FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, October 8, 2017

’காது கேளாவதர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்க வேண்டும்’ -கேரள இளைஞர் கோரிக்கை

07.10.2017
காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கவும், சம உரிமையை அளிக்கவும் வலியுறுத்தி, இந்தியா முழுவதும் இரு சக்கர வாகனத்தில் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வரும் கேரள இளைஞர் சினான் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று கோவை வந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காது கேளாத, வாய் பேச இயலாதவர்கள் தங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி, நீண்ட நாள்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போராடி வருகின்றனர். பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கவும், சம உரிமை அளிக்க வலியுறுத்தியும் இந்தியா, பூட்டான்,நேபாள் ஆகிய மூன்று நாடுகளில் 16,000 கிலோ மீட்டர் தூரத்தை தனது இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியுள்ளார் சினான் என்ற கேரள இளைஞர். இவர் தனது பயணத்தை ஜீலை மாதம் 13-ம் தேதியன்று கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, செப்டம்பர் மாதம் 25-ம் தேதி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இந்நிலையில், பூட்டான், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று காது கேட்காத வாய் பேசமுடியாதவர்களுக்கான உரிமையை மீட்டெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தியதால் இவரது பயணம் வெற்றிப் பயணமாக அமைந்ததுள்ளதாக சினான் தெரிவித்தார்.

தனது பயணத்தை முடித்துவிட்டு சினான் இன்று கோவை வந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சினான் உறவினர், 'கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியா, நேபால், பூட்டான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சியான் இந்தியா முழுவதும் உள்ள காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும், எங்களாலும் மற்றவர்கள் போல் வாகனங்கள் ஓட்ட இயலும் என்பதை தெரியப்படுத்துவதற்காகவே இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தப்பயணத்தின் போது வாய் பேசமுடியாத , காது கேட்காத அமைப்பின் சார்பாக உதவிகள் கிடைத்ததாகவும், கண்ணாடி பார்த்து தன்னால் சிறப்பாக வண்டி ஓட்ட முடிந்ததாகவும் குறிப்பிட்டார். பயணத்தின்போது எந்த விபத்தும் இல்லாமல் வண்டி ஓட்டமுடிந்ததாகவும், அனைத்து வாய் பேசமுடியாதவர்கள் மற்றும் காது கேளாவதர்களுக்குச் சம உரிமை வழங்குவதோடு, ஓட்டுநர் உரிமைத்தை வழங்க நடவடிக்கை எடுக்க தமிழகம் உட்பட சில மாநிலங்கள் முன் வர வேண்டும்' என்றார்.

1 comment: