- சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான நிதியினைத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. இத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்கள் நுண் நிதி நிறுவனங்கள் என அழைக்கப்படுகிறது.
நுண் நிதியின் முக்கியத்துவம்
- சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை ஊக்கப்படுத்திட
- கூட்டமைப்பின் பொதுநிதியினை அதிகரித்திட
- உள்கடன் வாய்ப்புகளை அதிகரித்திட
- உறுப்பினர்களின் சிறுகடன் / பெருங்கடன் தேவைகளைப் பூர்த்தி செய்திட
- கூட்டமைப்பில் நிதிகையாளும் திறனை மேம்படுத்தி, முன் உதாரணமாகச் செயல்படுத்திட
நுண் கடன் பெறுவதில் நன்மைகள்:
- நுண் நிதி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் கடன் திரும்பச் செலுத்தும் அட்டவணையானது மிகவும் குறுகிய கால வரையறைக்குட்பட்டது
- அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களைத் தவிர நேரிடையாக, நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்
- கடன் வழங்கும் முறை மிக எளிதாக இருக்கும்.
- கடன் தேவைக்கு அடமானம் ஏதும் தேவையில்லை.
- ஒரு சில நிறுவனங்கள் நேரடியாகவே உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது.
- அரசுடமையாக்கப்பட்ட வங்களின் வட்டி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்.
- நுண் நிதி நிறுவனங்கள் நேரிடையாக, சமுதாய சார்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழு/ கூட்டமைப்புடன் நேரடித் தொடர்பு.
- நுண் நிதி மூலம் பெறப்படும் நிதி பெறுவதற்கான நடைமுறைச் செலவினமானது, நிதி பெறுபவருக்கும், நிதி அளிக்கப்படுபவருக்கும் மிகவும் குறைவு.
- நுண் நிதி தொடர்பு, ஒரு குழுவை, கூட்டமைப்பினை மட்டும் சார்ந்திருத்தல்
நுண் கடன் மூலம் ஏற்படும் தீமைகள்
- சுய உதவிக் குழு / கூட்டமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படாமை
- மகளிர் முன்னேற்றத்தினை விட நிதி பரிமாற்றத்திற்கே முக்கியத்துவம் தரப்படும்
- அதிகப்படியான வட்டி
- கடன் திருப்பிச் செலுத்தும் முறையானது வாரம், 15 தினங்களுக்கு 1 முறை, மாதம் ஒரு முறை சேமிப்பை பற்றிய விழிப்புணர்வு குறைந்து காணப்படுதல்
- மறைமுகமான வட்டி விகிதம் / வட்டி நிர்ணயம் (உணம்) நுழைவுக்கட்டணம், வட்டி காலதாமத்திற்கான அதிக வட்டி, விண்ணப்ப பரிசிலனைக் கட்டணம் மற்றும் இதர
- நுண் நிதி மூலம் பெறப்படும் கடன் பெரும்பாலும், கடன் பெறுபவரின் சுய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
- சுய உதவிக் குழு / கூட்டமைப்பினை பொருளாதார ரீதியாக, தன்னிறைவு அடையச் செய்வதற்கு முக்கியத்துவம்
- நிதிப்பயன்பாட்டினை கண்காணிப்பு செய்வதில் குறைபாடு.
தகவல் மூலம் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
No comments:
Post a Comment