FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, October 24, 2013

பொது விசாரணையை புறக்கணித்த கமிஷனர் : நம்பிக்கை இழக்கும் மாற்றுத்திறனாளிகள்

21.10.2013
சென்னையில், கடந்த சனிக்கிழமை நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணையை, துறையின் கமிஷனர், ஜெயக்கொடி புறக்கணித்தார். இதனால், அரசு தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழந்து வருவதாக, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு, அனைத்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கான கூட்டமைப்பு இணைந்து, சென்னையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணையை நடத்தின. இதில், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, மனித உரிமை செயல்பாட்டாளர் ஓஸி பெர்னாண்டஸ், எழுத்தாளர் கீதா, மகளிர் ஆணைய செயலர், வத்சலா குமாரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் துணை இயக்குநர், ரவீந்திரநாத்சிங், முன்னாள் நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் செயலர், சிம்மச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் குறையை தெரிவித்தனர்.

பரமேஸ்வரி, திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, விளுப்பங்குடி, என் சொந்த ஊர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் என்பவருடன், திருமணம் நடந்தது. சந்தேகப் புத்தி கொண்ட என் கணவர், எப்போதும் வீ"ட்டில் அடைத்தே கொடுமை படுத்துவார். அதனால், விவகாரத்து கோரினோம். வரதட்சணையாக கொடுத்த நகைகளை கேட்டோம். ஒரு நாள், காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, என்னையும், என் அம்மாவையும் அரிவாளால் வெட்டினார். அதில் என் அம்மா இறந்தார்; எனது வலது கை துண்டானது. இருந்தாலும், இரண்டு மாதத்தில், அவர் ஜாமினில் வெளியே வந்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரை, என் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வாழந்து கொண்டிருக்கிறேன்.

மோகனப்ரியா, மதுரை: மதுரை, பசுமலையில் உள்ள பைக்கரா நூலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவது, வழக்கம். ஆனால், இன்று வரை எனக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை; விடுப்பும் அளிக்கப்படவில்லை. இது குறித்து, அனைத்து அதிகாரிகளிடமும் முறையிட்டும் எனக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அக்கறை இல்லாத கமிஷனர்! : மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணை நடந்த போது, அத்துறையின் கமிஷனர் ஜெயக்கொடி, கலந்து கொள்ளாததால், மாற்றுத்திறனாளி அமைப்புகள் கோபம் அடைந்துள்ளன. இது குறித்து, பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள, மாற்றுத்திறனாளிகள் தங்களை குறைகளை, அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என, வந்துள்ளனர். ஆனால், துறையின் கமிஷனர், மாற்றுத்திறனாளிகளின் நலனில், துளியும் அக்கறை இல்லாமல், நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். இதன் மூலம், அரசை நம்பியுள்ள மாற்றுத்திறனாளிகள், வேதனை அடைந்துள்ளனர். மேலும், அரசு, தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thanks to

No comments:

Post a Comment