற்றோர், கை, கால் இயக்கக் குறைபாடு உடையவர்களுக்கும் ஐம்பது சதவிகிதக் கட்டணச் சலுகை உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையைப் பெற, ஆதரவற்ற மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும். என்னால் எந்த வேலையையும் செய்ய இயலாது, ’என்னை வைத்துப் பராமரிக்க யாரும் இல்லை’ என்று சுய அறிவிக்கையுடன் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியரிடம் கையெழுத்துப் பெற்று, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்கத் தேவையில்லை.

கல்வி உதவித்தொகை...
கல்வி உதவித் தொகையைப் பொருத்த வரையில் ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரையில் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பட்ட மேற்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு2,500 வரை வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் 1,000, 1,200, 1,500 என்று தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகின்றன.

இதர சலுகைகள்...
இரண்டு கால்களும் செயலிழந்து, கைகள் நல்ல முறையில் இயங்கும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் அதே அலுவலகத்தில் கிடைக்கும்.

கல்லூரியில் பயிலும் கை, கால் ஊனமுற்ற மாணவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் கைகள் நன்கு இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். தற்பொழுது இத்திட்டம் சுயவேலை செய்பவர்களுக்கும், பணிக்குச் செல்பவர்களுக்கும் என்று அனைத்து கை,கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களுக்கே முன்னுரிமை. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

சுயமாகத் தொழில் துவங்கினால் 95 சதவிகிதம் கடனாகப் பெறலாம். மாற்றுத்திறனாளிகள் 5 சதவிகித முன் பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். ஆனால் தற்பொழுது தமிழக அரசே அந்த முன்பணத்தை வங்கிக்குச் செலுத்தும்.

அனைத்து மத்திய, மாநில அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளிலும்3 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்திய ஆட்சிப் பணியில் இருந்து, கடைநிலை ஊழியர் வரை அனைத்துப் பணிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். இதில் பார்வையற்றோர், காது கேளாதோர், கை, கால் ஊனமுற்றோர் தலா ஒரு சதவிகிதத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

மேலும் தேவையான தகவல்களுக்கு இதற்கெனவே Help Line என்ற திட்டத்தைச் செயல்படுத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆலோசனை வழங்கி வரும் கோவையைச் சேர்ந்த சூர்ய.நாகப்பனைத் தொடர்புகொள்ளலாம்.
செல்பேசி எண்: 99445 56168.

Wednesday, July 24, 2013

மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை அறிய இணையதளம்


மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கான உரிமைகள், சட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு, மாத இதழும், இணையதளமும் வெளிவர இருக்கின்றன.


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்,"ஊனமுற்றோர் உரிமைக்குரல்' மாத இதழ், வெளிவர இருக்கிறது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள், சட்டங்கள், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான அரசாணைகள், போன்றவற்றை அறிய முடியும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய, பல்வேறு தகவல்கள், படிவங்கள், ஆணைகள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம்செய்து கொள்ளும் வகையில், தமிழ் இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

Thursday, July 18, 2013

முக்கிய அரசாணைகள்




1.
திருமணஉதவித்தொகை 
2.
 மாற்றுத்திறனாளிகள் வருமான உச்சவரம்பு நீக்கம்
3.
தொழுநோய் குணமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை.
4.
 நகராட்சிகளில் தடைகளற்ற சூழல்உருவாக்குதல் கட்டாயம்.
5.
 அரசுப்பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப்படி ரூ. 1000.
6.
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை.
7.
அரசுப் பேருந்துகளில் கடும் மாற்றுத்திறனாளிகள் துணைவியார் ஒருவருடன் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம்.
8.
கை கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்.
9.
அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிக்கட்டணம்  (ஸ்பெஷல் பீஸ் ) செலுத்த தேவையில்லை.
10.
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிப்பதில் விலக்கு.
11.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெற வயது  45-ல் இருந்து 18-ஆக குறைப்பு.
12.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசுத் தேர்வு எழுதுவதில் பல்வேறு சலுகைகள்.
13.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீட்டித்து வழங்குதல்.
14.
TVS Scooty / Streak / Wego வாகனங்களுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்த அனுமதித்து ஆணை.
15.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை மற்றும் முழு ஊதியம். (வழிகாட்டி நெறிமுறைகள்)

