FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Wednesday, September 25, 2013

சுய உதவிக் குழுவின் பதிவேடுகள்

குழுவில் பதிவேடுகள் ஏன் பாரமரிக்க வேண்டும்:
  • ஒரு குழு நன்கு செயல்படுகிறதா என்பதை கண்டறிய பதிவேடுகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
  • சீரான நிதி செயல்பாட்டிற்கு வழிவகை செய்கின்றன.
  • குழு உறுப்பினர்களிடையே நம்பிக்கை வளர்க்கின்றன்.
  • குழுவின் தற்போதைய நிலையை அறிய உதவுகின்றன.
  • குழுவின் தரத்தை அளக்கும் கருவியாக உள்ளன.
  • வங்கி மற்றும் இதர நிறுவனங்களுடன் உறுதியான தொடர்பினை ஏற்படுத்துவதோடு அவைகளிலிருந்து உதவிகள் பெற வழி வகுக்கின்றன.
  • குழுவின் ஆண்டுக் கணக்குத் தணிக்கைக்கு உதவிகரமாக உள்ளன.
  • குழுவின் எதிர்காலத் திட்டமிடலுக்கு வழிகாட்டுகின்றன.
சுய உதவி குழுவில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்:
  • வருகைப் பதிவேடு
  • தீர்மான புத்தகம்
  • சேமிப்பு பேரேடு [தனி நபர்]
  • கடன் பேரேடு [தனி நபர்]
  • தனி நபர் சேமிப்பு மற்றும் கடன் புத்தகம்
  • ரொக்க ரசீது
  • பண பட்டுவாடா ரசீது
  • வங்கி பாஸ்புத்தகம்
  • ரொக்கப் புத்தகம்
  • பொதுப் பேரேடு
  • பார்வையாளர் புத்தகம்
ஒவ்வொரு பதிவேட்டின் முக்கியத்துவம்:
வருகைப் பதிவேடு:
  • குழு உறுப்பினர்களின் தொடர் வருகையை அறிவதற்காக.
  • வருகை தராத உறுப்பினர் மீது ஓழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக.
  • தீர்மான புத்தகத்தில் உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறுவதற்கு ஆதாரமாக உள்ளது.
தீர்மானப் புத்தகம்:
  • பதிவேடுகளில், தீர்மானப் புத்தகம் ஓரு தாய்ப் பதிவேடு
  • இது குழுவின் வரவினங்களுக்கும், செலவினங்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறது.
  • குழுவின் விதிமுறைகள், விதிமுறையில் மாற்றங்களை உள்ளடக்கி, குழுவை, சீராகச் செயல்பட வைக்கிறது.
  • குழுவின் செயல்பாடுகளை அறிந்திட உதவுகிறது.
  • குழு எடுக்கும் முடிவுகளில், உறுப்பினர்கள் பங்கேற்பினை உறுதி செய்ய வழிவகுக்கிறது.
  • குழு திட்டமிட்டு செயல்படவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் வழிகாட்டுகிறது.
தீர்மான புத்தகத்தை எவ்வாறு எழுதுவது
  • கூட்ட நாள், கூட்ட எண், குழுவில் உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை, வருகை புரிந்தோர் ஆகியவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • சென்ற வாரம் முடிய, மொத்த சேமிப்பு எழுதி, இந்த வார சேமிப்பை கூட்டி, இவ்வாரம் முடிய, மொத்த சேமிப்பு எழுத வேண்டும்.
  • குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
  • ஒரே கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம்.
  • ஒவ்வொரு தீர்மானத்திற்கும் தனித்தனி தீர்மான எண் கொடுக்கப்பட வேண்டும்.
  • உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் தொகை, வரவு, அட்டவணையில் பதிவு செய்யப்பட்டு கணக்குப் பதிவேடுகளுக்கு எடுத்து எழுதப்படலாம்.
  • கூட்ட இறுதியில், தீர்மானங்களை வாசித்து காண்பித்து உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற வேண்டும்.
  • தீர்மானம் எழுதாமல் கையெழுத்து வாங்க கூடாது.
சேமிப்பு பேரேடு:
  • ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் மொத்த சேமிப்பு எவ்வளவு உள்ளது என அறிய உதவுகிறது.
  • உறுப்பினர்கள் தொடர்ந்து சேமிக்கிறார்களா என்பதை அறியலாம்.
  • விருப்பு சேமிப்பு முறை பின்பற்றப்பட்டதா என்பதை அறியலாம்.
  • குழுவில் எந்தெந்த மாதங்களில் சேமிப்பு அதிகரித்துள்ளது, குறைந்துள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
கடன் பேரேடு : ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒவ்வொரு உறுப்பினரும் பெற்ற கடன் தொகை, திருப்பி செலுத்திய தொகை மற்றும் கடன் நிலுவையைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
  • அனைத்து உறுப்பினர்களும் கடன் பெற்றுள்ளார்களா என்பதை அறிய உதவும்.
  • கடன் பெறும் நோக்கத்தை அறிய உதவும்.
  • ஒவ்வொரு உறுப்பினரும், பெற்ற கடன்களை, தவணை தவறாமல் செலுத்தினார்களா என்பதை அறியலாம்.
  • உறுப்பினர்களின் தவணை கடந்த பாக்கியையும் கண்டுபிடிக்கலாம்.
  • குழுவில் கடன் சுழற்சி எத்தனை முறை நடைப்பெற்றுள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம்.
தனிநபர் சேமிப்பு மற்றும் கடன் புத்தகம்
  • சுய உதவிக் குழு உறுப்பினர் என்பதற்கான ஆதாரம்.
  • ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் செலுத்தும் சேமிப்புத் தொகை மற்றும் மொத்த சேமிப்பை அறிய உதவுகிறது.
  • ஒவ்வொரு உறுப்பினரும், தாங்கள் பெற்ற கடன் தொகை, திரும்ப செலுத்திய தொகை மற்றும் கடன் நிலுவையையும் அறியலாம்.
  • எத்தனை முறை கடன் வாங்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
ரொக்க ரசீது
  • குழுவிற்கு வரும் அனைத்து வரவுகளுக்கும் ஆதாரம்.
  • ஒரு குறிப்பிட்ட தேதியில், எவ்வளவு தொகை வசூல் ஆகி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
  • வசூலிக்கப்பட்ட தொகை, வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிய உதவும்.
  • தணிக்கை செய்யும் போது தணிக்கையாளரால் சரிபார்க்கப்படும்.
  • ஓவ்வொரு ரசீதின் தொகையும், ரொக்க புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என அறிய உதவும்.
பணப்பட்டுவாடா ரசீது:
  • குழுவிலிருந்து செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கும் ஆதாரம் ( போக்குவரத்து செலவு, சங்கக் கடன் உள்பட)
  • செலவுக்கான காரணத்தை, விளக்கமாக வவுச்சர் மூலம் அறியலாம்.
  • தணிக்கை செய்யும் போது தணிக்கையாளரால் இது சரிபார்க்கப்படும்.
  • கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு, ஏற்றுக் கொள்ள கூடிய (அ) செல்லுபடியாவதற்கான ஆவணமாகிறது.
வங்கி பாஸ்புத்தகம்:
  • வங்கி கணக்கு துவங்கப்பட்ட தேதியே, குழு துவங்கிய தேதியாக கருதப்படுகிறது.
  • குழுவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை, எடுத்த தொகை மற்றும் வங்கி இருப்பு ஆகியவற்றை அறிய உதவுகிறது.
  • குழு கணக்கிற்கு வழங்கப்பட்ட வங்கி வட்டித் தொகையினை அறியலாம்.
ரொக்க புத்தகம்:
  • குழுவில் நடைபெறும் அனைத்து வரவு செலவுகளையும் தேதி வாரியாக Date wise எழுதி மாத இறுதியில், கையிருப்பு , வங்கி இருப்பு கண்டுபிடிக்க உதவுகிறது.
  • வரவு செலவுகள் சுயதணிக்கை அடைகிறது.
  • மாதத்தின் எந்த தேதியிலும் வங்கியிருப்பு மற்றும் கையிருப்பை கண்டுபிடிக்க இயலும்.
பொதுப் பேரேடு:
  • எல்லா கணக்குகளையும் ஓரே புத்தகத்தில் கண்டுபிடிக்கலாம்.
  • குழுவின் வரவினங்கள், செலவினங்களின் மொத்த தொகையை அவ்வப்போது அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் நிதி நடவடிக்கைகளை மாற்றி அமைத்து கொள்ளலாம்.
  • குழுக் கணக்கை நிதி தணிக்கை செய்ய உதவுகிறது.
பார்வையாளர் புத்தகம்:
  • இப்புத்தகம் குழுவைப் பார்வையிடும் பார்வையாளர்களிடம் குழுவைப் பற்றிய அவர்களது கருத்தை எழுதுவதற்கானது.
  • இப்புத்தகத்திலிருந்து குழுவை யார் யார் பார்வையிட்டுள்ளார்கள் என அறியலாம்.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

பிற சேமிப்பும் குழு சேமிப்பும்

பிற சேமிப்புகளில் உள்ள குறைபாடுகள் :
பிற சேமிப்பு எனும் போது, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு, பாத்திரச் சீட்டு, நகை சீட்டு என வகைப்படுத்தலாம். உறவினர்களிடம் கொடுத்து வைத்தல் நண்பர்களிடம் சேமித்தல் போன்ற பல வகை உள்ளது. இது போன்ற சேமிப்புகளில் உள்ள சிரமங்கள்
  • பிற சேமிப்புகளில் நம்பிக்கையும், நாணயம் மிகக் குறைவே.
  • நினைக்கும் போதோ, தேவைப்படும் போதோ பணம் பெறுவது மிக அரிது.
  • ஏல சீட்டுகள் கட்டுபவர் ஏலம் தள்ளி எடுக்கும் போது கட்டியதைவிட குறைவாக பணம் கிடைக்கலாம்.
  • இறுதியில், ஏலச்சீட்டியில் அல்லது குலுக்கல் சீட்டில் பணம் பெறத்
  • தகிதியானவர்க்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் போகலாம்.
  • லாபம் மற்றும் பயன்கள் யாவும் சீட்டு பிடிப்பவரையே சாரும்.
  • சீட்டு பிடிப்பவர் நட்டத்திற்கு உள்ளாகி, தலைமறைவாகும் சூழ்நிலையில் பணம் இழப்பு ஏற்படலாம்.
  • பிற சேமிப்பில், பாதுகாப்பின்மை அதிகம். அதேநேரம் நிதி நிலைமை யாருக்கும் தெரியாது.
  • வீட்டில் சேமிக்கும் போது, திருட்டு பயம் இருக்கும், யாரும் கேட்டால் கொடுக்கும் மனப்பான்மை ஏற்படலாம்.
  • தனிப்பட்ட முறையில் சேமிக்கும் போது, கட்டயமாக சேமிக்கும் நிர்பந்தம் குறைவு.
  • பிற சேமிப்பில், ஆர்வம், போட்டி மனப்பான்மை குறைவாக இருக்கும்.

குழுவாக சேமிப்பதால் உள்ள நன்மைகள்:

  • குழு உறுப்பினர்களை ஒன்றாக இணைப்பதே சேமிப்பு.
  • குழுவில் சேமிப்பதால் பாதுகாப்பு.
  • பணம் தனி நபரிடம் இல்லாமல் அனைவரிடமும் பத்திரமாக இருக்கும்.
  • யாரும் எடுக்கவோ, கொண்டு செல்லவோ இயலாது.
  • அனைவரும் சேமிப்பதால் நாட்டமுடன் சேமிக்க கற்றுக் கொள்வர்.
  • குழுவில் சேமிப்பதால், எல்லோரும் சேமிக்கும் போது நாமும் சேமிப்போம் – என்ற கட்டாயம், ஒரு உந்துதல் உண்டாகிறது.
  • எப்போது அவசியத் தேவையோ அப்போது பணத்தை உடனே பெறலாம்.
  • உறுப்பினர்களிடம் ஒற்றுமை வளரும்.
  • குழுவில் சேமிப்பதால் பலரது சேமிப்பும் சேர்ந்து ஒரு பெரிய தொகையாக சேர வாய்ப்பாகும்.
  • குழு சேமிப்பு தொகையை வைத்து வங்கியில் கடன் பெறலாம்.
  • குழுவில் சேமிப்பதால் லாபம், பணப்பெருக்கம் யாவும் குழுவுக்கே கிடைக்கும்.
  • குழுவில் சேமிப்பதால் குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது.

குழு சேமிப்பில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் :
  • குழுக் கூட்டத்தின் போது மட்டுமே சேமிப்பு தொகையை செலுத்த வேண்டும்.
  • உறுப்பினர்கள் விரும்பும் தொகையை சேமிப்பாக செலுத்தலாம்.
  • சேமிப்பினை செலுத்தியவுடன் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • உறுப்பினர்கள் பாஸ்புத்தகத்திலும் பதிவு செய்து பெற வேண்டும்.

உள் கடன் (சங்கக் கடன்) :


சுய உதவிக்குழுவில் சேமித்த பணத்தை அவ்வப்போது வங்கியில் இருந்து எடுத்து, தேவையானவர்களுக்கு முன்னுரிமையின் பேரில் வழங்கும் கடனே உள்கடன் அல்லது சங்கக் கடன்.

இந்த உள்கடன் வழங்குவதற்கும் வழிமுறைகள் உள்ளது. அதே போன்று உரிய தேவைக்கு மட்டுமே கடன். அந்த கடனுக்கு குழுக்கள் மூலமாக நிர்ணயிக்கும் வட்டியே உள்கடன் வட்டி. இந்த வட்டி முழுவதும் குழுவிற்கே சேரும்.

உள் கடன் வழங்க வழிமுறைகள்:
  • உறுப்பினர்கள் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் இருக்க உள்கடன் மிகவும் உபயோகமானது. எனவே சேமிப்புத் தொகையை வங்கியில் சேர்த்து வைக்காது உள்கடன் வழங்க வேண்டும்.
  • குழு ஆரம்பித்து மூன்று மாதங்கள் கழித்து குழு சேமிப்பில் இருந்து. தேவைக்கேற்ப உள்கடன் வழங்கலாம்.
  • ஆரம்ப கால கட்டத்தில் ரூ.500/= வரை உள்கடனாக வழங்கலாம்.
  • குழு உறுப்பினர்களின் கடன் தேவை நியாயமானதாகவும், தொழில் மேம்பாட்டுக்காகவும் இருத்தல் வேண்டும்.
  • ஆரம்பத்தில் குறைந்த தவணையில் திருப்பி செலுத்தப்படும் கடனாக வழங்குவது சிறந்த ஓன்று.
  • அதிகமான கடன் தொகை வழங்க வேண்டுமெனில் குழுதான் தீர்மானிக்க வேண்டும்.
  • கடன் தொகைக்கு ஏற்ப தவணைக் காலம் அதிகப்படுத்தப்பட வேண்டும்.
  • குழு உறுப்பினர்கள் மட்டுமே கடன் தொகையைப் பயன்படுத்த வேண்டும்.
  • கடன் பெறும் உறுப்பினரின் நிலை, தகுதி யாவும் அறிந்தே கடன் வழங்க வேண்டும்.
  • உறுப்பினர் திரும்ப செலுத்தும் தகுதியை அறியாது வழங்கினால், வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி உள்கடன் செலுத்தும் சூழல் உருவாகும்.
  • கடன் தேவைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபட வேண்டும். உதரணமாக, அவசரத் தேவைகளான கல்வி செலவு,  மருந்துவச் செலவு, பிரவசச் செலவு,  இறப்புச் செலவு போன்றவற்றிற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம்.
  • ஒரு உறுப்பினர்க்கு, கடன் நிலுவையில் இருக்கும் போது மீண்டும் கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை விபரம் குழுக்கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் வழங்கப்பட வேண்டும்.
  • குழு உறுப்பினர்களின் உள்கடன் நிலுவையினைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • முக்கியமான எல்லாக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், தவறாமல் சேமிக்கும் உறுப்பினர்கள் கடன் பெற தகுதியானவர்கள்.
  • வழங்கப்படும் கடன் பற்றிய விபரம் யாவும் தீர்மானப் புத்தகத்தில் எழுதப்பட வேண்டும்.
  • கடன் கேட்கும் உறுப்பினர்கள் எந்த தேவைக்காக கேட்கிறார்களோ அதற்கே அத்தொகையைப் பயன்படுத்த வேண்டும்.
  • உள்கடன் (சங்கக் கடன் ) ஆபத்து காலங்களில் பெரிதும் உதவும். அதை முறையாக பயன்படுத்த வேண்டும்.
  • கடன் பெறும்போது, திரும்ப செலுத்தும் போதும் உறுப்பினர் பாஸ்புத்தகத்தில் பதிவு செய்து பெற வேண்டும்.
  • உறுப்பினர்கள் உள்கடன் திரும்ப செலுத்தும் போது, அசலுடன், வட்டியும் சேர்த்து தவணை தவறாமல் கண்ணியமாய் திரும்பச் செலுத்தி ரசீதினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

Wednesday, September 18, 2013

மகளிர் திட்டம்

மகளிர் திட்டம் உருவாகக் காரணங்கள்
  • தமிழகத்தில் பெண்களின் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும், சமூக, பொருளாதார அரசியல் ரீதியில் பின்தங்கிய நிலையிலேயே இருந்தனர்.
  • அரசு நலத் திட்டங்கள் பல இருந்தாலும், வறுமை நிலையை ஒழிக்க முடியாமல் இருந்தது.
  • அரசு நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, குறைவான நிலையில் இருந்தது.
  • பெண்கள் மத்தியில் கல்வி, சுகாதாரம், பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.
  • நலப்பணிகளை மக்களே கேட்டு பெற்றுக் கொள்ளும் (Demand creation) உணர்வு குறைந்த அளவிலேயே இருந்தது.
மகளிர் திட்ட வரலாறு
தமிழகத்தில் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார நிலை வலுவடையவும் 1989 ஆம் ஆண்டு பன்னாட்டு வேளாண்மை அபிவிருத்தி நிதியகத்தின் (IFAD) நிதியுதவியுடன் தற்போதுள்ள 8 மாவட்டங்களில் (தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகியவை (IFAD) திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றி காணப்பட்டது.
அவ்வெற்றியின் அடிப்படையில் “மகளிர்திட்டமாக” தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு முதல், நகரத்தில் வசிக்கும் ஏழைகளும் பயன்பெறும் வகையில் சென்னை மாவட்டத்திற்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
மகளிர் திட்டத்தின் குறிக்கோள்
தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை மகளிரையும், சமூகரீதியாகவும், பொரருளாதார ரீதியாகவும், மேம்பாடு அடைய செய்வது, தாங்களாகவே தங்கள் வாழ்கை தரத்தை உயர்த்திக் கொள்ள செய்து ” சுய சார்பு ” நிலைய அடைய செய்வது.
மகளிர் திட்ட நோக்கங்கள்
ஏழை மகளிரின் சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல்
சமூக மேம்பாடு
  • மகளிரிடையே தன்னம்பிக்கை மற்றும் ‘ நமக்கு நாமே’ என்ற உணர்வினை உண்டாக்குதல்
  • சாதி, சமய வேறுபாடு இல்லாமல், ஒற்றுமை, நல்லிணக்கத்தை உருவாக்குதல்
  • சமூக, விழிப்புணர்வை உண்டாக்கி, சமூக பிரச்சினைகளைத் தீர்வு காண மகளிரைத் தயார் செய்தல்.
  • உள்ளாட்சி அமைப்புகளில் மகளிரைப் பங்கேற்கச் செய்தல்.
  • கிராமத்தின் அடிப்படை தேவைகளை பெற தேவையான பணிகளில் ஈடுபட செய்தல்.
  • குடுப்பத்திலும், சமூகத்திலும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி பகிர்ந்தளிக்கச் செய்தல்
  • பெண்களுக்கு எதிரான இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி காண செய்தல்.
  • மகளிரிடையே மறைந்து இருக்கும் ஆற்றல்களைக் கண்டறிந்து வெளிக் கொணர்தல்.
  • சுகாதாரம், குடும்பநலம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றில் தெளிவடையச் செய்தல்.
பொருளாதார மேம்பாடு
  •  சிக்கன நடவடிக்கை மூலம் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்.
  • அவசரக்கடன் தேவைகளை (கந்து வட்டி வாங்காமல்) சுயமாக பூர்த்தி கொள்ள செய்தல்.
  • கடன் தேவைகளுக்கு (ஈட்டி) கந்து வட்டிக்காரர்களைச் சார்ந்து இருப்பதை முழுமையாக தவிர்த்தல்.
  • நேரத்தை வீணாக்காமல் வருவாய் ஈட்டும் தொழில்களில் ஈடுபடுத்துதல்.
  • தொழில் திறன் மற்றும் விற்பனை திறன் பெற்று குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த வழிவகை காணுதல்.
  • மகளிர் செய்த உற்பத்திப் பொருள்களை இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யும் வகையில் திறனை வளர்த்தல்.
  • பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை பெற்று முன்னேற வழி காட்டுதல்.
  • மத்திய, மாநில அரசுகளின் கடனுதவிகளைப் பெற்று பயனடைதல்.
  • வாங்கிய கடனை முறையாக பயன்படுத்தி கண்ணியமாகத் திரும்ப செலுத்த கற்றுத் தருதல்.
  • மகளிர் பெயரில் சொத்துகளை உருவாக்கச் செய்தல்.
திறன் வளர்த்தல்
  •  பெண்களுக்கு பேசும் திறன், எமுதும் திறன், வாசிக்கும் திறன் போன்றவற்றை வளர்த்தல்.
  • தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல்.
  • நடைமுறை வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுத்தல்.
  • தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை கொண்டு செயல்களை முடிக்கும் திறனை மேம்படுத்துதல்.
  • தகவல் தொடர்பு திறனை வளர்த்தல்.
  • முடிவெடுக்கும் திறனை வளர்த்தல்.
  • தொழில் திறன் பயிற்சி பெற வழிவகை செய்தல்.
  • பெண்களுக்கான சட்டங்கள், உரிமைகளை அறிந்து, செலாக்கத்தில் ஈடுபடச் செய்தல்.
  • பதிவேடுகளைப் பராமரிக்கும் திறனை வளர்த்தல்.
  • குழுவாக இணைந்து சாதனைகள் புரிந்திடும் ஆற்றலை வளர்த்தல்.
  • கணிணி, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் திறமைகளை வளர்த்தல்.
  • பல திறன்களை வளர்த்துக் கொண்டு குடும்ப / கிராம / நகர் புற மேம்பாட்டிற்கு வழிவகை செய்தல்.
  • மகளிர்க்கு நிதி மேலாண்மையைக் கற்றுக் கொடுத்தல்.
  • போன்ற மகளிர் திட்ட நோக்கங்கள், சுய உதவி குழுக்களை ஒட்டுமொத்த மேம்பாட்டை அடையச் செய்வது சுய சார்பு தன்மைக்கு இட்டுச் செல்கிறது.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

