FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 26, 2017

செவித்திறன் பாதித்த ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பு

24.01.2017
செவித்திறன் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செவித்திறன் குறைபாடு 60 டெசிபல் மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பாக்கப்படுகிறது. இதுவரை அனைத்து ஊழியர்களுக்கும் பயணப் படியாக மாதந்தோறும் ரூ.1,600 வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சுகாதாரத்துறையின் பரிந்துரையின்பேரில் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயணப் படியை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செவித்திறன் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படியாக மாதந்தோறும் ரூ.3,200 வழங்கப்படும்.

முழுமையாக காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என அந்த அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. தமிழ்நாடு அரசு செவித்திறன் 69% பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயணப் படியை ஏதேனும் அரசு ஆனை இருக்கிறதா

    ReplyDelete