FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, February 11, 2025

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்






11.02.2025
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாத சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, பிப்ரவரி மாதம் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (12ம் தேதி) மாலை 3 மணிக்கு, கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் சிறப்பு குறைதீர் தீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெற வேண்டும், இம்முகாம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை 044-2999 8040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட விவரங்கள் அறியலாம்.




மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்குப் பணி நியமன ஆணை



08.02.2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடத்திய முகாமை, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடக்கி வைத்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுஜா சோய் இண்டஸ்ட்ரீஸ், ரெட்டி பவுண்டேசன், பாரத் எண்டர்பிரைசஸ் பெட்ரோல் பங்க், ஹோட்டல் தயாளன், ஏர்சி நடேசன் நிறுவனம், கணேசன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. முகாமில், 150க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில், தேர்வான 30-க்கு மேற்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜி.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தம்: மாற்றுத்திறனாளிகள் அவதி



07.02.2025
சென்னை: தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகை, மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டிருப்பது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.-

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், உடல் ஊனமுற்றோர், செவி குறைபாடு உடையோர் என, 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. உடல் ஊனத்தின் தன்மையை பொறுத்து, 75 சதவிதம் வரை ஊனமுற்றோருக்கு மாதம், 1,500 ரூபாய்; 75 சதவிதத்திற்கு மேல் ஊனமுற்றோருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கடும் ஊனத்தினால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலருக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதை பெற விண்ணப்பித்தவர்களுக்கு, உதவித் தொகை வழங்கப்படாமல் உள்ளது.

இது குறித்து மாற்றுத் திறனாளிகள் சிலர் கூறியதாவது:

ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில அரசுகள் வழங்குவதைப் போல், தமிழகத்திலும், குறைந்தபட்சம் 6,000 ரூபாய், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக வழங்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இணைய வழியில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பலர் வருவாய் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என, இரண்டிலும் உதவித்தொகை பெற்று வருவது தெரிய வந்தது. அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

ஆனால், இரண்டு இடங்களில் பராமரிப்பு உதவித் தொகை பெறுவதை, 2018 முதல் அரசு நிறுத்தி விட்டது. தற்போது மகளிர் உரிமைத்தொகை பெறும், மாற்றுத் திறனாளி மகளிர் பலருக்கும், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை, அரசு நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு காரணங்களை கூறி, 5,000க்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே, அரசு நிறுத்தப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்க வேண்டும். இனி மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வழியே வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டு, மாதாந்தி-ர பராமரிப்பு உதவித் தொகையை, முறையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளை கேட்டபோது, 'இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம்



28.01.2025
மதுரை: சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 14 லட்சத்து 27 ஆயிரத்து 979 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் தொகுப்பூதியம் அடிப்படையில் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. சமையல் உதவியாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள், உணவுப்பொருட்களை கொள்முதல் செய்வது, உணவு தயாரிப்பின் போது உதவுவது, காய்கறிகளை வெட்டிக் கொடுப்பது, பாத்திரங்களை கழுவுவது, உணவு பரிமாறுவது போன்ற பணிகளைச் செய்வர். இதனால் இப்பணிக்கு மாற்றுத்திறனாளிகளை தகுதியற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சாதனைகளைச் செய்து வரும் சூழலில், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடாது எனக் கூறுவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய சூழலில், மாற்றுத் திறனாளிகளைப் பணிக்குத் தேர்வு செய்ய மறுப்பது சட்டவிரோதமானது.

எனவே சமையல் உதவியாளர் தேர்வு தொடர்பாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்வது, அந்த அரசாணை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் இன்று (ஜன.28) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமையல் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையில் சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனு தொடர்பாக தமிழக சத்துணவுத் துறை முதன்மைச் செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.


Tuesday, February 4, 2025

அதானி வீட்டு திருமணம்: மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு



04.02.2025 மும்பை: தொழிலதிபர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா திருமணம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வழக்கமாக தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இல்ல திருமணம் என்றால் அதில் பல துறை பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்வில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்து முக்கிய நபர்கள் பலர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் இந்தியாவின் டாப் செல்வந்தர்களில் ஒருவராக உள்ள அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷா திருமணத்திலும் பிரபலங்கள் அதிகம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அது குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. எலான் மஸ்க் முதல் மன்னர் சார்லஸ் வரை இதில் பங்கேற்க உள்ளதாக ஜீத் அதானி திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவின. மொத்தத்தில் பிரபலங்கள் சங்கமிக்கும் நிகழ்வாக அது இருக்கும் என சொல்லப்பட்டது.

“எங்கள் குடும்பத்தின் வளர்ச்சி சாமானிய தொழிலாள வர்க்கத்தை போன்றதாகும். ஜீத்தின் திருமணம் எளிமையான மற்றும் பாரம்பரிய முறைப்படி நடைபெறும்” என கடந்த மாதம் மகா கும்ப மேளாவில் பங்கேற்று கவுதம் அதானி தெரிவித்தார்.

இந்த சூழலில் தங்கள் திருமண விழாவில் பிரபலங்கள் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஜீத் அதானி மற்றும் திவா ஷா அழைப்பு விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘மித்தி கஃபே’-வுக்கு (Mitti Cafe) நேரடியாக சென்று தங்களது திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


வாழ்வில் முதல் முறையாக வானில் பறந்த மாற்றுத்திறனாளிகள்... வாய்ப்பை அளித்த ஐடி நிறுவனம்




29.01.2025 
திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர்.

திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

சென்னையில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனமான basis cloud solutions நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தை சுற்றி பார்க்கின்றனர். அது மட்டும் இன்றி ஐடி நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளனர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மாணவர்கள் விமானத்தில் பயணிக்கும் பொழுது புதுவித அனுபவமாக இருந்தது முதலில் பயத்துடனும் அதன் பிறகு உற்சாகமாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.

அது மட்டும் இன்றி காது கேளாதோர் வாய் பேசாதோர் ஐடி தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதில் பணிபுரியவும் முடியும் தனியார் ஐடி நிறுவனம் அந்த கல்லூரியில் இருந்து மாணவர்களை பணியில் அமர்த்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த குறித்த பேராசிரியர் தெரிவித்த பொழுது இதுபோன்று மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதுடன் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெருகும் எனவும் சாதாரணமாக ஆங்கில வழியில் கல்வி கற்று ஐடி துறையில் பணிபுரியும் மாணவர்களே சிரமப்படும் நிலையில் ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொண்டு ஐ டி துறையில் பணிபுரிந்து அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும் அளவிற்கு மாணவர்கள் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தனர்.

சத்துணவுப் பணியாளர் நியமனம்: மாற்றுத் திறனாளிகளுக்கு தடை விதிக்கும் அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை


29.01.2025 
சத்துணவுப் பணியாளர் பணியிடத்துக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க தடை விதிக்கும் அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரவிமலநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனு: சத்துணவுத் திட்டத்தின் கீழ், சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு, டிசம்பர் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டது இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது.

அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம் என்ற சூழலில், இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதமானது. எனவே, இந்த அறிவிப்புக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக சமூக நலன், சத்துணவுத் திட்டத் துறையின் முதன்மைச் செயலர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலர், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தின் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனர் நீதிபதிகள்.

மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடி​யாது: குடியரசு துணைத் தலைவர் பேச்சு



02.02.2025 சென்னை: ​மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடி​யாது என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரி​வித்​துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் மேம்​பாட்டுத் துறை அமைச்​சகத்​தின் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்​பாட்டு நிறு​வனம், செவித்​திறன் மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி​களால் டெல்​லி​யில் நடத்​தப்​பட்டு வரும் எஸ்இடிபி தொண்டு நிறு​வனம், சென்னை சேடனா அறக்​கட்டளை மற்றும் வித்​யாசாகர் நிறு​வனம் சார்​பில், செவித்​திறன் - கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி​களுக்கான 3-வது தேசிய மாநாடு சென்னை முட்டுக்​காட்டில் நேற்று நடைபெற்​றது.

மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்​தார். எஸ்இடிபி நிறு​வனத்​தின் இயக்​குநர் சமீர் தாலே வரவேற்​புரை வழங்​கினார். நிகழ்ச்​சி​யில் மாற்றுத் திறனாளி​களுக்கான உதவி உபகரணங்கள் வழங்​கும் திட்​டத்​தின் கீழ் உதவி உபகரணங்களை குடியரசு துணைத் தலைவர் வழங்கி, அவர்​களுடன் சைகை மொழி​யில் கலந்​துரை​யாடி​னார்.

பின்னர் மாநாட்​டில் அவர் பேசி​ய​தாவது: இன்றைக்கு மாற்றுத் திறனாளி​களுடன் இருப்பதை ஆசீர்​வாத​மாகக் கருதுகிறேன். செவித்​திறன் மற்றும் கண்பார்வை குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி​களுக்கான கல்வி மற்றும் வேலை​வாய்ப்பு என்பது மிகவும் முக்​கி​யம். ஏராளமான திறன்களைக் கொண்ட மாற்றுத்திறனாளி​களால் இன்றியமையாத பங்களிப்பை தேசத்​துக்கு வழங்க முடி​யும். அதற்கு அவர்களை கைப்​பிடித்து தூக்​கி​விட்​டால் மட்டுமே போதும்.

மாற்றுத் திறனாளி​களின் திறன்​களைக் கண்டறிந்து, அவர்​களின் கனவுகளை நனவாக்​கும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்​படுத்தி வருகிறது. இவற்றை நிறைவேற்ற பிரதமர் மோடி உறுதி​யுடன் இருக்கிறார். அனைவரை​யும் உள்ளடக்கிய வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பும் அவசி​யம். அவர்​களது பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்​துக்கான இலக்கை அடைய முடி​யாது. எனவே மாற்றுத் திறனாளி​களின் தேவைகளை சமுதா​யத்​தில் யாரும் ஒதுக்​கி​விடக் கூடாது.

வாழ்​வில் பல்வேறு இக்கட்டான சூழல்களை திறம்பட கையாளும் அவர்​கள், பாரா ஒலிம்​பிக்​கிலும் பல்வேறு சாதனை​களைப் படைத்து வருகின்​றனர். அந்த வகையில் செயற்கை நுண்​ணறிவு போன்ற நவீன தொழில்​நுட்​பங்​களுடன் கூடிய வளர்ச்​சிப்பாதையை உருவாக்கி, மாற்றுத் திறனாளி​களின் முன்னேற்​றத்தை முன்னெடுத்​துச் செல்ல திட்​டங்களை வகுத்து வருகிறோம்.

இந்த வளர்ச்​சிக்கு தன்னார்வ தொண்டு நிறு​வனங்​களின் பங்கும் அவசி​ய​மாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சுற்றுச்​சூழல் தினத்​தையொட்டி தொடங்​கப்​பட்ட ‘அம்​மா​வின் பெயரில் ஒருமரம்’ என்ற திட்​டத்தை முன்னிலைப்​படுத்தி முட்டுக்​காடு தேசிய நிறுவன வளாகத்​தில் மரக்​கன்​றுகளை குடியரசு துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவி மருத்​துவர் சுதேஷ் தன்கர் ஆகியோர் நட்டனர்.

இந்நிகழ்​வில் மாநிலங்​களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங், எம்பிக்கள் திருச்சி சிவா, கே.லட்​சுமணன், தேசிய ​மாற்றுத் திறனாளி​கள் மேம்​பாட்டு நிறுவனத்​தின் இயக்​குநர் ந​சிகேத ர​வுத், துணைப் ப​திவாளர் பி.​காமராஜ், வித்​யாசாகர்​ நிறு​வனத்​தின்​ இயக்​குநர்​ பூனம்​ நட​ராஜன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Video Relay Service integrated into the National Helpline Number (14456) for persons with hearing impairments across India



02.02.2025
The Indian Sign Language Research and Training Centre (ISLRTC), under the Department of Empowerment of Persons with Disabilities (DEPwD), Ministry of Social Justice and Empowerment, has announced the integration of Video Relay Service (VRS) into the National Helpline Number (14456).

The launch event was held on Saturday, virtually by ISLRTC, New Delhi along with staff and students of ISLRTC. A total of around 100 participants attended the ceremony.

This initiative is a huge step forward in ensuring accessible communication for persons with hearing impairments across India.

With VRS, deaf individuals can now connect seamlessly with hearing persons, including government offices, emergency services, and service providers, through real-time interpretation in Indian Sign Language (ISL).

This service strengthens accessibility, inclusivity, and equal opportunities for the deaf community across the nation.

The VRS can be accessed easily by scanning the QR Code below for quick connectivity.