அடிப்டை விதிமுறைகள்

சுய உதவிக் குழு குழுவின் பொதுவான அடிப்டை விதிமுறைகள்:
  1. சுய உதவிக் குழு உறுப்பினர்களின் தேர்வு, தகுதியின் அடிப்படையில், உரிய வகையில் செய்ய வேண்டும்.
  2. வங்கிக் கணக்கு (Bank SB / Ac) குழுவின் பெயரில் ஆரம்பிக்க வேண்டும்.
  3. குழுக் கூட்டம் வாரந்தோறும் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், நாளில், குழு உறுப்பினர்களின் வசதிக்கேற்ப நடைப் பெற வேண்டும்.
  4. குழு உறுப்பினர்களின் தேவையின் அடிப்படையில், கடன் வழங்கப் பட வேண்டும்.
  5. குழுவால் நிர்ணயிக்கப்பட்ட தவணை மற்றும் வட்டியினை கடன் பெற்ற உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்.
  6. கடன் பெற்ற உறுப்பினர்கள் கடனை குறிப்பிட்ட தவணைக்குள் வட்டியு டன் செலுத்த வேண்டும்.
  7. குழுப் பிரதிநிதி, ஊக்குனரைக் கொண்டு குழு செயல்பட வேண்டும்.
  8. சமூக / கிராம மேம்பாட்டிற்கு குழு பாட வேண்டும்.
  9. குழுவின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உறுப்பினர்களால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை அபராதமாக விதிக்கலாம்.
  10. ஒரு குழுவில் ஒரு குடும்ப நபர் மட்டுமே உறுப்பினராய் இருப்பது நலம். உறவுக்கார்கள் ஓரே குழுவில் உறுப்பினராய் இருப்பதைத் தவிர்த்தல் நலம்.
  11. ஊக்குனர், பிரதிநிதி பொறுப்பானது சுழற்சி முறையில் இருக்க வேண்டும்.
  12. உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்படி சேமிப்புத் தொகைக் கட்டலாம். ஆனால், அது தொடர்ந்த சேமிப்பாக இருக்க வேண்டும்.
  13. குழுவில் இருக்கும் உறுப்பினர் தாமாக விலகினாலும் அல்லது நீக்கப்பட்டாலும் அவர் குழுவின் பொது நிதியில் உரிமை கோர முடியாது. அவரின் சேமிப்பு தொகை மட்டுமே திருப்பித் தரமுடியும்.(சந்தா எக்காரணத்தை கொண்டும் திருப்பித் தர இயலாது)
  14. குழுக் கூட்டத்தின் இறுதியில் குழுவின் வரவு, செலவினை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  15. குழுவின் கையிருப்புத் தொகை ரூ.100 க்கு மேற்படாமல் இருப்பது நல்லது. கையிருப்பை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  16. கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்களிடம் இருந்து வசூலான பணத்தை அடுத்த நாளே வங்கியில் செலுத்த வேண்டும்.

சேமிப்பு :
சேமிப்பு என்ற சொல்லைச் சொல்லும் போதே ஏதோ ஓரு பூரிப்பு நம் மனதில் எழுகிறது! இன்று மகளிரின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதே மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான். குழுவாக சேமிக்கும் போது ஓரு முனைப்பும், நல்ல பிணைப்பும் உண்டாகிறது. பிறசேமிப்புகளில் உள்ள குறைபாடுகள் யாவை? குழுவாக சேமிப்பதில் நன்னைகள் யாவை? சிக்கனத்தை கடைப்பிடித்து, சேமிப்பு பழக்கத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம்

சிறுதுளி பெருவெள்ளம்!
சேமிப்பு இல்லாத வீடு கூரை இல்லாத வீடு…!
சேமிப்பே உங்கள் முதல் செலவாக இருக்கட்டும்!
இன்றைய சேமிப்பு நாளைய முதலீடு!


போன்ற வாசகங்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. பொதுவாக சேமிப்பின் அவசியத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. சேமிப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக பொருளையோ, பணத்தையோ சேர்த்து வைத்து, இல்லாத நேரத்தில் அதை பயன்படுத்துவது. சேமிக்க தெரியாதவர்கள் எதிர்கால வாழ்கையில் அல்லல் பட நேரும்.

தகவல் மூலம் :
மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

Sunday, September 15, 2013

உலக காதுகேளாதோர் தினம் 2013

உலக காதுகேளாதோர் தினம் 2013

அன்புடையீர்! வணக்கம்.

நமது சங்கத்தின் சார்பாக உலக காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு 29.09.2013 ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள திறன் வெளிப்படுத்தும் (நகைச்சுவைப்போட்டி, நடிப்புப்போட்டி, நடனப்போட்டி) போன்ற பல போட்டிகளிலும் கலந்து கொண்ட உங்கள் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை தட்டிச் செல்ல தங்களது பெயர்களை முன்பதிவு செய்ய கடைசி தேதி 22.09.2013 இடம்: TMSSS Empowerment Centre, Room No.212, First Floor, Near RC School, Bharathiyar Salai, Trichy-1.

SMS மூலமாக பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:


7373383825 

8754896891 

8122232763
            


குறிப்பு:
பெயர் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது பெயர், முகவரி, செல்பேசி எண் போன்றவற்றை தெளிவாக SMS செய்யவும்.

நன்றி!


இப்படிக்கு,
திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர்
நல முன்னேற்ற சங்கம்,

Saturday, September 14, 2013

குழுக் கூட்டத்தின் முக்கியத்துவம்

  1. குழுவின் தொடர்ந்த செயல்பாட்டிற்கு குழுக் கூட்டம் அவசியம்.
  2. கூட்டத்திற்கு வருகை தரும் உறுப்பினர்கள் பல தகவல்களைப் பெறவும், விழிப்பிணர்வு அடையவும் வழி வகை செய்கிறது.
  3. சேமிப்பு, தொழில் முனைப்பு போன்ற செயல்பாட்டிற்கு கூட்டம் மிகவும் அவசியம்.
  4. திட்டமிட, ஆண்டுச் செயல் திட்டம் தயாரிக்க பெரிதும் உதவுகிறது.
  5. உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், இணக்கமான அணுகு முறையைப் பெறவும் குழுக் கூட்டம் உதவிகிறது.
  6. கிராம மேம்பாட்டிற்கும், சுய முன்னேற்றத்திற்கும், குழுக் கூட்டமே அடிப்படை.
  7. சீராக, தொடர்ந்து குழுக் கூட்டம் நடத்தி முறையான தீர்மானங்கள் இயற்ற, ஏற்ற களமாக அமைவது குழுக் கூட்டமே.
  8. ஊக்குனர்கள் & பிரநிதிகள் பெற்ற பயிற்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள ஏதுவாகிறது.
  9. வாரக் கூட்டம் நல்ல பலனைத் தரும்.

சுய உதவிக்குழு பொறுப்பாளர்களின் பொறுப்புகள் :

