சுய உதவிக்குழு ஓற்றுமையுடனும், அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்புடனும் செயல்பட்டு, பிற நிறுவனங்களை முழுமையாக சார்ந்திருப்பதை தவிர்த்து, குழு உறுப்பினர்களின், சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைய தொடர்ந்து செயல்படுவதே நிலைத்த தன்மை ஆகும்.
நீண்ட நாட்களாக செயல்பட்டாலே நிலைத்த தன்மை அடைந்த குழுவா :
நீண்ட நாட்களாக செயல்பட்டாலே நிலைத்த தன்மை அடைந்த குழுவா :
- குழு நிலைத்த தன்மை அடைய காலம் மட்டுமே ஒரு அளவுகோல் அல்ல.
- 3 ஆண்டுகள் ஆகிவிட்டாலே நிலைத்த தன்மை அடைந்து விட்டதாக கருத கூடாது.
- குழுவின் செயல்பாடுகளே அதன் நிலைத்த தன்மையை நிர்ணயிக்கும.
- குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஓற்றுமையை வளர்த்துக் கொண்டால்.
- குழு பொறுப்பாளர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால்.
- திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் அனைத்து பயிற்சிகளிலும் கலந்து கொண்டால்.
- அரசு திட்டங்களை நேரடியாக பெற்று முழு பலனை அடைந்தால்.
- அனைத்து நடவடிக்கைகளையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் செய்தால்.
- முடிவுகளை சுயமாக எடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டால்.
- தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டால்.
- குழு, அனைத்து முடிவுகளையும், தானாக எடுத்து செயல்படுத்துகிறதா?
- தொண்டு நிறுவனத்தையும், மகளிர் திட்ட அலுவலகத்தையும் முழுமையாக சாராமல் இருக்கிறதா?
- குழு நிதி, உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளதா?
- கிராம வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா?
- சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா?
- குழு, கூட்டமைப்பு செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்கிறதா?
- உறுப்பினர்கள் போதிய வருமானம் தரக்கூடிய அளவில் தொழில்களில் ஈடுபடுகிறதா?
- மேற்கூறிய செயல்களை ஒரு குழு முழுமையாக செயல்படுத்தினால் அக்குழு நிலைத்த தன்மை அடைந்து விட்டது என அறியலாம்.
No comments:
Post a Comment