FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, February 18, 2019

விஸ்வரூப விஷ்ணுராம்


திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் விஷ்ணுராம். பிறவியிலேயே செவித்திறன், பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டவர்.

ஆனால், கூடைப்பந்து விளையாட்டில் தேசிய அளவில் பதக்கம் வென்று சாதித்திருக்கிறார்.

விஷ்ணுராமின் வளர்ச்சியில், அவரது தந்தையும் கூடைப்பந்து பயிற்சியாளருமான ரமேஷ்பாபுவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

அவர் தனது மகனின் கூடைப்பந்து பயணம் பற்றிக் கூறியதாவது...

என் வழியில்...

‘‘நான் மாநில அளவிலான முன்னாள் கூடைப்பந்து வீரன். அந்நாட்களில் நான், சிறந்த வீரர் விருது எல்லாம் பெற்றிருக்கிறேன்.

என் மூத்த மகனான விஷ்ணுராம், தனது உடற்குறைபாடு காரணமாக முடங்கிப் போய்விடக் கூடாது என்பது என் எண்ணம். எனவே அவருக்கு கூடைப்பந்து விளையாட்டில் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். அவரும் கடுமையாக உழைத்து இந்த விளையாட்டில் தன்னை உயர்த்திக் கொண்டார்.

விஷ்ணுராம் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவரை தினமும் காலையில் எங்கள் ஊரான பட்டிவீரன்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு வரை 8 கி.மீ. தூரம் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுத்துவேன். கூடைப்பந்து பயிற்சியுடன், நான் விளையாடச் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவரையும் அழைத்துச் சென்று பார்க்க வைப்பேன்.

முதல் போட்டி

விஷ்ணுராம் எட்டாம் வகுப்பு படிக்கையில் பள்ளிகளுக்கு இடையிலான வட்டார அளவிலான கூடைப்பந்து போட்டியில் முதன்முதலாகப் பங்கேற்றார். அதில் தனது அணி பெற்ற 41 புள்ளிகளில் 37 புள்ளிகளை தானே பெற்றுக் கொடுத்தார்.

விரைவிலேயே வழக்கமான தமிழக 14 வயதுக்கு உட்பட்டோர் அணிக்குத் தேர்வாகி, சத்தீஸ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றார். அதன் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி தோல்வியுற்றாலும், விஷ்ணுராமுக்கு சிறந்த வீரர் விருது கிடைத்தது. தொடர்ந்து வழக்கமான தமிழக கூடைப்பந்து அணியில் நான்கு ஆண்டுகள் ஆடினார்.

கேப்டன் ஆனபோதும்...

கடந்த 2016-ம் ஆண்டு இந்திய காது கேளாதோர் கூடைப்பந்து அணிக்கான தேர்வு புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது, அணியின் கேப்டனாக விஷ்ணுராம் அறிவிக்கப்பட்டார். ஆனால், ஜப்பான் செல்லவிருந்த இந்திய அணியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.

ஆனால் இதுபோன்ற பின்னடைவுகள் விஷ்ணுராமை சோர்வடையச் செய்ததில்லை. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற காது கேளாதோருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் புதுச்சேரி அணி சார்பில் ஆடிய விஷ்ணுராம், அந்த அணியை வெல்ல வைத்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற அகில இந்தியப் போட்டியில் புதுச்சேரி அணி வீரராக விஷ்ணுராமும், அந்த அணி மேலாளராக நானும் பங்கேற்றோம்.

அத்தொடரின் இறுதிப்போட்டியில் புதுச்சேரியும் கர்நாடகமும் மோதின. அதில் 63- 31 என்ற புள்ளிக் கணக்கில் புதுச்சேரி வென்றது. அதில் விஷ்ணுராமின் பங்கு மட்டும் 43 புள்ளிகள்.

சமீப வெற்றி

காது கேளாதோருக்கான தேசிய சீனியர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழக காது கேளாதோர் கூடைப்பந்து அணிக்கு அடையாறில் உள்ள புனித லூயிஸ் காது கேளாதோர் சிறப்புக் கல்லூரியில் நான் பயிற்சி அளித்தேன்.

அதில், விஷ்ணுராம் உள்ளிட்ட தமிழக அணியினர் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று, தங்களை சிறப்பாகத் தயார்படுத்திக் கொண்டனர். அதை சென்னை போட்டியில் வெளிப்படுத்தினர்.

இந்த தேசியப் போட்டியில் தமிழகத்துடன், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா ஆகிய அணிகள் விளையாடின. ஆரம்பம் முதலே நன்றாக விளையாடிவந்த தமிழக அணி, இறுதி ஆட்டத்தில் கர்நாடகத்தை எதிர்கொண்டது.

அந்த அணியை 57- 22 என்ற புள்ளிக் கணக்கில் தமிழகம் வென்று வாகை சூடியது. தமிழக அணி பெற்ற புள்ளிகளில், 43 புள்ளிகளை விஷ்ணுராமே திரட்டிக் கொடுத்தார்.

இந்திய அணிக்குத் தேர்வு

வருகிற மே மாதம் இத்தாலியில் நடைபெறும் கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஆடும் இந்திய அணிக்கு விஷ்ணுராம் தேர்வாகி உள்ளார். அவருக்குத் தேவையான பொருளாதார உதவியை நமது அரசும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் வழங்க வேண்டும்” என்றார்.

கடந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த விஷ்ணுராம், ஒரு தனியார் நிறுவனத்தில் கணினிப் படிப்பு படித்தபடி கூடைப்பந்து விளையாட்டைத் தொடர்கிறார். இவரது பயணத்தில் தந்தையுடன், பயிற்சியாளர் கலைச்செல்வனும் உறுதுணையாக உள்ளார்.

அண்ணனைப் பின்பற்றும் தம்பி

விஷ்ணுராம் வழியில் அவரது தம்பி தனுஷ்ராமும் கூடைப்பந்து விளையாட்டில் வளர்ந்து வருகிறார். நெய்வேலி பழுப்புநிலக்கரி கழகப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் அவர், கடந்த மாதம் சத்தீஸ்காரில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றார்.

விஷ்ணுராமின் தாய் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். ஆனாலும் தமது மகன்களுக்கு தன்னாலான ஆதரவை அளித்து வருகிறார்.

சிரமங்களைத் தாண்டி சிகரங்களைத் தொட முயலும் விஷ்ணுராமும் தனுஷ்ராமும் ‘கூடை கூடையாய்’ வெற்றிகளை குவிக்கட்டும்.

No comments:

Post a Comment