Wednesday, July 17, 2013

மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் ! ~ தங்கம் பழனி

(உயர்கல்வி படிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்..! - Educational Loans for higher education to handicapped persons. !) NHFDC மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி படிக்க கல்விக்கடன் பெற்று, வாழ்வில் உயர்ந்திட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்(National Handicapped Finance and Development Corporation ) மூலமாக கல்விக்கடனை பெறலாம். 40% அல்லது அதற்கு மேல் ஊனமுள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது..

Friday, July 12, 2013

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்: டிசம்பர் 3

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது.அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சேமிப்பு பணத்தில் இருந்து காது கேளாத மாணவிகளுக்கு உதவிய பிச்சைக்காரர்: புத்தாடை வாங்கி கொடுத்தார்

பிச்சைக்காரர்கள்தான் மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்ப்பார்கள். ஆனால் பிச்சைக்காரரே மற்றவருக்கு உதவிய சம்பவம் அகமதாபாத்தில் நடந்து உள்ளது.

இந்த ஊரை சேர்ந்த பிரஜாபதி (வயது 64) என்ற பிச்சைக்காரர் தினமும் அங்குள்ள ஜெயின் கோயில் முன்பு நின்று பிச்சை எடுப்பார். அதில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

இவர் பிச்சை எடுக்கும் பகுதியில் காது கேளாத, வாய்பேசாத ஏழை மாணவி கள் படிக்கும் பள்ளிக் கூடம் இருந்தது. அவர்களுக்கு உதவ விரும்பினார். அவர் ரூ.3 ஆயிரம் சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்துடன் சென்று பள்ளி நிர்வாகத்தினரை சந்தித்து பேசினார்.

அவர்கள் மாணவி களுக்கு புத்தாடை எடுத்து கொடுக்கும்படிகூறினார் கள். அதன்படி 11 மாணவி களுக்கு அவர் புத்தாடை எடுத்து கொடுத்தார்.

இது பற்றி பிரஜாபதி கூறியதாவது:-

பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தினமும் 2 வேளை மட்டும் சாப்பிடுவேன். ஒரு பகுதி பணத்தை சொந்த ஊர் ராஜ்கோட்டில் நோயுற்று இருக்கும் எனது மனைவிக்கு அனுப்பி வைப்பேன்.

மீதி பணத்தை வைத்து ஏழைகளுக்கும் பசியால் இருப்பவர்களுக்கும் உணவு வாங்கி கொடுப்பேன்.

காது கேளாத பள்ளி மாணவிகளுக்கும் ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தேன். எனவே ரூ.3 ஆயிரம் சேமித்து அவர் களுக்கு புத்தாடை வாங்கி கொடுத்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to Tamil Oli

Wednesday, July 10, 2013

வாய் பேசாதோர், காது கேளாதோருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சட்டம்

02.04.2013
சென்னை: காது கேளாதோர், வாய் பேசாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என, உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையில், அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் மற்றும் உள்ளாட்சி துறை, மானியக் கோரிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், மாற்றுத் திறனாளிகள், மூன்று சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், உயர்கல்வி கற்றவர்களாகவும், கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்களாகவும் உள்ளனர்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியில்லாமல் இருந்தனர். எனவே, இவர்களும் போட்டியிட ஏதுவாக, 1994ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 -3அ மற்றும் 38 -3அ, ஆகியவற்றை திருத்தம் செய்து, 2012, நவ., 16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமலர் 


வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில்
எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம்

"பெற்றோர்களின் கவனத்திற்கு"

 

குறையொன்றும் இல்லை மலைமூர்த்திக் கண்ணா...

தங்களின் குழந்தைகள் காது கேட்க்க வில்லையென்றாலும் பேசமுடியாமல் இருந்தாலும் அவர்களை கட்டாயம் காது கேளாதோர் பள்ளியில்(சிறப்பு பள்ளி ) மட்டுமே சேர்க்கப்படவேண்டும் .ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் என்று சில விபரம் அறிந்த பெற்றோர்களே சாதாரண பள்ளியில் சேர்கின்றனர், பல பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும், தங்களது குழந்தைகளின் குறைகளை வெளிப்படுத்த தயங்கியும் சாதாரண பள்ளியிலேயே சேர்க்கப்படுகின்றனர்..

சாதாரண பள்ளி ஆசிரியர்களால் இவர்களுக்கு பாடம் கர்ப்பித்து தருவது என்பது இயலாத காரியம் , இவர்களுக்கு என்று சிறப்பு பள்ளி மற்றும் சிறப்பு ஆசிரியர்களால் மட்டுமே காதுகேளாத குழந்தைகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படமுடியும்,

இப்படிப்பட்ட மாற்றுதிரனாளிக்களின் நலனையும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படவேண்டும் அவர்களின் திறன் மேன்படவேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் அரசு சுமார் 30 பள்ளிகளுக்கும் மேல் நிறுவப்பட்டு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பது இல்லை, மாற்றுதிரநாழி மாணவர்களை சாதாரண பள்ளியில் சேர்ப்பதனால் அவர்களுக்குள் உள்ள பல திறமைகள் வெளிக்கொண்டு வர முடியாமல் , அப்படிப்பட்ட குழந்தைகள் தனிமைபடுத்தி விடக்கூடிய நிலை வந்து விடும், கோவையில் RS.புரம் பகுதியில் மாநகராட்சி காதுகேளாதோர் சிறப்புப்பள்ளி இயங்கி வருகிறது , இதில் ஆரம்பத்தில் 500 மாணவர்கள் பயிற்சிபெற்று வந்தனர் ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஒன்று முதல் பத்தாம்வகுப்புவரையில் வெறும் 35 மாணவர்களே பயிற்சி பெற்றுவருகின்றனர். இந்த நிலை நீடித்தால் இப்படி பட்ட சிறப்பு பள்ளிகள் மூடக்கூட்டிய நிலை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

Thanks to Penmai.

Tuesday, July 9, 2013

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக TNPSC-II Group-ல் வெற்றி பெற்றவன் மாற்றுத்திறனாளி (Deaf) குமார்



குமார் என்பவர் மாற்றுத்திறனாளி (Deaf) சிறுவயதில் காதுகேளாதோர் பள்ளியில் படித்தான். பிறகு அனைத்து மாணவர்கள் பயிலும் பள்ளியில் சமமாகப் படித்தான். அவனுடைய அப்பா சாதாரண ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். அவன் பகலில் கல்லூரிக்கும், மாலை முதல் இரவு வரை ஹோட்டலில் வேலை செய்தான். அப்பாவுக்கு மிகவும் உதவி செய்தான். இந்த சூழ்நிலையில் அவன் B.Sc முடித்தான். பிறகு M.Sc  முடித்தான். பிறகு முழு நேரமாக அப்பாவுக்கு உதவியாக ஹோட்டல் வேலை முழுவதுமாக செய்து கொண்டிருந்தான்.

ரமேஷ்பாபு என்பவர் ஒரு நாள் குமாரை சந்தித்து TNPSC Exam யைப் பற்றி பேசினார். உன்னால் வெற்றி பெறமுடியும் முயற்சி செய் என்று பேசினார். அவனும் முயற்சி செய்தபோது முதலில் தோல்வி அடைந்தான். ரமேஷ்பாபு என்பவர் குமாரிடம் திரும்புவும் பேசினார். நீ முயற்சி செய்துகொண்ட  இருக்கவும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்றார். அதே போல் அவனும் தொடர்ந்து முயற்சி செய்து TNPSC IV Group –ல் வெற்றி பெற்றான். பிறகு விடாமுயற்சியால் TNPSC II Group –ல் வெற்றி பெற்றான். திருச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பெருமையாக நினைக்கின்றனர். அதே போல் மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களும் நமக்கு குறை உள்ளது என்று கருதாமல் குமாரைப் போல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