அ. ஊக்குனர்களின் பெறுப்புகள் :
  1. ஊக்குனர்கள், பொறுப்பு மிக்க தாயாக இருந்து, குழுவை கட்டிக் காத்தல்.
  2. குழுவை முறையாக நடத்த, வேண்டிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தல்.
  3. குழுக் கூட்டங்களை தவறாமல் நடத்துதல்.
  4. குழுக் கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள ஊக்குவித்தல்.
  5. உறுப்பினர்களிடையே நல்லுறவு மற்றும் ஓற்றுமையை மேம்படுத்துதல்.
  6. குழுக் கூட்டத்தில் விவாதிக்கும் கருத்துகளையும், தீர்மானங்களையும் பதிவு செய்தல்.
  7. குழுவின் பதிவேடிகளை முறையாக பராமரித்தல்.
  8. குழுக் கணக்கினை ஆண்டு தணிக்கைக்கு ஏற்பாடு செய்தல்.
  9. தணிக்கை மற்றும் தரம் பிரித்தலுக்குப் பிறகு அறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்தல்.
  10. ‘கிராம சபா’ கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள ஆர்வமூட்டல்.
  11. ’ஆண்டுச் செயல் திட்டம் ‘ தீட்டி செயல்பட ஊக்குவித்தல்.
  12. பயிற்சியில் அறிந்து கொண்ட கருத்துகளை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளல்.
  13. குழு வெளிக்கடன் பெற, கடன் பெறுவதற்கான மதிப்பீட்டிற்கு (Credit Rating) தயார் செய்தல்.
  14. உறுப்பினர்களிடையே எண்ணறிவு, எழுத்தறிவினை மேம்படுத்துதல்.
  15. பஞ்சாயத்து / வட்டார அளவிலான குழுக் கூட்டங்களில் கலந்துக் கொள்ள உறுப்பினர்களை தவறாமல் அனுப்புதல்.
  16. குழுவின் நிதிநிலைமையை உறுப்பினர்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்துதல்.
  17. கிராம அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் ஓத்துழைப்பைப் பெறுதல்.
  18. வங்கியின் உதவிகள், அரசு நலப்பணிகள் யாவும் பெற வழிவகை செய்கிறது.
ஆ. பிரதிநிதிகளின் பொறுப்புகள் :
  1. தவறாமல் குழுக் கூட்டம் நடத்த ஊக்குனருடன் இணைந்து செயல்படுதல்.
  2. சேமிப்பு, கடன்வசூல் இதர பிற பணத்தை வசூல் செய்தல், வங்கியில் செலுத்துதல்.
  3. குழுவின் வங்கிக் கணக்கை ஊக்குனருடன் இணைந்து துவக்குதல்-இயக்குதல்.
  4. குழு உறுப்பினர்களுக்கு ஏற்ற பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்தல்.
  5. பயிற்சியில் பெற்ற கருத்துகளை உறுப்பினர்களிள் மத்தியில் பகிர்ந்து கொள்ளுதல்.
  6. உறுப்பினர்களையும் பயிற்சியில், கூட்டங்களில் கலந்து கொள்ள ஆர்வமூட்டுதல்.
  7. ஊக்குனர் இல்லாத நேரத்தில் அவரின் பொறுப்பை ஏற்று நடத்துதல்.
  8. ஊக்குனருடன் இணைந்து குழுக் கணக்குப் பதிவேடுகளைப் பராமரித்தல்.
  9. பெற்ற கடனை முறையாக பயன்படுத்தவும், திருப்பி செலுத்தவும் முன் மாதியாக இருந்து உறுப்பினர்களை ஊக்கப்படுத்துதல்.
  10. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வழி காட்டுதல்.
  11. உறுப்பினர்கள் குழுவின் விதிமுறைகளை மீறாமல் பார்த்துக் கொள்ளுதல்.
  12. குழுவின் பிரதிநிதியாக பஞ்சாயத்து / வட்டார அளவிலான குழுக் கூட்டமைப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்.
  13. அரசு மற்றும் பிற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நலத் திட்டங்களைப் பெற உறுப்பினர்களை ஆர்வ மூட்டுதல்.
  14. சமூக மற்றும் கிராம வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உறுப்பினர்களை ஒருங்கிணைத்து வழி நடத்துதல்.
  15. குழுவிற்கு ஆதரவாகவும் நல்ல வழி நடத்துனராக செயல்படுதல்.
இ. உறுப்பினர்களின் பொறுப்புகள்:
  1. பொறுப்புமிக்க உறுப்பினர்களாக இருத்தல்.
  2. குழுக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுதல்.
  3. அவரவர் கருத்துக்களையும், தகவல்களையும் சுகந்திரமாக வெளிப்படுத்துதல்.
  4. சேமிப்பு, சந்தா, கடன், வட்டி ஆகியவற்றை தவறாமல் செலுத்துதல்.
  5. தாம் வாங்கிய கடனை கண்ணியமாக, தவனை தவறாமல் திருப்பி கொடுத்தல்.
  6. மற்ற சக உறுப்பினர்களிடம் நல்ல ஓற்றுமை, நல்லுறவு போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல்.
  7. சுழற்சி முறையில் வங்கிக்குச் சென்று வருதல்.
  8. மகளிர் திட்டம் மற்றும் பிற துறைகளின் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளில் கலந்து கொள்ளுதல்.
  9. தமக்களிக்கப்பட்ட பொறுப்புகளைத் தன்னார்வத்துடன் ஏற்று நிறை வேற்றுதல்.
  10. குழுவின் நிலை, தரம், யாவும் அறிந்து இருத்தல்.
  11. சமூக மற்றும் கிராம முன்னேற்ற செயல்பாடுகளில் முழுமையாக ஈட்டுபட்டு செயலாற்றுதல்.
  12. “கிராம சபா”- கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுதல்.
  13. குழுவில் பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனே விவாதித்து சரியான தீர்வினைக் காண உதவுதல்.
  14. பொதுவாக ஏனைய குழுக்களுக்கு முன் மாதிரியாக, சிறந்த குழுவாக திகழப் பாடுபடுதல்.
  15. ஊக்குனர், பிரதிநிதிகளின் சரியான செயல்பாடுகளுக்கு சீரிய ஓத்துழைப்பு தந்து சிறப்பாக குழுவினை வழி நடத்திச் செல்ல உதவுதல். எல்லா உறுப்பினர்களும் எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றுத் திகழ முனைதல்.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

வங்கி நேரடிக் கடன்

வங்கி நேரடிக் கடன் (Bank Direct Linkage)
விளக்கம்: மானியம் எதுவும் இல்லாமல் வங்கிகள் நேரடியாகவே சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கித் திரும்ப பெறுதலையே வங்கி நேரடிக் கடன் என்கிறோம்.
நேரடிக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள்:
  1. தரம்பிரித்தல் முடிந்தவுடன் தரம்பிரித்தல் படிவத்துடன் வங்கியை அணுகி கடன் பெறலாம்.
  2. குழுவின் சேமிப்பின் மடங்குகளின் அடிப்படையில் கடன் தொகை கிடைக்கும்.
  3. தரம் பிரித்தல் முடித்த பிறகு
    முதல் கடன் ரூ. 50,000/-
    2-ம் கடன் ரூ. 1,00,000/-
    3-ம் கடன் ரூ. 1,50,000/-
    4-ம் மற்றும் அதற்கு மேல் கடன் – குழுவின் தேவைக்கேற்ப என்ற அடிப்படையில் குறைந்தபட்சக் கடனாக வங்கிகள் வழங்க வேண்டும்.
  4. வங்கிக் கடன் பெறுவதற்கு குழுவின் தீர்மானம் முக்கியத் தேவையாகும்.
நேரடிக் கடனைப் பயன்படுத்தும் முறைகள் மற்றும் திருப்புச் செலுத்தும் முறை:
  1. நேரடிக் கடனை உறுப்பினர்கள் நுகர்வுச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.
  2. ஒவ்வொரு உறுப்பினரும் செய்ய விரும்பும் / செய்யும் தொழிலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
  3. பெரும்பாலும் குறுகிய கால முறைக் கடன்களாக வழங்கப்படுகின்றன.
  4. நேரடிக் கடன் மூலம் பெற்ற தொகையை, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்க முடியும்.
  5. வங்கி நிர்ணயித்துக் கொடுக்கும் வட்டியின் அளவுக்கோ அல்லது கூடுதலாக ஒரு சதவீத வட்டியைச் சேர்த்தோ உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கலாம்.
  6. குழு உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்து விட்டு வசூல் செய்யும் போது அசலுடன் குறிப்பிட்ட வட்டியையும் சேர்த்தே வசூலிக்க வேண்டும்.
  7. வட்டி வசூல் செய்யாமல் அசலை மட்டும் வசூல் செய்து, திரும்பச் செலுத்தினால் பிறகு வட்டிக் கணக்கிற்கு தொகையைச் செலுத்த குழு சேமிப்புக் கணக்கில் எடுத்துச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். இதனைத் தவிர்க்க வட்டியை முறையாக, சரியாகக் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும்.
சுழல் நிதி (Revolving Fund)
விளக்கம்: சுழல்நிதி என்பது சுய உதவிக் குழுக்களின் தொகுப்பு நிதியை மேம்படுத்தவும், நிதி மேலாண்மை, கடன் மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தவும் அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தொகையாகும். அரசால் வழங்கப்படும் ரூ. 10,000/- தொகையுடன் வங்கிகள் தங்கள் பங்குக்கும் கடனாக குறைந்தபட்சம் ரூ. 50,000/- சேர்த்து வழங்குகின்றன. சுழல்நிதிக் கடன் வசதி ரொக்கக் கடனாக சுய உதவிக் குழுக்கள் நிரந்தரமாகப் பயன்படுத்தும் வசதியாகும்.
குழுக்கள் இந்நிதியிலிருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்கு மிகாமல் கடன் பெற்றுக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு முறையும் கடன் பெற்று திரும்பச் செலுத்திவிட்டு அக்கடன் கணக்கிலேயே தொடர்ந்து கடன் பெறலாம். இதனால் தான் இக்கடன் நிதி “சுழல் நிதி”என அழைக்கப்படுகிறது.
சுழல் நிதியைப் பயன்படுத்தும் முறைகள்:
  1. சுழல் நிதி ரொக்கக் கடன் கணக்காக வழங்கப்படுவதால், ஒரு முறை கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தியவுடன் கடன் கணக்கை முடித்துக் கொள்ளக் கூடாது.
  2. குழுவின் ஆயுள் காலம் வரைக்கும், மீண்டும் மீண்டும் மறுகடன் முறையில் பயன்படுத்த வேண்டும்.
  3. பெற்றகடன் தொகை முழுவதும் செலுத்துவதற்கு முன்னரே தேவையின் அடிப்படையில் கட்டிய தொகையின் அளவில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.
  4. அரசு வழங்கிய மானியத் தொகை ரூ. 10,000 /- த்திற்கு வங்கிகள் வட்டி ஏதும் எச்சூழலிலும் வசூலிக்கக் கூடாது.
  5. சுழல் நிதியை குழுவின் பொது நிதியுடன் ஒன்றாகச் சேர்த்தும் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கலாம்.
  6. சுழல் நிதிக் கணக்கை, குறுகிய காலக் கடனாகக் கணக்கிடக் கூடாது.
  7. சுழல் நிதி மானியத்தினை சுய உதவிக் குழுக்கள் முன்பு பெற்ற கடனுக்காக ஈடு செய்யக் கூடாது.
  8. சுழல் நிதி மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு வட்டித் தொகையுடன் சேர்த்தே அசல் வசூலிக்கப்பட வேண்டும்.
  9. சுழல் நிதி மானியத்தைப் பெற்ற உடனே குழு உறுப்பினர்கள் அதைப் பிரித்து வைத்துக் கொள்ளக் கூடாது.
  10. சுழல் நிதிக் கணக்கிற்கு என குழுவில் தனியாக கணக்கு பராமரிக்கப்பட வேண்டும்.
தகவல் மூலம் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள்… வேலை தேடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை…


உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை என அடிப்படை வசதிகளையும் மனிதனின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவது அவர்களது வருமானம் தரக் கூடிய வேலை தான்.

இன்றைய நவீன உலகில் பள்ளி படிக்கும் காலத்திலே மாணவ, மாணவிகள் எதிர் காலத்தில் தான் நல்ல மருத்துவர் ஆக வேண்டும், நல்ல பொறியாளர் ஆக வேண்டும் என தனக்கான துறையை முடிவு செய்து கொண்டு கல்லூரியில் கால் பதிக்கும் போது தான் படிக்கும் கல்லூரி மூலமாகவே வேலையும் பெற்றுவிட வேண்டும் என்று களம் இறங்குபவர்களில் சிலர் ஏனோ சில காரணத்தால் கல்லூரி முடித்துவிட்டு தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையும், தான் எதிர்பார்த்த வேலையும் கிடைக்காமல் செய்வதறியாது தடுமாறுகிறார்கள்...

இதை பயன்படுத்திக் கொண்டு சில போலி நிறுவனங்கள் எங்களிடம் வருவோர்க்கு 100சதவீத வேலை என்று கவர்ச்சிகரமான விளம்பரத்தை கொடுத்து வேலை தேடுபவர்களை தங்களது அலுவலகத்திற்கே வரவழைத்து அனுமதிக் கட்டணம், நுழைவுக் கட்டணம் என கூறி 100ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொண்டு இறுதியில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காமல் பணத்தை பறித்துக் கொண்டு தங்களை தொடர்பு கொள்ள முடியாத இடத்திற்கு பறந்துவிடுகிறார்கள்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக வேலையும் இன்றி தனது பணத்தையும் இழந்து தவிக்கும் இன்றைய இளையதலைமுறை அதிகமே.

போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பற்றிய எச்சரிக்கையாக , வேலை தேடுபவர்களுக்கான ஒரு விழிப்புணர்வு கட்டுரை.வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பற்றிய கருத்துக்களை காம்கேர் கே. புவனேஸ்வரி இங்கே பதிவு செய்துள்ளார். 


வேலைவாய்ப்பு நிறுவனங்கள் உருவானது எப்படி...
பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் காலூன்றத் தொடங்கிய காலத்தில் தான் வேலை வாய்ப்பு நிறுவனங்களும் பெருகத் தொடங்கின. வேலை தேடுபவர்களுக்கும், வேலை கொடுப்பவர்களுக்கும் பாலமாக செயல்படுவதே இவர்கள் பணி. இந்நிறுவனங்கள் கன்சல்டன்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அரசிடம் முறையான அனுமதி பெறுகின்றதா?

வேலை வாய்ப்பு நிறுவனங்கள் அரசு பதிவுபெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் அரசு பதிவு பெற்றதாக இருப்பதில்லை.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு நிறுவனம் தேடிவரக்காரணம் என்ன?

உதாரணத்துக்கு, காம்பஸ் இண்டர்வியூ இல்லாத கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள், கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் படித்து முடித்த மாணவர்கள், வீட்டுச் சூழல் காரணமாக 2, 3 வருடங்கள் தாங்கள் படித்த படிப்புக்கு ஓத்து வராத வேலையை செய்தவர்கள் இது போன்றவர்களுக்கு, நேரடியாக வேலை தேடுவதை விட வேலை வாய்ப்பு நிறுவனங்கள் வாயிலாக வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால், வேலை வாய்ப்பு நிறுவனங்களை அணுகும் போது கவனமாக இருக்க வேண்டும்.

படிக்கும் கல்லூரிகளில் அனைவருக்கும் வளாக வேலைவாய்ப்பு முகாம் என்று நிறைய கல்லூரி நிறுவனங்கள் கூறிவருகிறது. அப்படியானால் படிக்கும் காலத்திலே அனேக மாணவ, மாணவிகள் வேலை பெற்றுவிடுகின்றார்களா?

அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமையில்லாதவர்கள், கல்லூரியில் ஏதேனும் பிரச்சனையில் சிக்கி ப்ளாக் மார்க் வாங்கியவர்கள், தாங்கள் படித்த சப்ஜெக்ட்டில் தெளிவு இல்லாமல் மனப்பாடம் மட்டுமே செய்து மதிப்பெண் பெற்றவர்கள், இவர்கள் மட்டும் தான் காம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாமல் தங்கி விடுகிறார்கள்.


கல்லூரி வளாக வேலைவாய்ப்பு நேர்முக தேர்வில் மாணவர்கள் பலர் தேர்வு செய்யப்படாமல் போக காரணம் என்ன?

காம்பஸ் இன்டர்வியூவில் ஜெயிப்பதற்கு, எழுத்துத் தேர்வு, குழு விவாதம், தொழில்நுட்பத் தேர்வு, எச்.ஆர் இன்டர்வியூ என்று பல நிலைகளைத் தாண்டி வர வேண்டியிருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் உரையாடுகின்ற திறமை, கணிதத்தில் ஆழ்ந்த புலமை, புரோகிராம் எழுத உதவுகின்ற லாஜிகல் திங்கிங், வித்தியாசமாக சிந்திக்கும் திறனான லேட்ரல் திங்கிங் போன்றவற்றில் அதீத ஈடுபாடு இருக்க வேண்டும். இவற்றுடன் அதிமுக்கியமாக தன்னம்பிக்கை அவசியம் தேவை. இவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் சறுக்குபவர்களுக்கு காம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைப்பதில்லை.

