FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, September 14, 2013

வங்கி நேரடிக் கடன்

வங்கி நேரடிக் கடன் (Bank Direct Linkage)
விளக்கம்: மானியம் எதுவும் இல்லாமல் வங்கிகள் நேரடியாகவே சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கித் திரும்ப பெறுதலையே வங்கி நேரடிக் கடன் என்கிறோம்.
நேரடிக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள்:
  1. தரம்பிரித்தல் முடிந்தவுடன் தரம்பிரித்தல் படிவத்துடன் வங்கியை அணுகி கடன் பெறலாம்.
  2. குழுவின் சேமிப்பின் மடங்குகளின் அடிப்படையில் கடன் தொகை கிடைக்கும்.
  3. தரம் பிரித்தல் முடித்த பிறகு
    முதல் கடன் ரூ. 50,000/-
    2-ம் கடன் ரூ. 1,00,000/-
    3-ம் கடன் ரூ. 1,50,000/-
    4-ம் மற்றும் அதற்கு மேல் கடன் – குழுவின் தேவைக்கேற்ப என்ற அடிப்படையில் குறைந்தபட்சக் கடனாக வங்கிகள் வழங்க வேண்டும்.
  4. வங்கிக் கடன் பெறுவதற்கு குழுவின் தீர்மானம் முக்கியத் தேவையாகும்.
நேரடிக் கடனைப் பயன்படுத்தும் முறைகள் மற்றும் திருப்புச் செலுத்தும் முறை:
  1. நேரடிக் கடனை உறுப்பினர்கள் நுகர்வுச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.
  2. ஒவ்வொரு உறுப்பினரும் செய்ய விரும்பும் / செய்யும் தொழிலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
  3. பெரும்பாலும் குறுகிய கால முறைக் கடன்களாக வழங்கப்படுகின்றன.
  4. நேரடிக் கடன் மூலம் பெற்ற தொகையை, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்க முடியும்.
  5. வங்கி நிர்ணயித்துக் கொடுக்கும் வட்டியின் அளவுக்கோ அல்லது கூடுதலாக ஒரு சதவீத வட்டியைச் சேர்த்தோ உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கலாம்.
  6. குழு உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்து விட்டு வசூல் செய்யும் போது அசலுடன் குறிப்பிட்ட வட்டியையும் சேர்த்தே வசூலிக்க வேண்டும்.
  7. வட்டி வசூல் செய்யாமல் அசலை மட்டும் வசூல் செய்து, திரும்பச் செலுத்தினால் பிறகு வட்டிக் கணக்கிற்கு தொகையைச் செலுத்த குழு சேமிப்புக் கணக்கில் எடுத்துச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். இதனைத் தவிர்க்க வட்டியை முறையாக, சரியாகக் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும்.
சுழல் நிதி (Revolving Fund)
விளக்கம்: சுழல்நிதி என்பது சுய உதவிக் குழுக்களின் தொகுப்பு நிதியை மேம்படுத்தவும், நிதி மேலாண்மை, கடன் மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தவும் அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தொகையாகும். அரசால் வழங்கப்படும் ரூ. 10,000/- தொகையுடன் வங்கிகள் தங்கள் பங்குக்கும் கடனாக குறைந்தபட்சம் ரூ. 50,000/- சேர்த்து வழங்குகின்றன. சுழல்நிதிக் கடன் வசதி ரொக்கக் கடனாக சுய உதவிக் குழுக்கள் நிரந்தரமாகப் பயன்படுத்தும் வசதியாகும்.
குழுக்கள் இந்நிதியிலிருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்கு மிகாமல் கடன் பெற்றுக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு முறையும் கடன் பெற்று திரும்பச் செலுத்திவிட்டு அக்கடன் கணக்கிலேயே தொடர்ந்து கடன் பெறலாம். இதனால் தான் இக்கடன் நிதி “சுழல் நிதி”என அழைக்கப்படுகிறது.
சுழல் நிதியைப் பயன்படுத்தும் முறைகள்:
  1. சுழல் நிதி ரொக்கக் கடன் கணக்காக வழங்கப்படுவதால், ஒரு முறை கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தியவுடன் கடன் கணக்கை முடித்துக் கொள்ளக் கூடாது.
  2. குழுவின் ஆயுள் காலம் வரைக்கும், மீண்டும் மீண்டும் மறுகடன் முறையில் பயன்படுத்த வேண்டும்.
  3. பெற்றகடன் தொகை முழுவதும் செலுத்துவதற்கு முன்னரே தேவையின் அடிப்படையில் கட்டிய தொகையின் அளவில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.
  4. அரசு வழங்கிய மானியத் தொகை ரூ. 10,000 /- த்திற்கு வங்கிகள் வட்டி ஏதும் எச்சூழலிலும் வசூலிக்கக் கூடாது.
  5. சுழல் நிதியை குழுவின் பொது நிதியுடன் ஒன்றாகச் சேர்த்தும் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கலாம்.
  6. சுழல் நிதிக் கணக்கை, குறுகிய காலக் கடனாகக் கணக்கிடக் கூடாது.
  7. சுழல் நிதி மானியத்தினை சுய உதவிக் குழுக்கள் முன்பு பெற்ற கடனுக்காக ஈடு செய்யக் கூடாது.
  8. சுழல் நிதி மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு வட்டித் தொகையுடன் சேர்த்தே அசல் வசூலிக்கப்பட வேண்டும்.
  9. சுழல் நிதி மானியத்தைப் பெற்ற உடனே குழு உறுப்பினர்கள் அதைப் பிரித்து வைத்துக் கொள்ளக் கூடாது.
  10. சுழல் நிதிக் கணக்கிற்கு என குழுவில் தனியாக கணக்கு பராமரிக்கப்பட வேண்டும்.
தகவல் மூலம் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

No comments:

Post a Comment