FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, May 9, 2018

மருத்துவ சான்றிதழ் வாங்கச் சென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவமதிப்பு அரசு டாக்டர் மீது போலீசில் புகார்


திருச்சி, மே 8: மருத்துவ சான்றிதழ் வாங்கச் சென்ற மாற்றுத்திறனாளிகளை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச்சேர்ந்தவர் ராஜேந்திரன்(41). வாய் பேசமுடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி. இவரது மகள் லில்லிபுஷ்பம்(17). இவரும் அதே குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை ரயில் பாஸ் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இதனால் கடந்த 4ம் தேதி வெள்ளிக்கிழமை ராஜேந்திரன் தனது மகள் லில்லி புஷ்பம், அருகில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு காதுமூக்குதொண்டை பிரிவுக்கு சென்று மருத்துவர் பழனிசாமியை பார்த்து சான்றிதழ் கேட்டனர்.

ஆனால் மருத்துவர் பழனிசாமி சான்றிதழ் தரமறுத்து, அவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கேட்டுக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி, மருத்துவரிடம் தரைக்குறைவாக பேசவேண்டாம் என சொன்னதற்கு, அவரையும் மருத்துவர் திட்டி அனுப்பியுள்ளார். இந்நிலையில் இதை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் கோபிநாத், பொருளாளர் புஷ்பநாதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளை அழைத்துக்கொண்டு நேற்று காலை மருத்துவ மனை டீன் அனிதாவை சந்தித்து புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட டீன், துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து, வேறு மருத்துவர் மூலம் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிடவும் நடவடிக்கை எடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் ஜிஹெச் காவல்நிலையத்தில் மருத்துவர் பழனிசாமி மீது ராஜேந் திரன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பெரும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment