FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, October 30, 2013

காலில் மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை சஸ்பெண்ட்

30.10.2013, அகோலா: வாய் பேசமுடியாத, காதுகேளாத மாணவர்களை, தனது காலை மசாஜ் செய்யும்படி கூறிய அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கான அரசு பள்ளியில் 7ம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றுபவர் சீத்தல் அவ்சர். இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு பலவித தொந்தரவுகளை அளித்துள்ளார். ஆசிரியை பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தாலும் மாணவர்களுக்கு அடிதான் கிடைத்துள்ளது. வகுப்பு நேரத்தில் ஏதாவது ஒரு மாணவன், தனது காலை மசாஜ் செய்துவிட வேண்டும் என்பதை சீத்தல் வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆசிரியையின் வரம்பு மீறிய தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய மாணவன் ஒருவன், ஆசிரியையின் கால் மசாஜ் செய்யப்படும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து கல்வி அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் செய்தான். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆசிரியை தவறு செய்தது உண்மை என நிரூபிக்கப்பட்டதால், அவரை சஸ்பெண்ட் செய்ய விசாரணை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆசிரியை சீத்தல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Thanks to

காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளிக்குழந்தைகளை சித்ரவதை செய்த ஆசிரியை நீக்கம்

30.10.2013, அகோலா: மகாராஷ்டிராவில், காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளிக் குழந்தைகளை, கால் பிடிக்கச் செய்து, கொடுமைப்படுத்திய ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

அகோலா என்ற இடத்தில், மாநில அரசு சார்பில், காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பள்ளி உள்ளது. அங்கு, ஷீத்தல் என்பவர், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர், அந்தப் பரிதாபக் குழந்தைகளை, பலவிதமாக தொந்தரவு செய்து வந்துள்ளார். குழந்தைகளை அடிப்பது, கால் கடுக்க நிற்க வைப்பது, சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்துவது என, பல விதமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளார். அடிக்கடி, தன் காலைப் பிடித்து விடுமாறு, குழந்தைகளை அவர் நிர்பந்திப்பது வழக்கம். அந்த கொடுமைக்கார ஆசிரியையை வசமாக மாட்டி விட நினைத்த மாணவர் ஒருவர், அவரின் தொந்தரவுகளை, ரகசியமாக, மொபைல் போனில் படமாகப் பிடித்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அதையடுத்து, நேற்று முன்தினம், ஆசிரியை ஷீத்தல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரின் கொடுமை காட்சிகள், அப்பகுதி, 'டிவி'யில் நேற்று வெளியானதை அடுத்து, வெகுண்டெழுந்த பொதுமக்கள், பள்ளி முன் கூடி, ஆசிரியையை, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என, போராட்டம் நடத்தினர்.

Thanks to

Monday, October 28, 2013

32 ஆண்டுகளாக ஒரு நாள் கூட தாமதம் இல்லை: அசத்துகிறார் மாற்று திறனாளி பெண் எழுத்தர்

27.10.2013,மும்பை :
மகாராஷ்டிராவில், இடுப்புக்கு கீழே செயல்படாத, 58 வயது அரசு பெண் அதிகாரி, 32 ஆண்டுகளாக, ஒரு நிமிடம் கூட, அலுவலகத்திற்கு, தாமதமாக வந்ததில்லை; இம்மாதம் அவர் ஓய்வுபெறப் போகிறார்.

போலியோ பாதிப்பு:உமா மாகரே, 58, மும்பையில், மாநில சமூக நலத்துறையில் எழுத்தராக பணி புரிகிறார். சிறு குழந்தையாக இருக்கும் போதே, போலியோ நோய் பாதிப்புக்குள்ளான அந்தப் பெண்ணின், இடுப்புக்கு கீழே, உறுப்புகள் செயல்படாது.எனினும், பிறர் உதவி இல்லாமல், தானாவே தன் வேலைகள் அனைத்தையும் மேற்கொள்ளும் இவர், கடந்த, 32 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட, அலுவலகத்திற்கு தாமதமாக சென்றதில்லை.இதை பாராட்டி, உயரதிகாரிகள் இவருக்கு பரிசு வழங்கி கவுரவித்துள்ளனர். இவரின் கணவர், கடந்த ஆண்டு இறந்து விட்டார்; அந்த துக்கத்திலும் இவர், அலுவலகம் வந்து சென்றுள்ளார்.இம்மாதம் ஓய்வுஇம்மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற உள்ள அவர், வேறு இனத்தை சேர்ந்த குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து வருகிறார். ஓய்வுக்குப் பிறகு, சமூக சேவை ஆற்றப் போவதாக கூறுகிறார்.'கை, கால் நன்றாக இருக்கும் பலரும், அலுவலகத்திற்கு தாமதமாக வரும் நிலையில், உடல் ஊனமுற்ற இவர், 32 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட தாமதமாக வந்ததில்லை என்பது உண்மையில் வியத்தகு சாதனை தான்' என்கின்றனர், சகஊழியர்கள்.

