FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, November 2, 2022

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நாடகமாடிய 2 திருடர்கள் கைது



01.11.2022 மும்பை, 
வீடு புகுந்து திருடிய சம்பவத்தில் பிடிபட்ட 2 பேர் போலீசாரிடம் மாற்றுத்திறனாளியாக நடித்தனர். டாக்டரின் பரிசோதனையில் அவர்கள் நாடகமாடியது தெரியவந்தது. 

வீடு புகுந்து திருட்டு 

மும்பை தாதர் அருகே பிரபாதேவியில் நேகா கேலக்சி என்ற கட்டிடத்தில் கடந்த 25-ந்தேதி 2 வாலிபர்கள் நுழைந்தனர். திறந்து கிடந்த வீட்டில் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடினர். பின்னர் அதேபோல மற்றொரு கட்டிடத்தில் நுழைந்து திருட முயன்றனர். 

இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திருடர்கள் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர்.

இதுபற்றி போலீசில் தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் 2 பேருக்கும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என சைகை மூலம் போலீசாருக்கு தெரிவித்தனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரை சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று டாக்டர்களிடம் பரிசோதனை நடத்தினர். 

2 பேர் கைது 

இந்த பரிசோதனையில் அவர்களுக்கு குறைபாடு எதுவும் இல்லை என தெளிவானது. இதனால் போலீசார் தங்கள் பாணியில் நடத்திய விசாரணையில் கன்னட மொழியில் பதில் தெரிவித்தனர். 

போலீசார் கன்னட மொழி பெயர்ப்பாளர் மூலம் நடத்திய விசாரணையில் சந்து கணேஷ் சென்டு (வயது25), கிரண் முங்கேஷ் குருப்பா (19) என்பது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து இவர்களுக்கு வேறு ஏதேனும் குற்றவழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Thursday, October 13, 2022

காணாமல் போய் 6 ஆண்டுகளுக்குப் பிறகு; `ஆதார்' உதவியால் குடும்பத்துடன் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்

 

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் நவம்பர் 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் (15 வயது) காணாமல் போயிருக்கிறான். சிறுவனின் குடும்பத்தினர் அவனைப் பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதே ஆண்டு, நவம்பர் மாதம் 28-ம் தேதி நாக்பூர் ரயில் நிலையத்தில் அந்த மாற்றுத்திறனாளி சிறுவனை மீட்ட ரயில் நிலைய அதிகாரிகள், அவனை நாக்பூரில் உள்ள அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் அவருக்கு பிரேம் ரமேஷ் இங்கலே என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் அந்தப் பெயரிலேயே சிறுவனுக்கு ஆதார் அட்டை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் காப்பகத்தின் கண்காணிப்பாளர் விண்ணப்பித்திருக்கிறார்.

ஆனால் அந்தச் சிறுவனின் கைரேகை ஏற்கெனவே ஒரு ஆதாரத்துடன் பொருந்தியதால், புதிய ஆதார் எண்ணை உருவாக்க முடியவில்லை. இதனால் குழப்பம் நீடித்திருக்கிறது. அதையடுத்து, மும்பையிலுள்ள ஆதார் ஆணையத்தின் மண்டலக் கண்காணிப்பாளர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டிருக்கிறார். விசாரணையில், பீகாரின் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற பெயருடன் 2016-ம் ஆண்டு ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதன் பிறகு நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், பீகாரில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுவனான சச்சின் குமார் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காணாமல்போயிருந்தது தெரியவந்தது. காது கேளாத, ஊமைச் சிறுவன் என்பதால் அவனால் தன்னுடைய விவரங்களைக் காப்பக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, ஆதார் அட்டையில் இருந்த முகவரிக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் நாக்பூருக்கு விரைந்து சச்சின் குமாரை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சச்சின் குமார் (21) ஆதார் அட்டையின் உதவியுடன் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்திருக்கிறது.



சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை - என்ன நடந்தது?!

05.10.2022
உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் 17 வயது காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, 21 வயது இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை அவரைத் தேடிவந்தது. அவர் அலிகார் நகரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறை, "பாலியல் வன்கொடுமை குற்றவாளி அலிகாரில் மறைந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் சகோதரருடன் சென்றிருக்கிறார். பின்னர் அவர் ராஜ்புரா பகுதியிலுள்ள கிராமத்தில் இருக்கும் தன் சகோதரியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு தங்கியிருந்த அவர் திடீரென வாந்தி எடுக்கத் தொடங்கியிருக்கிறார். உடனே, அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இறந்தார். உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் விஷம் அருந்தியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவரின் சகோதரர் கூறுகையில், ``என் சகோதரர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக பயந்துகொண்டிருந்தார். அதனால், நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துவைக்க சிறுமியின் குடும்பத்தினரைச் சமாதானப்படுத்த முயன்றோம். ஆனால் அவர்கள் மறுத்து, காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்.

போலீஸ் நடவடிக்கை மற்றும் சிறைத் தண்டனைக்கு பயந்து விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்' எனத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தீவிரமாக விசாரித்துவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது. காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.






Tuesday, April 19, 2022

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 20ந் தேதி நடக்கிறது

16.04.2022 மதுரை
மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் லெனின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை பிரிவு சார்பில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ளன.

போட்டியில் பங்கேற்போர் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வேண்டும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. எந்த பிரிவானாலும் ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க வேண்டும். சக்கர நாற்காலி போட்டியில் பங்கேற்பவர்கள் சக்கர நாற்காலியுடன் வரவேண்டும்.

மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு போட்டிகளில் முதல் இடத்தை பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும்.- போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

குழு விளையாட்டுப் போட்டிகளில் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு (ஆண்கள், பெண்கள்) இறகுப்பந்து போட்டிகள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் தலா 5 வீரர்கள்), மேஜைப்பந்து போட்டிகள் (தலா இருவர்), பார்வையற்றோர் (ஆண்கள், பெண்கள்) வாலிபால் போட்டிகள் (தலா 7 வீரர்கள்), மனநலம் பாதிக்கப்பட்டோர் (ஆண்கள், பெண்கள்) எறிபந்து போட்டிகள் (தலா 7வீரர்கள்), காது கேளாதோர் (ஆண்கள், பெண்கள்) கபடி போட்டிகள் (தலா 7 வீரர்கள்) பங்கேற்கலாம்.


 


மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

17.04.2022 திருவண்ணாமலை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் வயது வரம்பின்றி தனித்தனியாக நடைபெறும்.

இதில் மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் ஆகியவர்களை ஊக்குவிக்கும் வகையில் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், எறிபந்து, கபடி போன்றவை குழு போட்டிகளாகவும், ஓட்டம், குண்டு எறிதல், நின்ற இடத்தில் தாண்டுதல், சக்கர நாற்காலி போன்றவை தடகள போட்டிகளாகவும் நடத்தப்பட உள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அரசு வழங்கிய அடையாள அட்டை நகலினை கட்டாயமாக போட்டிகள் நடக்கும் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

அடையாள அட்டை இல்லாதவர்கள் எக்காரணம் கொண்டும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.

மேலும் கூடுதல் விவரங்களை பெற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.



ஏப். 26ல் மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள்


விருதுநகர்,:2021 - -22க்கான மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள் ஏப். 26ல் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பில்லை. மருத்துவ சான்று அல்லது மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று பெற்று வர வேண்டும். மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் பங்கேற்கும் வகையில் 50 மீ., 100 மீ., குண்டு எறிதல், தாண்டுதல் போட்டிகளும், குழு விளையாட்டு போட்டிகளான பாட்மிண்டன், கபாடி, எறிபந்து உள்ளிட்ட விளையாட்டுக்களில் பங்கேற்கலாம், பங்கேற்க விரும்புபவர்கள் ஏப். 26 காலை 8:00 மணிக்கு நேரில் வர வேண்டும், என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.


Tuesday, April 12, 2022

குஜராத்: பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை - காது கேளாத, வாய்பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்



09.04.2022  குஜராத் மாநிலத்தில் மாற்றுத் திறனாளி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண், குஜராத் மாநிலம் மெஹ்சானாவில், தன் 5 வயது மகன், கணவனுடன் வசித்து வந்தார். காது கேளாத, வாய் பேச முடியாத அந்த பெண்ணை அந்த பகுதியில் வசித்து வந்த 4 பேரால் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அதைப் பல முறை கணவனிடம் கூற முயன்றும் முடியாமல் தவித்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் தாயின் நிலையை அறிந்துகொண்ட 5 வயது சிறுவன் தன் தாயிக்கு நடக்கும் கொடுமையை தன் தந்தையிடம் கூறியுள்ளார். இதை அறிந்த அந்த 4 பேரும், ``உடனே ஊரை காலி செய்து மீண்டும் ராஜஸ்தான் சென்று விட வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்" என அந்த குடும்பத்தை மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில், உயிருக்குப் பயந்து அங்கிருந்து அந்த குடும்பம் மீண்டும் ராஜஸ்தான் வந்துவிட்டனர். அதன் பின்பு நடந்த சம்பவத்தை ஜீரோ எஃப் ஐ ஆர் விதியின்கீழ் அவரின் கணவர் ராஜஸ்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறை, ``செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு உள்ள பெண் நான்கு பேரால் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.


ஆப்ரிக்க கிராமம்: காது கேளாத ஜோடிகள் கரம் பிடிக்க தடை விதிக்கும் வழக்கம்




காணொளியைப் பாருங்கள்: (வீடியோ)

கானா நாட்டின் அக்கரா என்ற இடத்தில் உள்ளது அடமொரோப் கிராமம். அந்நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே இந்த கிராமம் இருந்தாலும் இங்கு ஒரு விஷயம் மட்டும் வித்தியாசமாக உள்ளது. அது என்ன? இந்த காணொளியைப் பாருங்கள்.

Saturday, April 9, 2022

Hearing Aid மூலம் முதன் முறையாக குரலைக் கேட்டு குதூகலிக்கும் குழந்தை...


பிறக்கும் போதே காது கேளாத குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தையின் நிலை மிகவும் பரிதாபமானது. பிறந்த குழந்தைக்கு காது கேட்கவில்லை என்றால், நாளடைவில் வாய் பேச முடியாமல் போய்விடும். இந்நிலையில் பிறந்ததில் இருந்தே காது கேளாமல் இருந்த குழந்தை ஹியரிங் எய்ட் மூலமாக முதன் முறையாக ஒலியை கேட்டு மகிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"ஜாக் முதல் முறையாக கேட்கிறார்" என்ற கேப்ஷன் உடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் போன் ‘ஆங்கர்டு ஹியரிங் எய்ட்’ ( BAHA) எனப்படும் செவிப்புலன் உதவி கருவியுடன் ஜாக் என்ற குழந்தை முதன் முறையாக இந்த உலகின் உன்னத ஒலிகளை கேட்டுள்ளது.

வீடியோவில், பெண்மணி ஒருவர் குழந்தை ஜாக்கை தனது கையில் வைத்துள்ளார், குழந்தையின் காதுக்குள் BAHA சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பேசும்போது, ​​​​ஜாக் தனது தலையை அசைப்பதன் மூலம் குரல்களுக்கு பதிலளிப்பது பதிவாகியுள்ளது. ஜாக்கிற்கு ஒரு காது கேளாமை பிரச்சனை உள்ளது. பொருளாதார ரீதியாக வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு செவித்திறன் மட்டுமல்ல கண்பார்வை குறைபாடும் உள்ளது.

இப்போது இந்த வீடியோவை பார்ப்பது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும், குழந்தை ஆரம்பத்தில் அடைந்த கஷ்டங்கள் அளவிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் குழந்தை செவித்திறன் மற்றும் பார்வை குறைப்பாடு கொண்டிருப்பதால் வளர்ச்சியில் மந்தமான நிலையில் இருந்துள்ளது.

‘ஆங்கர்டு ஹியரிங் எய்ட்’ ( BAHA) -யைப் பயன்படுத்துவது குழந்தைக்கு ஒரு தற்காலிக தீர்வு என்றும், காது மடல்களுக்கு மேல் பொருத்தப்படும் செவிப்புலன் கருவிகளை பொருத்துவதே அடுத்த இலக்கு என்றும், வீடியோ பகிரப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை ஜாக்கின் உள் மற்றும் நடுத்தர காது பகுதிக்கு இடையில் செவித்திறன் பாதிப்பு உள்ளது. இதனால் அவர் கேட்கக்கூடிய சிறந்த செவிப்புலன் விருப்பத்தை தீர்மானிக்க கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குரல்களைக் கேட்கும் போது குழந்தை ஜாக்கின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை பார்க்கும் போது, பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தும் அளவிற்கு உள்ளது. பிஞ்சு குழந்தை இத்தனை நாட்களாக எத்தனை துன்பங்களை தனக்கே அறியாமல் கடந்து வந்திருக்கும் என்பதை அந்த ஒற்றை புன்னகை நமக்கு உணர்த்துகிறது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவை காணும் பலரும், குழந்தைக்காக மகிழ்ச்சி அடைவதாகவும், தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

“கடவுள் உங்களை அழகாக ஆசீர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் ‘தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக ஜாக் கேட்க முடிந்தது மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.