FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, September 25, 2013

பிற சேமிப்பும் குழு சேமிப்பும்

பிற சேமிப்புகளில் உள்ள குறைபாடுகள் :
பிற சேமிப்பு எனும் போது, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு, பாத்திரச் சீட்டு, நகை சீட்டு என வகைப்படுத்தலாம். உறவினர்களிடம் கொடுத்து வைத்தல் நண்பர்களிடம் சேமித்தல் போன்ற பல வகை உள்ளது. இது போன்ற சேமிப்புகளில் உள்ள சிரமங்கள்
  • பிற சேமிப்புகளில் நம்பிக்கையும், நாணயம் மிகக் குறைவே.
  • நினைக்கும் போதோ, தேவைப்படும் போதோ பணம் பெறுவது மிக அரிது.
  • ஏல சீட்டுகள் கட்டுபவர் ஏலம் தள்ளி எடுக்கும் போது கட்டியதைவிட குறைவாக பணம் கிடைக்கலாம்.
  • இறுதியில், ஏலச்சீட்டியில் அல்லது குலுக்கல் சீட்டில் பணம் பெறத்
  • தகிதியானவர்க்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் போகலாம்.
  • லாபம் மற்றும் பயன்கள் யாவும் சீட்டு பிடிப்பவரையே சாரும்.
  • சீட்டு பிடிப்பவர் நட்டத்திற்கு உள்ளாகி, தலைமறைவாகும் சூழ்நிலையில் பணம் இழப்பு ஏற்படலாம்.
  • பிற சேமிப்பில், பாதுகாப்பின்மை அதிகம். அதேநேரம் நிதி நிலைமை யாருக்கும் தெரியாது.
  • வீட்டில் சேமிக்கும் போது, திருட்டு பயம் இருக்கும், யாரும் கேட்டால் கொடுக்கும் மனப்பான்மை ஏற்படலாம்.
  • தனிப்பட்ட முறையில் சேமிக்கும் போது, கட்டயமாக சேமிக்கும் நிர்பந்தம் குறைவு.
  • பிற சேமிப்பில், ஆர்வம், போட்டி மனப்பான்மை குறைவாக இருக்கும்.

குழுவாக சேமிப்பதால் உள்ள நன்மைகள்:

  • குழு உறுப்பினர்களை ஒன்றாக இணைப்பதே சேமிப்பு.
  • குழுவில் சேமிப்பதால் பாதுகாப்பு.
  • பணம் தனி நபரிடம் இல்லாமல் அனைவரிடமும் பத்திரமாக இருக்கும்.
  • யாரும் எடுக்கவோ, கொண்டு செல்லவோ இயலாது.
  • அனைவரும் சேமிப்பதால் நாட்டமுடன் சேமிக்க கற்றுக் கொள்வர்.
  • குழுவில் சேமிப்பதால், எல்லோரும் சேமிக்கும் போது நாமும் சேமிப்போம் – என்ற கட்டாயம், ஒரு உந்துதல் உண்டாகிறது.
  • எப்போது அவசியத் தேவையோ அப்போது பணத்தை உடனே பெறலாம்.
  • உறுப்பினர்களிடம் ஒற்றுமை வளரும்.
  • குழுவில் சேமிப்பதால் பலரது சேமிப்பும் சேர்ந்து ஒரு பெரிய தொகையாக சேர வாய்ப்பாகும்.
  • குழு சேமிப்பு தொகையை வைத்து வங்கியில் கடன் பெறலாம்.
  • குழுவில் சேமிப்பதால் லாபம், பணப்பெருக்கம் யாவும் குழுவுக்கே கிடைக்கும்.
  • குழுவில் சேமிப்பதால் குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது.

குழு சேமிப்பில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் :
  • குழுக் கூட்டத்தின் போது மட்டுமே சேமிப்பு தொகையை செலுத்த வேண்டும்.
  • உறுப்பினர்கள் விரும்பும் தொகையை சேமிப்பாக செலுத்தலாம்.
  • சேமிப்பினை செலுத்தியவுடன் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • உறுப்பினர்கள் பாஸ்புத்தகத்திலும் பதிவு செய்து பெற வேண்டும்.