Thanks to

Thursday, October 24, 2013

பொது விசாரணையை புறக்கணித்த கமிஷனர் : நம்பிக்கை இழக்கும் மாற்றுத்திறனாளிகள்

21.10.2013
சென்னையில், கடந்த சனிக்கிழமை நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணையை, துறையின் கமிஷனர், ஜெயக்கொடி புறக்கணித்தார். இதனால், அரசு தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழந்து வருவதாக, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு, அனைத்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கான கூட்டமைப்பு இணைந்து, சென்னையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணையை நடத்தின. இதில், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, மனித உரிமை செயல்பாட்டாளர் ஓஸி பெர்னாண்டஸ், எழுத்தாளர் கீதா, மகளிர் ஆணைய செயலர், வத்சலா குமாரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் துணை இயக்குநர், ரவீந்திரநாத்சிங், முன்னாள் நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் செயலர், சிம்மச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் குறையை தெரிவித்தனர்.

பரமேஸ்வரி, திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, விளுப்பங்குடி, என் சொந்த ஊர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் என்பவருடன், திருமணம் நடந்தது. சந்தேகப் புத்தி கொண்ட என் கணவர், எப்போதும் வீ"ட்டில் அடைத்தே கொடுமை படுத்துவார். அதனால், விவகாரத்து கோரினோம். வரதட்சணையாக கொடுத்த நகைகளை கேட்டோம். ஒரு நாள், காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, என்னையும், என் அம்மாவையும் அரிவாளால் வெட்டினார். அதில் என் அம்மா இறந்தார்; எனது வலது கை துண்டானது. இருந்தாலும், இரண்டு மாதத்தில், அவர் ஜாமினில் வெளியே வந்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரை, என் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வாழந்து கொண்டிருக்கிறேன்.

மோகனப்ரியா, மதுரை: மதுரை, பசுமலையில் உள்ள பைக்கரா நூலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவது, வழக்கம். ஆனால், இன்று வரை எனக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை; விடுப்பும் அளிக்கப்படவில்லை. இது குறித்து, அனைத்து அதிகாரிகளிடமும் முறையிட்டும் எனக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அக்கறை இல்லாத கமிஷனர்! : மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணை நடந்த போது, அத்துறையின் கமிஷனர் ஜெயக்கொடி, கலந்து கொள்ளாததால், மாற்றுத்திறனாளி அமைப்புகள் கோபம் அடைந்துள்ளன. இது குறித்து, பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள, மாற்றுத்திறனாளிகள் தங்களை குறைகளை, அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என, வந்துள்ளனர். ஆனால், துறையின் கமிஷனர், மாற்றுத்திறனாளிகளின் நலனில், துளியும் அக்கறை இல்லாமல், நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். இதன் மூலம், அரசை நம்பியுள்ள மாற்றுத்திறனாளிகள், வேதனை அடைந்துள்ளனர். மேலும், அரசு, தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thanks to

Wednesday, October 23, 2013

பாக்குமட்டை தட்டு தயாரிப்பில் மாற்றுத் திறனாளிகள்

23.10.2013,

சென்னை தியாகராய நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில்முனைவு மையத்தில் பாக்குமட்டை தயாரிப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளான சந்தோஷ், லட்சுமி, கார்த்திக், விக்னேஷ், சாய்சந்தோஷ் ஆகிய 5 பேர் அலுவலக கவர்கள், கோப்புகள், காகித பைகள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தங்களது பெயரில் தலா ரூ.50 ஆயிரம் கடன் பெற்று ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட இயந்திரம் மூலம் பல்வேறு அளவுகளில் தினமும் 500 பாக்குமட்டை தட்டுகள் வரை தயாரிக்க உள்ளனர். இந்த தட்டுகள் ரூ.1.50 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக என்லைட்டன் தொழில்முனைவகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய அறக்கட்டளையின் தலைவர் பூனம் நடராஜன் தொடங்கி வைத்தார். கோட்டூர் வித்யாசாகர் தொண்டுநிறுவனத்தின் முதல்வர் கல்பனா,தொழில்முனைவு மையத்தின் அமைப்பாளர்கள் பாரதி, சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thanks to

Sunday, October 20, 2013

மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் !

மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி படிக்க கல்விக்கடன் பெற்று, வாழ்வில் உயர்ந்திட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்(National Handicapped Finance and Development Corporation ) மூலமாக கல்விக்கடனை பெறலாம்.

40% அல்லது அதற்கு மேல் ஊனமுள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.
பட்டபடிப்பு(Degree), பட்ட மேற்படிப்பு(Graduate), பொறியியல்(Engineering) , மருத்துவம்(Medical), நிர்வாகம்(Administration), ஐடி(IT) போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

 வெளிநாட்டில் படிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சமும் , இந்தியாவில் படிப்பவர்களுக்கு ரூபாய் 10 லட்சமும் கடனாக வழங்குகிறது இந்நிறுவனம். வழங்கப்படும் கல்விக் கடனுக்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவிகளுக்கு 3.5 % வட்டி வசூலிக்கபடுகிறது.

ஒவ்வொரு மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கென தனிப்பட்ட முகவரி உள்ளது.


தமிழகத்தை சார்ந்த மாணவர்கள் கல்விக்கடன் பெற இந்த முகவரியை அணுகலாம்.

Shri K.M. Thamizharasan
Special Officer,
Tamil Nadu State Apex Cooperative Bank Limited,
No. 4 (Old No. 233)
Netaji Subash Chandra Bose Road,
Chennai   600 001.
(Tamil Nadu)

Email:tnscbank@vsnl.com

Tel No.044-25302345,
Tel Fax: 25340508
 URL:www.tnscbank.com


கல்வித் உதவித்தொகைப் பெறுவது குறித்து இந்த பக்கத்தை காணவும்..  http://www.nhfdc.nic.in/sheater/9th.pdf

இது தொடர்பான மேலும் அதிக விபரம் தேவைப்படின் இந்த இணையதளத்தைப் பார்வையிடவும். 
www.nhfdc.nic.in
  

Saturday, October 19, 2013

மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு ஐ.நா. திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல்

அனைத்து அம்சங்களிலும் மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் குமாரி செல்ஜா தலைமையிலான குழுவினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை தாராளமாகக் கிடைப்பதற்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என சர்வதேச சமுதாயத்துக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது. இதில், மாற்றுத்திறனாளி களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. "இந்தக் கூட்டத்தின் மூலம் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த தீர்மானம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணம். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கு இந்தத் தீர்மானம் வழிகாட்டியாக இருக்கும்" என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thanks to

Friday, October 11, 2013

கூட்டமைப்புகள்

கூட்டமைப்புகள்
பல சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து மகளிரின் சமூக, பொருளாதார மேம்பாட்டை அடையவும், சுய சார்புடன் நிலைத்த தன்மை பெறவும் தொடர்ந்து கூட்டாக செயல்படவும் ஜனநாயக அமைப்பே கூட்டமைப்பாகும்.

மகளிர் திட்டத்தின் கீழ் அமைக்க வேண்டிய கூட்டமைப்புகள்: 
  • பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் 
  • வட்டார அளவிலான கூட்டமைப்புகள் 
  • மாவட்ட அளவிலான கூட்டமைப்புகள்
எத்தெந்த குழுக்கள் கூட்டமைப்பில் சேரலாம்: 
  • ஓரே பஞ்சாயத்தில் செயல்படும் குழுக்கள் 
  • மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் குழுக்கள் 
  • கூட்டமைப்பில் தன்னார்வத்துடன் இணைந்து செயல்பட விரும்பும் குழுக்கள்
குழுவிலிருந்து கூட்டமைப்பிற்கு யார் வர வேண்டும்:
  • ஒவ்வொரு குழுவிலிருந்தும், ஊக்குனரும் ஓரு பிரதிநிதியும் கூட்டமைப்பு கூட்டத்திற்கு வரலாம். பிரதிநிதிக்கு பதிலாக விருப்பமுள்ள உறுப்பினரும் வரலாம்.  ஓவ்வொரு கூட்டத்திற்கும் வேறு வேறு நபர்கள் கலந்து கொள்ள கூடாது.  இரண்டாண்டிற்கொருமுறை சுழற்சி முறையில் கூட்டமைப்பில் பிரதிநிதித்துவம் மாற்றப்பட வேண்டும்.
எத்தனை நாட்களுக்கொருமுறை கூட்டம் நடத்த வேண்டும்: 
  • மாதம் ஓரு முறை நடத்த வேண்டும்.
  • தேவையென்றால் சிறப்பு கூட்டங்களும் நடத்தலாம்.
கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் : 