Monday, July 8, 2013

ஒரு லட்சிய கூரியர் நிறுவனத்தின் இணையதளம் - காது கேளாதோர்கள் தனிச்சிறப்பு


மிரக்கில் கூரியர் நிறுவனத்தை ப‌ற்றி அறியும் போது விபூதி பூஷன் பாந்த்யோபாத்யா எழுதிய ‘லட்சிய இந்து ஓட்டல்’ என்னும் நாவல் தலைப்பு தான் நினைவுக்கு வருகிறது.இந்த நாவல் தலைப்பு போலவே இந்நிறுவனத்தையும் லட்சிய கூரியர் நிறுவனம் என்று அழைக்கலாம்.

அப்படி இந்நிறுவனத்தில் என்ன சிறப்பு என்று கேட்கலாம். இங்கு பணியாற்றுபவர்கள் அனைவருமே காது கேளாதோர் என்பது தான் இதன் தனிச்சிறப்பு.

குறைபாடு உள்ளவர்களை அலட்சியப்படுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் வழக்கமாக கொண்ட ஒரு சமூகத்தில் காது கேளாதோருக்காகவே துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் லட்சிய நோக்கு பாராட்டத்தக்கது தான்.

ஆனால் இந்நிறுவனத்தின் பின்னே பரிதாப எண்ணம் கிடையாது.மற்ற எந்த வர்த்தக நிறுவனத்தையும் போலவே இதுவும் லாப நோக்கோடு நடத்தப்படுவது தான்.லாபம் ஈட்ட முற்படும் அதே நேரத்தில் சமூக குறிக்கோளோடும் செயல்பட வேண்டும் என்பதை இந்நிறுவனம் தாரக் மந்திரமாக கொன்டிருக்கிற‌து.

காது கேளாதோரால் எதையும் செய்ய முடியும் என்று உணர்த்துவதோடு அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் இந்நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ள‌து.

உலகிலேயே இந்தியாவில் தான் காது கேளாதோர் அதிகம் உள்ளனர் என்னும் புள்ளி விவரத்தையும் காது கேளாதோர் பெரும்பாலும் மெழுகு வர்த்தி தாயாரிப்பு போன்ற துறைகலிலேயே வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்ற‌னர் என்னும் செய்தியையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது எத்தகைய முன்னோடி முயற்சி என்பதை புரிந்து கொள்ளலாம்.

காஷ்மீரை சேர்ந்த துருவ் லாக்ரா என்னும் வாலிபர் தான மிரக்கில் கூரியர் நிறுவனத்தை துவக்கி நடத்தி வருகிறார்.மும்பையில் வசிக்கும் இவர் சர்வதேச நிதி நிறுவனத்தில் பார்த்துக்கொண்டிருந்த பெரிய வேலையில் இருந்தவர். பின்னர் அந்த வேலை விட்டு தாஸ்ரா என்னும் அமைப்பில் பணியாற்றச்சென்று விட்டார்.

அரசு சாரா அமைப்புகள் நிர்வாகவியல் முறைகளின் மூலம் செயல்திற‌னை மேம்படுத்திக்கொள்ள வழி செய்து வரும் அமைப்பாக தாஸ்ரா செயல்படுகிறது. இங்கு இருந்த போது தான் அவருக்கு சமூக நோக்கிலான நிறுவனத்தை துவக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ள‌து.

காது கேளாதோரை கொண்டே நிறுவனம் ஒன்றை துவக்க விரும்பி எந்த துறை ஏற்றதாக் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது தான் தற்செயலாக கூரியர் ஊழியர் ஒருவரை பார்த்திருக்கிறார். உடனே கூரியர் சேவை காது கேளாதோருக்கு பொருத்தமாக‌ இருக்கும் என்று தோன்றியது.

இந்த எண்ண‌த்தின் மூலம் பிற‌ந்தது தான் மிரக்கில் கூரியர்ஸ் நிறுவனம்.

