![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN6LmK8em8yi1n6DEg5D200keg62h5UAVycqYkSg04neq7bNhj4jpupfyaZEW1mmD0ULRkR21PBgc5Sdgm56sfbswl4NrKZ7hz8x_eMqrqD5FtoxSWqaqEyZ-zYFYrzlvjs-Uq9FTwKXQ/s320/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81.jpg)
பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள முடிவுகளைக் கண்காணித்தல்
- பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.
- கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகளின் அடிப்படையில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதை கவனித்தல்.
- சமூக தணிக்கைக் குழுவின் விவாத பொருள் / அறிக்கை உரிய ஆதாங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.
- பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெரும்பான்மையான அளவிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதா என சரிபார்த்தல்.
- விவாதப் பொருள் அனைத்தும் கூட்டத்தின் கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.
- துணைக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைக் கண்காணித்தல்.
குழு அமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் துணைக்குழு
- சுய உதவிக் குழு இணையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மற்றும்
ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு புதிய குழுக்கள்
அமைக்க வேண்டும்.
- அனைத்துக் குழு உறுப்பினர்களும் உரிய காலத்தில் பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
- வலுவிழந்த / செயல்படாத குழுக்களின் எண்ணிக்கை, செயல்படாததற்கான காரணம்
மற்றும் தீர்வு மேற்கொள்ளப்பட்டதற்கான விவரங்களை வைத்து அக்குழுக்களை
இயங்கச் செய்ய வேண்டும்.
செயற்குழு உறுப்பினர்களின் பணிகள்
- கண்காணித்தல் பணியை பொதுவாக பொறுப்பாளர்களைக் கொண்டு மேற்கொள்ளச் செய்ய
வேண்டும். பொறுப்பாளர்கள் முறையாக பிற அமைப்புகளை கண்காணித்து அறிவுரைகள்
வழங்கிய விவரத்தினை செயற்குழுவில் பதிவு செய்ய வேண்டும்.
- குடியிருப்பு மன்றம் சுய உதவிக் குழுவிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை செயற்குழு கூட்டத்தில் வைத்து விவாதிக்க வேண்டும்.
தகவல் மூலம்: தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
No comments:
Post a Comment