செயலாளர்  இணை செயலாளர்  பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

கூட்டமைப்பின் நோக்கங்கள்: 
  • சுய உதவிக் குழுக்கள், பிற நிறுவனங்களை நம்பியே இல்லாமல் சுயமாக இயங்கவும், நிலைத்த தன்மை பெற்று தொடர்ச்சியாக செயல்படச் செய்யவும். 
  • சமுதாயத்தில் பின்தங்கிய அனைத்து பெண்களையும் குழுக்களாக அமைக்க. 
  • பஞ்சாயத்து அளவிலான பிரச்சனைகளை இணைந்து தீர்த்துக் கொள்ள. 
  • கிராம அடிப்டை மேம்பாட்டிற்காக,ஊராட்சி மன்றத்துடன் இணைந்து செயல்பட. 
  • குழுக்களுக்கு கடன் வசதிகளையும், அரசு நலத் திட்டங்களையும் பெற வங்கி மற்றும் அரசு துறைகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

நிலைத்த தன்மை

சுய உதவிக்குழு ஓற்றுமையுடனும், அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்புடனும் செயல்பட்டு, பிற நிறுவனங்களை முழுமையாக சார்ந்திருப்பதை தவிர்த்து, குழு உறுப்பினர்களின், சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைய தொடர்ந்து செயல்படுவதே நிலைத்த தன்மை ஆகும்.

நீண்ட நாட்களாக செயல்பட்டாலே நிலைத்த தன்மை அடைந்த குழுவா :
  • குழு நிலைத்த தன்மை அடைய காலம் மட்டுமே ஒரு அளவுகோல் அல்ல.
  • 3 ஆண்டுகள் ஆகிவிட்டாலே நிலைத்த தன்மை அடைந்து விட்டதாக கருத கூடாது.
  • குழுவின் செயல்பாடுகளே அதன் நிலைத்த தன்மையை நிர்ணயிக்கும.
நிலைத்த தன்மையை அடைய:
  • குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஓற்றுமையை வளர்த்துக் கொண்டால்.
  • குழு பொறுப்பாளர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால்.
  • திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் அனைத்து பயிற்சிகளிலும் கலந்து கொண்டால்.
  • அரசு திட்டங்களை நேரடியாக பெற்று முழு பலனை அடைந்தால்.
  • அனைத்து நடவடிக்கைகளையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் செய்தால்.
  • முடிவுகளை சுயமாக எடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டால்.
  • தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டால்.
குழு நிலைத்த தன்மையை அடைந்துவிட்டதா என்பதை அறிய:
  • குழு, அனைத்து முடிவுகளையும், தானாக எடுத்து செயல்படுத்துகிறதா?
  • தொண்டு நிறுவனத்தையும், மகளிர் திட்ட அலுவலகத்தையும் முழுமையாக சாராமல் இருக்கிறதா?
  • குழு நிதி, உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளதா?
  • கிராம வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா?
  • சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா?
  • குழு, கூட்டமைப்பு செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்கிறதா?
  • உறுப்பினர்கள் போதிய வருமானம் தரக்கூடிய அளவில் தொழில்களில் ஈடுபடுகிறதா?
  • மேற்கூறிய செயல்களை ஒரு குழு முழுமையாக செயல்படுத்தினால் அக்குழு நிலைத்த தன்மை அடைந்து விட்டது என அறியலாம்.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

தணிக்கை விளக்கம்

குழுவில் குறிப்பிட்ட காலத்தில் நடைப்பெற்ற நிதி மற்றும் பிற நடவடிக்கைகளை தகுதி பெற்ற நபர்களால் முறைப்படி ஆய்வு செய்வது, அறிக்கை சமர்பிக்கும் வழிமுறையே தணிக்கையாகும்.