காது கேளாதோராக பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு முறைப்படி பயிற்சி அளித்து கூரியர் சேவை வழங்கி வருகிறார்.ஊழியர்கள் யாரிடமும் பரிதாபத்தை எதிரபார்ப்பதில்லை. சேவையின் தரத்தில் சமரசமே இல்லாமல் செயல்பட்டு வருகின்ரனர்.

ஊழியர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று கூரியர் தபால்களை சேர்க்க வசதியாக‌ நகரின் வரைபடம் மற்றும் இதர பணிக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அதோடு எஸ் எம் எச் வசதி தகவல் தொடர்பிறகு பெருமளவு கை கொடுக்கிற‌து.

காது கேளாதோருக்கு என்று உள்ள சைகை மொழி அடங்கிய குறிப்புகளை கையோடு எடுத்துச்செல்கின்ற‌னர்.

இந்நிறுவனத்தின் இணையதளத்தில் எங்கள் நிறுவனம் ஒரு தர்ம ஸ்தாபனம் அல்ல மாறாக் வர்த்தக செயல்பாட்டில் சமூக சிந்தனையை உள்ளடக்கிய சமூக வர்த்தகம் என பெருமித்ததோடு குறிப்பிடப்பட்டுள்ளது.வர்த்தக் செயல் திறனோடு சமூக நோக்கை கலந்து செயல்படுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காது கேளாதோர் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் காது கேளாதோர் பற்றிய முக்கிய இணையதளங்களூக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கொடை வள்ளல்களை விட சமுக நோக்கோடு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களே உலகில் மாற்ற‌த்தை கொண்டு வர உள்ளவர்களாக க‌ருதப்ப‌டுகின்ற‌னர்.

சமூக தொழில் முனைவோர் நெறு குறிப்படப்படும் இத்தகைய முன்னோடி மனிதர்கள் பற்றி இணையத்தின் மூலம் அறிய நேரும் போது அவர்களைப்பற்றியும் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் .

Sunday, July 7, 2013

காது கேளாதோர் குழந்தைகளுக்கான போட்டி: பயிற்சியும், முயற்சியும் இருந்தால் தனித்திறன் வெளிப்படும் கலெக்டர் ஜெகநாதன் பேச்சு


29.06.2013
நாமக்கல்,

நாமக்கல்லில் நடந்த காது கேளாதோர் குழந்தைகளுக்கான போட்டியில்
கலந்து கொண்ட கலெக்டர் ஜெகநாதன் பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் தனித் திறனும் வெளிப்படும் என கூறினார்.

தனித்திறன் போட்டி

நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அரங்க வளாகத்தில் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் 56வது உலக காதுகேளாதோர் தினவிழா மற்றும் காதுகேளா தோர் குழந்தைகளின் தனித் திறன் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெக நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:

ஒவ்வொரு குழந்தைகளிடத் திலும் அனைத்து திறமைகளும் இருக்கிறது. அந்த திறமைகளை வெளிக் கொணருவதற்குத் தான் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு நடத்தப்பட்ட போட்டிகளில் காதுகேளாத மாணவ, மாண விகள் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

மனஉறுதி வேண்டும்

பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் தனித்திறமையையும் வெளிப் படுத்தலாம். திருப்பூர், குமார பாளையம் பகுதியிலிருந்து இங்கு வருகை தந்து கலந்து கொண்ட மாணவ, மாணவியர் களின் ஆர்வத்தை மனதார பாராட்டுகிறேன். உடல் அளவில் அவர்கள் மாற்றுத் திறன் படைத்திருந்தாலும், உள்ளத்தில் மனஉறுதி அவர்க ளிடம் இருப்பதால் அவர்க ளால் எதையும் சாதிக்க முடி கிறது. மாற்றுத்திறனாளிகளுக் காக உயர்கல்வியான மருத் துவம், பொறியியல் படிப்பு களில் அரசு தனி ஒதுக்கீடும் செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற் றத்திற்காக பல்வேறு திட்டங் கள், சலுகைகள் தமிழக அரசால் அறிவித்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்ற திட்டத்தின் பயன்களை பெறுகின்ற வகையில் மாணவ, மாணவியர் களின் கல்வித்திறன் அமைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெகநாதன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண் ணம்மாள், மாவட்ட விளை யாட்டு அலுவலர் பெரிய கருப்பன், காதுகேளாதோர் முன்னேற்ற சங்க தலைவர் கணபதி, செயலர் ஜெயராமன், ஆசிரியர் அருள்மணி, வழக் கறிஞர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks to Dailythanthi.

Saturday, July 6, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பயண சலுகை




04.07.2013
மாற்றுத்திறனாளிகள் ரயில் பயண மருத்துவ அடையாளச் சான்றை பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்று வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அரசு மருத்துவர்கள் மறுக்காமல் ரயில் பயண அடையாளச் சான்று வழங்க வேண்டும். பிரத்யேக படிவங்களில் அடித்தல் திருத்தல் இல்லாமல் பூர்த்தி செய்வதுடன், மருத்துவரின் பதிவு எண்ணுடன் கூடிய முத்திரை, அரசு மருத்துவமனையின் முத்திரை ஆகியவை தெளிவாக தெரியும்படி அளிக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதன்படி அடையாள அட்டை வைத்திருந்தாலே ரயில் பயண அடையாளச் சான்றை மருத்துவர்கள் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to Dinamani

Thursday, July 4, 2013

மத்திய மற்றும் மாநில அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை


 

ST. LOUIS COLLEGE FOR THE DEAF

St. Louis College for the Deaf, Adyar, Chennai – 20 was founded in 1993 by Montfort Brothers of St. Gabriel registered under Societies Registration act of 1860.

The primary aim of St. Louis College is to impart university education to the hearing impaired students from all over India.

St. Louis College is the first college for the deaf in India and second in Asia. This college offers two courses namely B.Com degree in Tamil & English medium and B.C.A degree in English medium to the hearing challenged students.

St. Louis College is affiliated to the University of Madras.


National Service Scheme

NSS Unit has been functioning in the college from 1998 – 1999. The objective of N.S.S is to provide social consciousness and commitment among the students by inculcating a sense of discipline and dignity of labour and decorum. The scheme provides programmes for upliftment, service in rural areas, eradication of social evils and fostering adult education. The membership is purely voluntary. A certification of merit will be awarded at the end of the year, suitably recording the works to the credit of each member of the N.S.S.

NSS Unit of our college has conducted quiz, drawing and poster making competition for our students and sponsored the prizes. St. Louis College NSS and Tamil Nadu state AIDS control society jointly organized an AIDS awareness programme by international alliance for prevention of HIV/AIDS. NSS

Special Camp

A Special NSS camp was conducted in Jan 2009 for 10 days at Palayaseevaram (Kancheepuram Dist). In the camp various activities and awareness programmes were conducted.

The College which was started with 13 students in 1993 has now grown to the present strength of 120. Students from all over India are studying in this college. We have now students from Tamil Nadu, Kerala, Andrra Pradesh and Punjab. There is unity in diversity, existing in our living institution. We have men’s hostel in our college campus. The women students are provided hostel accommodation in our FIHM sister’s convent, Adyar, Chennai- 20. We follow the total communication method in our teaching.


Red Ribbon Club
For the Red Ribbon Club Ms.S. Bagyalakshmi a positive lady was invited to give a lecture on her experience and she created awareness of AIDS on 8.7.08. 

Games and Sports

The College has extensive playground and facilities for healthy physical development. Foot ball, Basket ball, Volley ball and Atheletics and encouraged.

Our college students always excel in sports and games which are conducted by all Indian Universities. They also participate in atheletics and games in the National level and International level.


Special Activities

We were glad to receive hearing impaired visitors from the University of California, USA Michele friendrer and Mr. Faradji Auretie from france. The students interacted with them and both went with pleasant memories.

Tamil Peravai

Tamil Peravai was inaugurated in our college on 5th August 2009. Mr. Christudoss Gandhi I.A.S was the chief guest of the day. Many students participated in the cultural activities. They also enacted a hilorous drama which all the students enjoyed in seeing it.
Contact
St. Louis College for the Deaf
Canal Bank Road, Gandhi Nagar, Adyar
Chennai – 600 020. Tamil Nadu, India.
Phone : +91-44-24421315
Mobile No. : + 91-9840234705, +91-9444827438
E-Mail : info@stlouiscollege.net, stlouiscollegefordeaf@yahoo.com

B.Sc in Audiology and Speech Therapy Colleges in India

Numerous colleges within our country provide B.Sc in Audiology and Speech Therapy course to interested students. There are courses at various levels like diploma, graduate level program and even post graduate programs in Audiology and Speech Therapy. The minimum qualification needed by a person to join the B.Sc Audiology course is to have passed 12th standard with good marks. A listing of those colleges separated zone wise is given below.

B.Sc in Audiology and Speech Therapy Colleges in North India
  • All India Institute of Medical Sciences (A.I.I.M.S.), Safdarjung Enclave, Aurobindo Marg, Ansari Nagar , New Delhi (Delhi)
  • Post Graduate Institute of Medical Education and Research : College of Nursing, Chandigarh (Chandigarh)
B.Sc in Audiology and Speech Therapy Colleges in East India 
  • Indian Institute of Health Education, Berur, Patna
  • J.M. Institute of Speech and Hearing, Road No – 5, Indrapuri P.O – Kesharinagar, Patna (Patna District) Bihar

B.Sc in Audiology and Speech Therapy Colleges in South India 
  • AWH Special College (Association for Welfare of the Handicapped Special College), Near Kallai Railway Station , Kozhikode (Kozhikode Dist.), (Kerala)
  • College of Physiotherapy, Speech and Hearing, Mangalore
  • Dr. M.V. Shetty College of Speech and Hearing, Maladi Court, Panjimogaru , Mangalore (Dakshina Kannada District)
  • Dr. MV Shetty Memorial Trust College, Karnataka
  • Institute of Nursing, Mangalore
  • Institute of Speech and Hearing, Hamur Road, Bangalore Karnataka
  • Kasturba Gandhi Medical College, Manipal
  • Kasturba Gandhi Medical College, Manipal
  • Manipal Academy of Higher Education, Manipal Karnataka
  • Medical Trust Hospital and institution, MG Road Cochin
  • Naseema Institute of Speech and Hearing (N.A.I.S.H. Institute), Bangalore (Karnataka)
  • Osmania University, Hyderabad, Andhra Pradesh
  • Rajiv Gandhi University of Health Sciences, Jayanagar, Bangalore, Karnataka
  • Shri Ram Chandra Medical Institute, Porur
  • Sri Ram Chandra Medical Institute, Chennai
  • Sweekar Rehabilitation Institute for Handicapped, Secunderabad (Andhra Pradesh)All India Institute of Speech and Hearing, Manasa, Mysore
  • Tamil Nadu Medical College, Tamil Nadu
  • University of Chennai, Centenary Building , Chennai
  • University of Mysore, Mysore Vishwavidyalaya, Karnataka
B.Sc in Audiology and Speech Therapy Colleges in West India 
  • Ali Yavar Jung National Institute for the Hearing Handicapped (A.Y.J.N.I.H.H.), Kishenchand Marg, Bandra Reclamation (W), Mumbai.
  • BYL Nair Charitable Hospital, Mumbai
  • Gujarat University, Navrangpura, Ahmedabad
  • University of Mumbai, M.G. Road, Fort, Mumbai
Top colleges that offer B.Sc in Audiology and Speech Therapy

All the above mentioned colleges are quite popular for the courses they offer to the students. Their quality of instruction is well known as well. A few of the most popular colleges in B.Sc Audiology comprise of the prestigious All India Institute of Medical Sciences, New Delhi and Postgraduate Institute of Medical Education and Research, Chandigarh in the North Zone, the JM Institute of Speech and Hearing, Keshrinagar, Patna and Indian Institute of Health Education, Berur, Patna in the East zone,