இந்த ஊரை சேர்ந்த பிரஜாபதி (வயது 64) என்ற பிச்சைக்காரர் தினமும் அங்குள்ள ஜெயின் கோயில் முன்பு நின்று பிச்சை எடுப்பார். அதில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
இவர் பிச்சை எடுக்கும் பகுதியில் காது கேளாத, வாய்பேசாத ஏழை மாணவி கள் படிக்கும் பள்ளிக் கூடம் இருந்தது. அவர்களுக்கு உதவ விரும்பினார். அவர் ரூ.3 ஆயிரம் சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்துடன் சென்று பள்ளி நிர்வாகத்தினரை சந்தித்து பேசினார்.
அவர்கள் மாணவி களுக்கு புத்தாடை எடுத்து கொடுக்கும்படிகூறினார் கள். அதன்படி 11 மாணவி களுக்கு அவர் புத்தாடை எடுத்து கொடுத்தார்.
இது பற்றி பிரஜாபதி கூறியதாவது:-
பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தினமும் 2 வேளை மட்டும் சாப்பிடுவேன். ஒரு பகுதி பணத்தை சொந்த ஊர் ராஜ்கோட்டில் நோயுற்று இருக்கும் எனது மனைவிக்கு அனுப்பி வைப்பேன்.
மீதி பணத்தை வைத்து ஏழைகளுக்கும் பசியால் இருப்பவர்களுக்கும் உணவு வாங்கி கொடுப்பேன்.
காது கேளாத பள்ளி மாணவிகளுக்கும் ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தேன். எனவே ரூ.3 ஆயிரம் சேமித்து அவர் களுக்கு புத்தாடை வாங்கி கொடுத்து இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Thanks to Tamil Oli
No comments:
Post a Comment