26.11.2017
வாழப்பாடி: மாற்றுத்திறனாளி மாணவர்கள் போல் நடித்து, அதிகாரிகளின் மொபைல்களை திருடிய இருவர் சிக்கினர். அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி ஒன்றிய அலுவலகங்களுக்கு, நேற்று முன்தினம், இருவர் சென்றனர். அவர்கள், வாய்பேச முடியாதவர்கள் போல் நடித்து, 'கல்லூரியில் படிக்கிறோம். ஏதாவது உதவி செய்யுங்கள்' எனும் வாசகத்தை காட்டி, உதவி கேட்டுள்ளனர். திடீரென, அங்கிருந்த பணியாளர்களின் விலை உயர்ந்த மொபைலை திருடிக்கொண்டு மாயமாகினர். இதனால், சுதாரித்துக்கொண்ட அலுவலர்கள், மற்ற ஒன்றிய அலுவலகங்களுக்கு, இதுபோல் வரும் நபர்களை கண்காணிக்க அறிவுறுத்தினர். நேற்று காலை, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில், மொபைல் திருட முயன்றபோது, அவர்கள் கையும் களவுமாக சிக்கினர். அவர்களை பிடித்த ஊழியர்கள், வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம், நரிப்பட்டியைச் சேர்ந்த சண்முகம், 40, முருகன், 45, என்பதும், சேலம் அருகே, சின்னப்பம்பட்டியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகள் போல் நடித்து, பல்வேறு இடங்களில் மோசடி செய்தது உறுதியானது. அவர்களிடமிருந்து, போலி ஆவணங்கள் மற்றும் அரசு முத்திரை கட்டைகளை, போலீசார் கைப்பற்றினர்.
No comments:
Post a Comment