FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, February 11, 2019

குழந்தையின் காதுகேட்புக் கருவியை திருடிச்சென்ற திருடர்கள்! - பரிதாபத்தில் பெற்றோர்

08.02.2019
கேரள மாநிலம் கண்ணுரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரின் 2 வயது மகள் நித்யா. இந்தக் குழந்தைக்கு பிறவியில் இருந்தே காது கேட்காது. ராஜேஷ், தினக் கூலி. பெற்றோருக்கு, தங்கள் குழந்தையின் மழலைப் பேச்சை கேட்க ஆசையில்லாமல் இருக்குமா. குழந்தை நித்யாவுக்கு பேச்சு வரவழைக்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுவருகின்றனர். கடனை வாங்கி குழந்தைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள காது கேட்புக் கருவியை கஷ்டப்பட்டு வாங்கினர். அதுவும், கடந்த 4 மாதங்களுக்கு முன்தான் வாங்கியுள்ளனர். கருவியை மாட்டிய பிறகு குழந்தை நித்யாவுக்கு ஓரளவுக்கு பேச்சு கேட்கத் தொடங்கியது. குழந்தை தட்டித் தடுமாறி பேசவும் செய்தது. இதனால், பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கண்ணூரில் இருந்து கோழிக்கோட்டுக்கு சென்னை ரயிலில் தாயாருடன் நித்யா சென்றபோது, திருடர்கள் குழந்தையின் காது கேட்புக் கருவியை திருடிச் சென்றுவிட்டனர். மகளுக்காக கஷ்டப்பட்டு வாங்கிய கருவியும் திருடு போனதால், பெற்றோர் நொந்துபோனார்கள். தங்கள் மகளுக்கு மீண்டும் காது கேட்காமல் போனதைக் கண்டு கடும் வேதனை அடைந்துள்ளனர். 

ரயில்வே போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை மதிப்புமிக்க பொருள் எனக் கருதி திருடர்கள் திருடிச் சென்றிருக்கலாம். இந்தப் பொருளால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்த பிறகு அதை வீசி விடவோ அல்லது விற்று விடவோ முயல்வார்கள் என்று போலீஸார் கருதுகின்றனர். ஒரு வேளை இந்தக் கருவியை கண்டெடுத்தால், 9847746711 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment