FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, May 5, 2014

நம்மால் முடியாதா?

கடந்த சில காலங்களாகவே மழையின் அளவு குறைந்து கொண்டே வருவதை நாம் கவனித்து வருகிறோம்.

இதனை இந்த உலகும் நன்கு உணர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து, குடிநீருக்காக மக்கள் அலைந்து திரியும் நிலைமையையும் நாம் கண்கூடாக கண்டு கொண்டு தான் இருக்கின்றோம்.

இதன் காரணமாக சுமார் 1,000 அடிக்கு மேல் ஆழ்துளை போட்டு, அதனில் கிடைக்கும் தண்ணீரில் சில இரசாயண கலவைகளை கலந்து இன்று ஒரு கேன் தண்ணீர்  சுமார் ரூ.20லிந்து அதிகபட்சமாக ரூ.100 வரைக்கும் விற்பனை செய்வதையும் நாம் பார்த்து
வருகிறோம். அதுமட்டுமல்லாது அதனையே வாங்கி பருகக்கூடிய நிலைக்கும் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

மழையின் அளவு குறைந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமாக சொல்லப்படுவது மரங்களை அழிப்பதுதான். சமீபத்தில் இந்த உலகையே ஒரு ஆட்டு ஆட்டி பார்த்து விட்டுச் சென்ற பயங்கரமான சுனாமி அலைக்கள். இந்த சுனாமி அலைகள் கூட மரங்கள் இல்லாத காரணத்தினால் தான் அதிகபடியான பாதிப்பை ஏற்படுத்தியது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அப்படி இருக்கையில் இன்று ஒரு நாளைக்கு எண்ணற்ற மரங்கள் இடத்தேவைகளுக்காகவும், பயன்பாட்டிற்காகவும், நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காகவும், சமூக விரோதிகளாலும், இன்னும் பல காரணங்களாலும் வெட்டப்படுகின்றன. உலக சுற்றுச்சூழல் ஆய்வு மையம் அறிக்கையின் படி,  மரங்களை அழிப்பதன் மூலமாக இந்தியா போன்ற நாடுகள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் என்றும் பல இயற்கை சீற்றங்களை சந்திக்கும் என்றும் தகவல்களை தந்துள்ளன.

ஆனாலும் இத்தகைய ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வந்த பின்னரும் மரங்களை வெட்டுவதை யாரும் நிறுத்தியதாக தெரியவில்லை. இதில் அரசு அக்கரை எடுத்துக் கொள்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மழை அளவு குறைந்து போய் தண்ணீருக்கு அலையோ அலையயன்று அலையும் போக்கினைத்தான் நாம் வரக்கூடிய சந்ததியினருக்கு விட்டுச் செல்ல காத்திருக்கின்றோமா?

மரங்கள் இல்லாததால் தான் மழைகள் இல்லாமல் போயின. இதனால் தான் இன்று கடுமையான தண்ணீர் பஞ்சம் எங்கு பார்க்கினும் நிலவுகிறது என்பதை உணர்ந்த பல நல்லுள்ளம் கொண்ட சமுதாய அக்கரைவாதிகள் தங்களால் முயன்ற அளவுக்கு மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாது இந்த சமுதாயத்தையும் மரங்கள் நடவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல செயல்பாடுகளை செய்கின்றனர்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தன்னை எல்லோரும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ஒரு இளைஞர். இவர் கல்லூரி படிப்பு முடித்து, தற்போது சுயமாக தொழில் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் படிக்கும் போதும், அதன் பிறகும் சமுதாயத்திற்கு பயனுள்ள பல செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் வடமாநிலங்களில்  ஏற்பட்ட மத கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே முன்னின்று, தனக்னென்று ஒரு நண்பர்கள் வட்டத்ததை ஏற்படுத்திக் கொண்டு ஒரு குழுவாக இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வசூல் செய்து கொடுத்திருக்கிறார்.

இவரின் நண்பர்கள் கூட்டம் மரங்களின் தேவையை உணர்ந்து, இதனின் பயன்களை மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் தற்போது இளையான்குடி முழுக்க சுமார் 500 மரக்கன்றுகளை நடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். தற்போது 500 என்ற இலக்கை நிர்ணயித்து பல இடங்களில் மக்களுக்கு பயன் தரும் மற்றும் நிழல் தரும் மரங்களை நட தொடங்கியுள்ளனர்.

இது குறித்த செய்தியை அறிந்து இவரை சந்திக்க நேரில் சந்திக்க சென்ற போது, மரம் நடும் வேலையில் ஈடுபட்டிருந்தனர் இக்பால் என்ற அந்த இளைஞரும் அவரின் நண்பர்களான  அஞ்மல், சாகுல் மற்றும் உமர்  ஆகியோரும். மரம் நடுவது குறித்து அவர்களிடம் பேசிய போது,  மழை இல்லாததினால் ஏற்படும் தீமைகளையும், தற்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் இழப்புகளையும் விளக்கியவர்கள், இதனை தவிர்த்து மழை நீரை பெருவதென்றால் மரம் ஒன்றே ஒரே வழி என்ற எண்ணம் தோன்றிய உடனே இதில் இறங்கி விட்டதாக இந்த நண்பர்கள் பட்டாளம் கூறியது.

இந்த மரக்கன்றுகளை நடுவதற்காக தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்வதுடன்  பலரிடம் நன்கொடைகளையும் பெற்று மரங்களை நட்டு வருகின்றனர். இன்று மரங்கள் நடுவது  என்பது சிறந்த விச­யமாக இருந்தாலும் அதனை பல நல்ல உள்ளங்கள் அங்கொண்றும் இங்கொண்றுமாக செய்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி இருக்கையில் இக்பால் மற்றும் இவரின் நண்பர்கள் மரம் நடுவதை பெரிதாக நாம் சொல்லி காண்பிக்க வேண்டியதில்லையே என்ற எண்ணம் தோன்றலாம்.

சமுதாய அக்கரையுள்ள  யாவரும் தானாக முன்வந்து தான் இது போன்ற நல்ல செயல்களை செய்வார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு விளம்பரமும் தேடிக் கொள்வது இல்லை. ஆனால், இளையான்குடியில் மரம் நடும் செய்தியில்,  நம்மை சிந்திக்க கூடிய செய்தி உண்டு. ஆம். இந்த மரம் நடும் நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கும் சகோதரர் இக்பால் ஒரு “மாற்றுத்திறனாளி”.

சாதாரண மனிதர்களே நமக்கு இது வேண்டாத வேலை என்று நினைத்து விலகி போய் கொண்டிருக்கையில், இந்த சமுதாயத்திற்கு தன்னுடைய பங்கை பதிவு செய்ய நினைக்கும்  இந்த மாற்றுதிறனாளியான இக்பாலின் செயல் பிறரை சிந்திக்க வைக்கும். இவருக்கு உறுதுணையாக இருப்பவர்கள் இவரின் நண்பர்களான அஜ்மல், சாகுல் மற்றும் உமர் போன்றவர்கள். இந்த உலகத்தைப் பற்றி எந்த அக்கரையும் இல்லாத பல மனிதர்களுக்கு மத்தியில் ஒரு இலக்கை ஏற்படுத்தி அதனை நோக்கி தன்னை பயனித்து கொண்டிருக்கும் இந்த இக்பாலை போல மற்றவரும் முன்வந்தால் ஏன் இந்த மண்ணில் மழை என்பதற்கு பஞ்சம் ஏற்படப்போகிறது?
இவர் இதனோடு நின்றுவிட வில்லை. மழை இல்லாதற்கு மரம் வெட்டப்படுவது ஒரு காரணம் என்பது மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் விமானத்தின் மூலம் தூவப்பட்ட விதையால் இன்று அனைத்து நிலங்களிலும் வியாபித்துக் கொண்டிருக்கும் கருவேல் மரங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் அதனால் தான் மழை என்பதே அறவே இல்லாமல் போய்விட்டது என்றும், அதற்காக மக்களிடத்தில் விழிப்புணர்வு எற்படுத்த ஆயத்தமாகி உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக  “நம் உரிமை புரட்சியின்” செய்தியாளர் செய்யது அலி  எழுதிய  “வானம் பார்த்த பூமி” என்ற கட்டுரையை படித்த இவர், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அதனை பிரசுரமாக அச்சடித்து மக்கள் மத்தியில் விநியோகம் செய்ய முயற்சிகளை கொண்டிருக்கின்றார். இவருக்கும், இவரது நற்செயல்களுக்கு பக்க பலமாக இருந்து முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் இவரின் நண்பர்களும் நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

500ஐ  விடுங்க, நம்மால் ஒரு மரக்கன்று நட முடியாதா? முடியும்! வாருங்கள்!!. செயல்படுத்துவோம்!!

இளையவன், இளையான்குடி

No comments:

Post a Comment