போலி வேலைவாய்ப்பு நிறுவன அதிபர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் தண்டனை பெற வழி செய்கிறதா?

நிச்சயமாக சட்டப்படி தண்டனை உண்டு. போலீசில் புகார் தரலாம்.

மென்பொருள் துறை நிறுவனங்கள் மற்றும் வன்பொருள் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை நேரிடையாக தேர்வு செய்கிறதா? அல்லது வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனம் மூலமாகவே வேலையாட்களை பெற்றுக் கொள்கிறதா?

சாஃப்ட்வேர் மற்றும் வன்பொருள் துறை நிறுவனங்கள் தேவைக்கு ஏற்றவாறு, நேரடியாகவும், கன்சல்டன்சிகள் மூலமாகவும் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். எம்ப்ளாயி ரெஃபரென்ஸ் எனப்படும் முறையிலும் ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் ஏஜென்டுகளை பயன்படுத்துவதால் பெரிய நிறுவனத்துக்கு என்ன லாபம்?

பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களே நேரடியாக அவ்வேலையை செய்ய, அனைத்து மீடியாக்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும், டெக்னிகல் இண்டர்வியூ, ஆப்டிடியூட் டெஸ்ட், ஹெச்.ஆர் இண்டர்வியூ, பர்சனல் இண்டர்வியூ என்று பல்வேறு கோணங்களில் பரிசோதித்து ஆட்களை தேர்ந்தெடுக்க தேவையான முன்அனுபவம் உள்ள ஸ்டாஃப்களை முதலில் அப்பாயிண்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறில்லாமல், நேரத்தையும், பணத்தையும் சேமித்து தேவையான ஆட்களை தேவையான நேரத்தில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவே பன்னாட்டு நிறுவனங்கள், வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் கன்சல்டன்சிகளைப் பயன்படுத்துகிறது.இதே போல், போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பற்றிய கருத்தை ஜெகதீசன்.எல் ( கிரி டெக்னாலஜி) அவர்கள் கூறும்போது, எங்களைப் போன்று வளர்ந்து வரும் நிறுவனங்களில் பெரும்பாலும் எங்களுக்கு தேவையான ஆட்களை நாங்கள் நேரிடையாக தேர்வு செய்து கொள்கிறாம்.

ஆனால், பெரும்பாலும் இன்றைய இளைய தலைமுறையினர் கல்லூரி படிப்பை முடித்ததும் மிகப் பெரிய நிறுவனங்களில் மட்டுமே தாங்கள் பணியில் சேர வேண்டும் என விரும்புகிறார்கள்.

Friday, September 13, 2013

நுண் கடன்

  1. சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான நிதியினைத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. இத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்கள் நுண் நிதி நிறுவனங்கள் என அழைக்கப்படுகிறது.
நுண் நிதியின் முக்கியத்துவம்
  1. சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை ஊக்கப்படுத்திட
  2. கூட்டமைப்பின் பொதுநிதியினை அதிகரித்திட
  3. உள்கடன் வாய்ப்புகளை அதிகரித்திட
  4. உறுப்பினர்களின் சிறுகடன் / பெருங்கடன் தேவைகளைப் பூர்த்தி செய்திட
  5. கூட்டமைப்பில் நிதிகையாளும் திறனை மேம்படுத்தி, முன் உதாரணமாகச் செயல்படுத்திட
நுண் கடன் பெறுவதில் நன்மைகள்:
  1. நுண் நிதி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் கடன் திரும்பச் செலுத்தும் அட்டவணையானது மிகவும் குறுகிய கால வரையறைக்குட்பட்டது
  2. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களைத் தவிர நேரிடையாக, நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்
  3. கடன் வழங்கும் முறை மிக எளிதாக இருக்கும்.
  4. கடன் தேவைக்கு அடமானம் ஏதும் தேவையில்லை.
  5. ஒரு சில நிறுவனங்கள் நேரடியாகவே உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது.
  6. அரசுடமையாக்கப்பட்ட வங்களின் வட்டி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்.
  7. நுண் நிதி நிறுவனங்கள் நேரிடையாக, சமுதாய சார்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழு/ கூட்டமைப்புடன் நேரடித் தொடர்பு.
  8. நுண் நிதி மூலம் பெறப்படும் நிதி பெறுவதற்கான நடைமுறைச் செலவினமானது, நிதி பெறுபவருக்கும், நிதி அளிக்கப்படுபவருக்கும் மிகவும் குறைவு.
  9. நுண் நிதி தொடர்பு, ஒரு குழுவை, கூட்டமைப்பினை மட்டும் சார்ந்திருத்தல்
நுண் கடன் மூலம் ஏற்படும் தீமைகள்
  1. சுய உதவிக் குழு / கூட்டமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படாமை
  2. மகளிர் முன்னேற்றத்தினை விட நிதி பரிமாற்றத்திற்கே முக்கியத்துவம் தரப்படும்
  3. அதிகப்படியான வட்டி
  4. கடன் திருப்பிச் செலுத்தும் முறையானது வாரம், 15 தினங்களுக்கு 1 முறை, மாதம் ஒரு முறை சேமிப்பை பற்றிய விழிப்புணர்வு குறைந்து காணப்படுதல்
  5. மறைமுகமான வட்டி விகிதம் / வட்டி நிர்ணயம் (உணம்) நுழைவுக்கட்டணம், வட்டி காலதாமத்திற்கான அதிக வட்டி, விண்ணப்ப பரிசிலனைக் கட்டணம் மற்றும் இதர
  6. நுண் நிதி மூலம் பெறப்படும் கடன் பெரும்பாலும், கடன் பெறுபவரின் சுய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
  7. சுய உதவிக் குழு / கூட்டமைப்பினை பொருளாதார ரீதியாக, தன்னிறைவு அடையச் செய்வதற்கு முக்கியத்துவம்
  8. நிதிப்பயன்பாட்டினை கண்காணிப்பு செய்வதில் குறைபாடு.
தகவல் மூலம் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

குழு செயல்பாடுகளை கண்காணித்தல்

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / குடியிருப்பு அளவிலான மன்றம் / சுய உதவிக் குழு செயல்பாடுகளை கண்காணித்தல்
கண்காணித்தல் :
கூட்டமைப்பு தங்கள் இலட்சியத்தை அடைவதற்காக திட்டமிடும் பணிகள் உரிய காலத்தில் பயனுள்ள வகையில் நிறைவேறியுள்ளதா என்பனவற்றை அறிந்து கொண்டு அவ்வப்போது தொடர் நடவடிக்கைகளை செய்து கொள்ளுதலே கண்காணிப்பு ஆகும்.
கடந்த கால கூட்டமைப்புகள், உறுப்பினர் குழுக்களை சரிவர நிர்வகிக்க இயலாத காரணத்தினாலும், தொடர் கண்காணிப்பு, மற்றும் வழிகாட்டுதல் இல்லாமையால் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் கூட்டமைப்பின் பங்கு மிகக் குறைந்தளவே காணப்பட்டது. மேற்கண்ட குறைகளை களைய, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மூலமாக கீழ்க்கண்ட செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
அவை:
1. கண்காணித்தல்
2. வழிகாட்டுதல்
3. செயல்பாடுகளுக்குத் துணைபுரிதல்
கண்காணித்தல்
1. உறுப்பினர் குழுக்கள் முறையான வாரக் கூட்டங்கள் நடத்துவதையும், வார சேமிப்பு செய்வதையும் கண்காணித்தல்
2. பதிவேடுகள் அனைத்தையும் முறையாகப் பராமரிப்பதைக் கண்காணித்தல்
3. குழுக்கள் அவ்வப்போது வங்கிக்குச் சென்று பணம் செலுத்தியபின் செலவுகள் செய்வதைக் கண்காணித்தல்
4. குழுக்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்தல். அதாவது, உள்கடன் வழங்குதல், கடன் திருப்பம், வட்டி வீதம் கணக்கிடுதல், வெளிக்கடன் பெற்று முறையாகச் செலுத்துதல் போன்றவற்றைக் கண்காணித்தல்
5. குழுக்கள் செய்யும் தொழில்கள் / வருமானம் ஈட்டக் கூடிய தொழில்களைக் கண்காணித்தல்
வழிகாட்டுதல்:
1. குழுக்களின் கூட்டம் நடத்தும் முறைக்கு வழிகாட்டுதல். (தகவல், நிகழ்ச்சி நிரல், கூட்டத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்றவை.)
2. குழுவின் செயல்பாடுகளில் உறுப்பினர்கள் பங்கேற்பை அளிப்பதற்கு வழிகாட்டுதல்
3. உள்கடன் வழங்கலை முன்னுரிமைப்படுத்துவதற்கும், வட்டி கணக்கிடும் முறைகளுக்கும் வழிகாட்டுதல்
4. உள் தணிக்கை, வெளித் தணிக்கை செய்தல் போன்றவைகளுக்கு வழிகாட்டுதல்
5. குழுக்கள் கூட்டாகத் தொழில்கள் செய்ய வழிகாட்டுதல்
6. குழுக்கள் அவற்றின் விதிமுறைகளிலிருந்து விலகாமல் செல்வதற்கு வழிகாட்டுதல்
7. குழுக்களின் பொதுநிதியை அதிகப்படுத்துவதற்கும் வழிகாட்டுதல்
8. குழுக்களின் சீரான நிதி நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல்
செயல்பாடுகளுக்குத் துணைபுரிதல்:
1. உறுப்பினர்கள் சேமிக்கும் பழக்கத்தை மேம்படுத்த (சேமிப்பை அதிகரிக்க) குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு அறிவுரை வழங்குதல்.
2. பதிவேடுகள் பராமரித்தலில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் களைய நடவடிக்கை எடுத்தல்.
3. உள் தணிக்கை மற்றும் வெளித் தணிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைக் களையத் துணைபுரிதல்.
4. விருப்ப சேமிப்பு நிர்ணயிக்கப்பட்ட சேமிப்பு முறைகளை எடுத்துக் கூறி விருப்ப சேமிப்பு செய்யத் துணைபுரிதல்.
5. குழுக்கள் செய்யும் தொழில்களில் தொழில் நுட்பங்கள், தொழில் திறன்கள், மூலப்பொருட்கள் போன்றவை கிடைக்கத் துணை நிற்றல்.
6. குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புகள் கிடைத்திட துணைபுரிதல்.
7. கண்காட்சிகள் / பொருட்காட்சிகளில் கலந்து கொண்டு சந்தை வாய்ப்புகளைப் பெற துணை நிற்றல்.
தகவல் மூலம்: தமிழ் நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

கண்காணித்தல்

சுய உதவிக்  குழுக்களை - கண்காணித்தல் வழிமுறைகள்:
ஒர் அமைப்பானது / நிறுவனமானது பல்வேறு செயல் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தும் போது அச்செயல்பாடுகளை தொடர் கண்காணித்து வழிப்படுத்தும் போதுதான் அச்செயல்பாட்டினால் நல்ல முறையில் விளைவுகள் / பயன்கள் ஏற்படுகிறது.
கண்காணிப்பதற்கான கீழ்வரும் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தலாம்:
1. அறிக்கைகள் பெறுதல்.
2. களப்பார்வை
3. இடைநிலை மதிப்பீடு
4. ஆய்வுகள்
5. ஆவணப்படுத்துதல்
கண்காணித்தலின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
  1. குடியிருப்பு மன்ற அளவில் தகுதி உள்ள அனைத்துக் குழுக்களும் குடியிருப்பு மன்றத்தில் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல்
  2. குடியிருப்பு மன்ற செயல்பாடுகள் இலட்சியம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் செயல்படுவதை தொலை நோக்குப் பார்வையுடன் கண்காணித்தல்
  3. கூட்டமைப்பின் நோக்கங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடு குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்தல்
  4. நிறைவேற்றப்பட்டுள்ள செயல்பாடு வரையறுக்கப்பட்டுள்ள இலக்கு மக்களை சென்றடைந்தவற்றை உற்று கவனித்தல்
  5. வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளின் அடிப்படையில் நிறை குறைகளை ஆராய்ந்து ஆய்வின் அடிப்படையில் குறை இருப்பின் தக்க ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுதல்
  6. புதிய குழுக்கள் அமைத்தல் மற்றும் நலிவுற்றக் குழுக்களை வலுப்படுத்துதல் பற்றிய விபரங்கள் உள்ளாதா என கண்காணித்தல்
  7. அனைத்துக் குழுக்களுக்கும் பயிற்சி, தரம் பிரித்தல், வங்கிக் கடன் இணைப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய பட்டியல் சரிபார்த்தல்
  8. சுய உதவிக் குழுக்களிலிருந்து பெறப்பட்ட கடன் மனுக்களை உரிய முறையில் பெறப்பட்டுள்ளதா என அறிதல்
  9. குடியிருப்பு மன்ற அளவிலான மாதாந்திர அறிக்கை கூட்டமைப்பிற்கு முறையாக அனுப்பப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்தல்
  10. கூட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் / தீர்மானங்கள் குழுக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தல்.
  11. குடியிருப்பு வாரியாக தொழில் செய்திட வளங்களை வரிசைப்படுத்தி அடையாளம் கண்டறிந்தவற்றை கண்காணித்தல்
  12. அனைத்து குழுக்களின் உறுப்பினர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதை குடியிருப்பு நிர்வாகிகள் உதவியுடன் கண்காணித்தல்
  13. குழுக்கள் பெற்ற கடன் தொகையை தவணை தவறாமல் திரும்பச் செலுத்துவதை தொடர் கண்காணிப்பு செய்தல்
  14. குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முறையான விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை கண்காணித்தல்.
தகவல் மூலம்:  தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

சுய உதவிக் குழு

 

பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள முடிவுகளைக் கண்காணித்தல்
  1. பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.
  2. கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகளின் அடிப்படையில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதை கவனித்தல்.
  3. சமூக தணிக்கைக் குழுவின் விவாத பொருள் / அறிக்கை உரிய ஆதாங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.
  4. பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெரும்பான்மையான அளவிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதா என சரிபார்த்தல்.
  5. விவாதப் பொருள் அனைத்தும் கூட்டத்தின் கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.
  6. துணைக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைக் கண்காணித்தல்.
குழு அமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் துணைக்குழு
  1. சுய உதவிக் குழு இணையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு புதிய குழுக்கள் அமைக்க வேண்டும்.
  2. அனைத்துக் குழு உறுப்பினர்களும் உரிய காலத்தில் பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
  3. வலுவிழந்த / செயல்படாத குழுக்களின் எண்ணிக்கை, செயல்படாததற்கான காரணம் மற்றும் தீர்வு மேற்கொள்ளப்பட்டதற்கான விவரங்களை வைத்து அக்குழுக்களை இயங்கச் செய்ய வேண்டும்.
செயற்குழு உறுப்பினர்களின் பணிகள்
  1. கண்காணித்தல் பணியை பொதுவாக பொறுப்பாளர்களைக் கொண்டு மேற்கொள்ளச் செய்ய வேண்டும். பொறுப்பாளர்கள் முறையாக பிற அமைப்புகளை கண்காணித்து அறிவுரைகள் வழங்கிய விவரத்தினை செயற்குழுவில் பதிவு செய்ய வேண்டும்.
  2. குடியிருப்பு மன்றம் சுய உதவிக் குழுவிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை செயற்குழு கூட்டத்தில் வைத்து விவாதிக்க வேண்டும்.
தகவல் மூலம்:  தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை