* அடிப்படை தகுதியான, 'கபடி... கபடி...'ங்கிற வார்த்தையை ஓரளவு உச்சரிக்கவே இவளுக்கு மூணு மாசமாச்சு. ஆனா, மத்தியபிரதேசத்துல நடந்த, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில, ஹரியானாவுக்கு எதிரா தமிழக அணி எடுத்த 27 புள்ளிகள்ல, 23 புள்ளிகள் இவளோடது!
கோவை இந்துஸ்தான் கல்லுாரியில் வணிகவியல் முதலாமாண்டு பயிலும், 18 வயது தர்ஷினி, தமிழக கபடி அணியின் ஒரே மாற்றுத்திறனாளி வீராங்கனை. 'ரைடர், கேட்சர்' என தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக வலம் வரும் இவர், தேசிய அளவில் சப் -ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் சாம்பியன்!
நடப்பாண்டு சீனியர் பிரிவில், பல்கலைக்கழக மற்றும் கேலோ இந்தியா அணிக்காக விளையாடி அனுபவம் பெற்றிருக்கிறார்.
எங்கள் தர்ஷினி
'எதுலேயும் தனித்து தெரியணும்'ங்கிறது தர்ஷினியோட கொள்கை. மிகப்பெரிய அங்கீகாரம் சீக்கிரமே அவளுக்கு கிடைக்கும்!'
- ரம்யா, சக வீராங்கனை.
No comments:
Post a Comment