தணிக்கையின் சிறப்பம்சங்கள்:
  •  குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை நடத்தப்படுதல்.
  • வரவு செலவு புத்தகங்கள், ஆவணங்களை சரிபார்த்தல்.
  • முறைப்படி ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தல்.
  • குழு சாராத வெளி நபரால் செய்யப்படுதல் ஆகியவை ஆகும்.
தணிக்கையின் முக்கியத்துவம்:
  • குழுவின் நிதி நிலையை அறிந்து கொள்வதற்காக.
  • குழுவின் நம்பகத்தன்மையை உறிதி செய்து கொள்ள.
  • குழுவில் பதிவேடுகள் பராமரித்தலில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்துவதற்காக.
  • குழுவின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக.
  • குழு வெளிக்கடன் பெற தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ள.
  • குழுவில் நிதிமுறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அதனை கண்டறிந்து சரிசெய்து கொள்வதற்காக.
தணிக்கையின் வகைகள்:
  1. நிதித் தணிக்கை (அ. உள்தணிக்கை, ஆ. வெளித் தணிக்கை)
  2. சமூகத் தணிக்கை
நிதித் தணிக்கை:

அ. உள்தணிக்கை: பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வரவு செலவு கணக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், குறைகள் இருப்பின் அதனை சரி செய்யவும் உள்நபர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே உள் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:
  • மூன்று மாதத்திற்கொரு முறை செய்யப்பட வேண்டும்.
  • தொண்டு நிறுவனப் பிரநிதியால் செய்யப்பட வேண்டும்.
  • குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
  • கட்டணம் வசூலிக்கப்பட வேண்டியதில்லை.
  • அறிக்கை தயாரிக்க வேண்டியதில்லை.
ஆ. வெளித் தணிக்கை: குழுவால் நிர்ணயிக்கப்பட்ட, ஆங்கீகாரம் பெற்ற தணிக்கையாளரால் வருடத்திற்கொரு முறை, முறைப்படி ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதே வெளித் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:
  • ஆண்டிற்கொரு முறை சட்டரீதியாக செய்யப்பட வேண்டும். ( ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை)
  • அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளரால் செய்யப்பட வேண்டும்.
  • கீழ்க் காணும் தணிக்கைகள் அறிக்கை செய்யப்பட வேண்டும்.
  1. பெறுதல் செலுத்துதல் அறிக்கை.
  2. வருவாய் செலவின அறிக்கை.
  3. இறுதி நிலைக் குறிப்பு.
  4. அனைத்து பதிவேடுகளையும், தணிக்கையின் போது சமர்பிக்க வேண்டும்.
  5. தணிக்கை கட்டணத்தை குழுவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  6. தணிக்கை அறிக்கை குழுவில் வாசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு குறைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
சமூகத் தணிக்கை: சுய உதவிக் குழுக்களின் சமூக ரீதியான நோக்கங்களை அடைவதற்காக செயல்படுத்தப்பட்ட செயல்பாடுகளை ஆண்டிற்கொருமுறை தணிக்கை செய்வதே சமூகத் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:

அ. தணிக்கைக்கு முன்பு பின்பற்றப்பட வேண்டியவை:
  • அனைத்து பதிவேடுகளும் முறைப்படி அவ்வப்போது எழுதப்பட வேண்டும்.
  • நிதியாண்டின் இறுதியிலிருந்து 3 மாதத்திற்குள் தொண்டு நிறுவனம் (அ) கூட்டமைப்பின் வழிகாட்டுதலுடன் செய்து முடிக்க வேண்டும்.
  • வங்கியிருப்புச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
  • உறுப்பினர்கள், சேமிப்பு உறிதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
  • உறுப்பினர்களின் கடன் நிலுவை உறுதிச்சான்று, உறுப்பினர்களின் கையெழுத்துடன் பெறப்பட வேண்டும்.
ஆ. தணிக்கைக்குப் பின்பு, பின்பற்றப்பட வேண்டியவை:
  • தணிக்கை அறிக்கை பற்றி உறுப்பினர்களுக்கு தெளிவடைய வைத்தல்.
  • தணிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், ஆலோசனைகளை கடைப்பிடிக்கவும் முயற்சி எடுத்தல்.
  • தணிக்கை அறிக்கையை பாதுகாத்து பின்னர் தேவைகளுக்கு பயன்படுத்துதல்.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

Tuesday, October 8, 2013

சகல துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு;சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

08.10.2013,
இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள், சகல துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் இதை மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கும்படி, மாற்றுத் திறனாளிகள், நீண்ட காலமாக போராடி வருகின்றனர். சமீபத்தில் கூட சென்னையில் பல நாட்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, "பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அரசின் அனைத்து துறைகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில், மாற்றத் திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் உரிமைகளை, மத்திய, மாநில அரசுகள், பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும், எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பதை கணக்கிடும்படி, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிற்குக்கு உத்தரவிட்டு, மூன்று சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

Thanks to