சுய உதவிக் குழுக்களை - கண்காணித்தல் வழிமுறைகள்:
ஒர் அமைப்பானது /
நிறுவனமானது பல்வேறு செயல் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தும் போது
அச்செயல்பாடுகளை தொடர் கண்காணித்து வழிப்படுத்தும் போதுதான்
அச்செயல்பாட்டினால் நல்ல முறையில் விளைவுகள் / பயன்கள் ஏற்படுகிறது.
கண்காணிப்பதற்கான கீழ்வரும் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தலாம்:
1. அறிக்கைகள் பெறுதல்.
2. களப்பார்வை
3. இடைநிலை மதிப்பீடு
4. ஆய்வுகள்
5. ஆவணப்படுத்துதல்
2. களப்பார்வை
3. இடைநிலை மதிப்பீடு
4. ஆய்வுகள்
5. ஆவணப்படுத்துதல்
கண்காணித்தலின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- குடியிருப்பு மன்ற அளவில் தகுதி உள்ள அனைத்துக் குழுக்களும் குடியிருப்பு மன்றத்தில் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல்
- குடியிருப்பு மன்ற செயல்பாடுகள் இலட்சியம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் செயல்படுவதை தொலை நோக்குப் பார்வையுடன் கண்காணித்தல்
- கூட்டமைப்பின் நோக்கங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடு குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்தல்
- நிறைவேற்றப்பட்டுள்ள செயல்பாடு வரையறுக்கப்பட்டுள்ள இலக்கு மக்களை சென்றடைந்தவற்றை உற்று கவனித்தல்
- வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளின் அடிப்படையில் நிறை குறைகளை ஆராய்ந்து ஆய்வின் அடிப்படையில் குறை இருப்பின் தக்க ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுதல்
- புதிய குழுக்கள் அமைத்தல் மற்றும் நலிவுற்றக் குழுக்களை வலுப்படுத்துதல் பற்றிய விபரங்கள் உள்ளாதா என கண்காணித்தல்
- அனைத்துக் குழுக்களுக்கும் பயிற்சி, தரம் பிரித்தல், வங்கிக் கடன் இணைப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய பட்டியல் சரிபார்த்தல்
- சுய உதவிக் குழுக்களிலிருந்து பெறப்பட்ட கடன் மனுக்களை உரிய முறையில் பெறப்பட்டுள்ளதா என அறிதல்
- குடியிருப்பு மன்ற அளவிலான மாதாந்திர அறிக்கை கூட்டமைப்பிற்கு முறையாக அனுப்பப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்தல்
- கூட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் / தீர்மானங்கள் குழுக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தல்.
- குடியிருப்பு வாரியாக தொழில் செய்திட வளங்களை வரிசைப்படுத்தி அடையாளம் கண்டறிந்தவற்றை கண்காணித்தல்
- அனைத்து குழுக்களின் உறுப்பினர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதை குடியிருப்பு நிர்வாகிகள் உதவியுடன் கண்காணித்தல்
- குழுக்கள் பெற்ற கடன் தொகையை தவணை தவறாமல் திரும்பச் செலுத்துவதை தொடர் கண்காணிப்பு செய்தல்
- குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முறையான விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை கண்காணித்தல்.
தகவல் மூலம்: தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
No comments:
Post a Comment