02.04.2013
சென்னை: காது கேளாதோர், வாய் பேசாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என, உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையில், அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் மற்றும் உள்ளாட்சி துறை, மானியக் கோரிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், மாற்றுத் திறனாளிகள், மூன்று சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், உயர்கல்வி கற்றவர்களாகவும், கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்களாகவும் உள்ளனர்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியில்லாமல் இருந்தனர். எனவே, இவர்களும் போட்டியிட ஏதுவாக, 1994ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 -3அ மற்றும் 38 -3அ, ஆகியவற்றை திருத்தம் செய்து, 2012, நவ., 16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்
வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில்
எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம்

No comments:
Post a Comment