FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, December 21, 2017

ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை ஷமிகா பர்வீன்!

திருநெல்வேலி(18 டிச 2017): அமெரிக்காவில் நடைபெறும் ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீராங்கனை ஷமிகா பர்வீன்(14) தகுதி பெற்றுள்ளார்.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முஜீப் .இவருடைய மனைவி ஸலாமத். இவர்களுக்கு ஒரே மகள் ஷமிகா பர்வீன். 14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு பிறவியிலேயே காது கேட்காது. இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.குறிப்பாக தடகளப் போட்டிகளில் பங்குபெற்று பல வெற்றிகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில்கடந்த டிசம்பர் 1ந் தேதி முதல் 6ந் தேதி வரை ஜார்கென்ட் மாநிலத்தில் நடைபெற்ற தடகள போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு தங்க பதக்கத்தையும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கத்தையும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளார். அதன் பின்பு நடைபெற்ற காது கேளாதோர் பிரிவில் தேசிய அளவில் ஜார்கென்ட் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றும் தங்க மெடல் வாங்கியும் புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஜுனியர் ஒலிம்பிக் போட்டியில் தேர்வாகி உள்ளார்.

ஷமிகா பர்வீனை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வாழ்த்தினார்.

No comments:

Post a Comment