உள் கடன் (சங்கக் கடன்) :


சுய உதவிக்குழுவில் சேமித்த பணத்தை அவ்வப்போது வங்கியில் இருந்து எடுத்து, தேவையானவர்களுக்கு முன்னுரிமையின் பேரில் வழங்கும் கடனே உள்கடன் அல்லது சங்கக் கடன்.

இந்த உள்கடன் வழங்குவதற்கும் வழிமுறைகள் உள்ளது. அதே போன்று உரிய தேவைக்கு மட்டுமே கடன். அந்த கடனுக்கு குழுக்கள் மூலமாக நிர்ணயிக்கும் வட்டியே உள்கடன் வட்டி. இந்த வட்டி முழுவதும் குழுவிற்கே சேரும்.

உள் கடன் வழங்க வழிமுறைகள்:
  • உறுப்பினர்கள் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் இருக்க உள்கடன் மிகவும் உபயோகமானது. எனவே சேமிப்புத் தொகையை வங்கியில் சேர்த்து வைக்காது உள்கடன் வழங்க வேண்டும்.
  • குழு ஆரம்பித்து மூன்று மாதங்கள் கழித்து குழு சேமிப்பில் இருந்து. தேவைக்கேற்ப உள்கடன் வழங்கலாம்.
  • ஆரம்ப கால கட்டத்தில் ரூ.500/= வரை உள்கடனாக வழங்கலாம்.
  • குழு உறுப்பினர்களின் கடன் தேவை நியாயமானதாகவும், தொழில் மேம்பாட்டுக்காகவும் இருத்தல் வேண்டும்.
  • ஆரம்பத்தில் குறைந்த தவணையில் திருப்பி செலுத்தப்படும் கடனாக வழங்குவது சிறந்த ஓன்று.
  • அதிகமான கடன் தொகை வழங்க வேண்டுமெனில் குழுதான் தீர்மானிக்க வேண்டும்.
  • கடன் தொகைக்கு ஏற்ப தவணைக் காலம் அதிகப்படுத்தப்பட வேண்டும்.
  • குழு உறுப்பினர்கள் மட்டுமே கடன் தொகையைப் பயன்படுத்த வேண்டும்.
  • கடன் பெறும் உறுப்பினரின் நிலை, தகுதி யாவும் அறிந்தே கடன் வழங்க வேண்டும்.
  • உறுப்பினர் திரும்ப செலுத்தும் தகுதியை அறியாது வழங்கினால், வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி உள்கடன் செலுத்தும் சூழல் உருவாகும்.
  • கடன் தேவைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபட வேண்டும். உதரணமாக, அவசரத் தேவைகளான கல்வி செலவு,  மருந்துவச் செலவு, பிரவசச் செலவு,  இறப்புச் செலவு போன்றவற்றிற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம்.
  • ஒரு உறுப்பினர்க்கு, கடன் நிலுவையில் இருக்கும் போது மீண்டும் கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை விபரம் குழுக்கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் வழங்கப்பட வேண்டும்.
  • குழு உறுப்பினர்களின் உள்கடன் நிலுவையினைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • முக்கியமான எல்லாக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், தவறாமல் சேமிக்கும் உறுப்பினர்கள் கடன் பெற தகுதியானவர்கள்.
  • வழங்கப்படும் கடன் பற்றிய விபரம் யாவும் தீர்மானப் புத்தகத்தில் எழுதப்பட வேண்டும்.
  • கடன் கேட்கும் உறுப்பினர்கள் எந்த தேவைக்காக கேட்கிறார்களோ அதற்கே அத்தொகையைப் பயன்படுத்த வேண்டும்.
  • உள்கடன் (சங்கக் கடன் ) ஆபத்து காலங்களில் பெரிதும் உதவும். அதை முறையாக பயன்படுத்த வேண்டும்.
  • கடன் பெறும்போது, திரும்ப செலுத்தும் போதும் உறுப்பினர் பாஸ்புத்தகத்தில் பதிவு செய்து பெற வேண்டும்.
  • உறுப்பினர்கள் உள்கடன் திரும்ப செலுத்தும் போது, அசலுடன், வட்டியும் சேர்த்து தவணை தவறாமல் கண்ணியமாய் திரும்பச் செலுத்தி ரசீதினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

No comments:

Post a Comment