FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, July 7, 2013

காது கேளாதோர் குழந்தைகளுக்கான போட்டி: பயிற்சியும், முயற்சியும் இருந்தால் தனித்திறன் வெளிப்படும் கலெக்டர் ஜெகநாதன் பேச்சு


29.06.2013
நாமக்கல்,

நாமக்கல்லில் நடந்த காது கேளாதோர் குழந்தைகளுக்கான போட்டியில்
கலந்து கொண்ட கலெக்டர் ஜெகநாதன் பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் தனித் திறனும் வெளிப்படும் என கூறினார்.

தனித்திறன் போட்டி

நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அரங்க வளாகத்தில் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் 56வது உலக காதுகேளாதோர் தினவிழா மற்றும் காதுகேளா தோர் குழந்தைகளின் தனித் திறன் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெக நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:

ஒவ்வொரு குழந்தைகளிடத் திலும் அனைத்து திறமைகளும் இருக்கிறது. அந்த திறமைகளை வெளிக் கொணருவதற்குத் தான் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு நடத்தப்பட்ட போட்டிகளில் காதுகேளாத மாணவ, மாண விகள் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

மனஉறுதி வேண்டும்

பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் தனித்திறமையையும் வெளிப் படுத்தலாம். திருப்பூர், குமார பாளையம் பகுதியிலிருந்து இங்கு வருகை தந்து கலந்து கொண்ட மாணவ, மாணவியர் களின் ஆர்வத்தை மனதார பாராட்டுகிறேன். உடல் அளவில் அவர்கள் மாற்றுத் திறன் படைத்திருந்தாலும், உள்ளத்தில் மனஉறுதி அவர்க ளிடம் இருப்பதால் அவர்க ளால் எதையும் சாதிக்க முடி கிறது. மாற்றுத்திறனாளிகளுக் காக உயர்கல்வியான மருத் துவம், பொறியியல் படிப்பு களில் அரசு தனி ஒதுக்கீடும் செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற் றத்திற்காக பல்வேறு திட்டங் கள், சலுகைகள் தமிழக அரசால் அறிவித்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்ற திட்டத்தின் பயன்களை பெறுகின்ற வகையில் மாணவ, மாணவியர் களின் கல்வித்திறன் அமைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெகநாதன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண் ணம்மாள், மாவட்ட விளை யாட்டு அலுவலர் பெரிய கருப்பன், காதுகேளாதோர் முன்னேற்ற சங்க தலைவர் கணபதி, செயலர் ஜெயராமன், ஆசிரியர் அருள்மணி, வழக் கறிஞர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks to Dailythanthi.

No comments:

Post a Comment