12.12.2017, துறையூர் அருகே பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர் ஒருவர் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறார். திருச்சி மாவட்டம் துறையூர் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் காமராஜ் என்பவர் மகனான மணிகண்டன் பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாதவர். தளகட போட்டிகளில் ஆர்வம் கொண்ட மணிகண்டன், அதில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ந.ரமேஷ்பாபு அவர்கள் மணிகண்டனின் மீது தீவிரமாக உதவி செய்தார். ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் கடந்த 1 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை நடந்த இந்திய காது கேளாதோர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தார். திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம் கடும் உழைப்பால் அவன் வெற்றி பெற்றுள்ளான்.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவில் நடைபெற உள்ள காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் ஒலிம்பிக் (DEAF OLYMPIC) போட்டிகளில் இந்தியா சார்பில் மணிகண்டன் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment