04.07.2013
மாற்றுத்திறனாளிகள் ரயில் பயண மருத்துவ அடையாளச் சான்றை பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்று வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அரசு மருத்துவர்கள் மறுக்காமல் ரயில் பயண அடையாளச் சான்று வழங்க வேண்டும். பிரத்யேக படிவங்களில் அடித்தல் திருத்தல் இல்லாமல் பூர்த்தி செய்வதுடன், மருத்துவரின் பதிவு எண்ணுடன் கூடிய முத்திரை, அரசு மருத்துவமனையின் முத்திரை ஆகியவை தெளிவாக தெரியும்படி அளிக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதன்படி அடையாள அட்டை வைத்திருந்தாலே ரயில் பயண அடையாளச் சான்றை மருத்துவர்கள் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to Dinamani

No comments:
Post a Comment