26.12.2017
மதுரை;‛‛மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு பேச்சு பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது,'' என, காது மூக்கு தொண்டை துறை தலைவர் தினகரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தென்தமிழகத்தில் இம்மருத்துவமனையில் பிறவியில் முற்றிலும் காது கேளாத, வாய் பேசாத 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 7 லட்ச ரூபாயில் உட்செவியில் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முதல்வர் காப்பீடு திட்டத்தில் நடந்தது. இதில் 61 குழந்தைகள் பயன்பெற்றனர். இதில் 50 குழந்தைகள் நல்ல நிலையில் காதுகேட்டு பேசுகின்றனர். காதுகேளாத குழந்தைகளுக்கு சிறப்பு பேச்சு பயிற்சி அளிப்பதற்காக காது மூக்கு தொண்டை பிரிவில் பயிற்சி மையம் ஏற்படுத்தியுள்ளோம். அனைத்து சிறப்பு பரிசோதனை, அறுவை சிகிச்சை, சிறப்பு பேச்சு பயிற்சி அளித்து ஒருங்கிணைந்த உட்செவியில் கருவி பொருத்தும் மையமாக செயல்படும், என்றார்.
No comments:
Post a Comment