FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, October 19, 2014

மாற்றுத்திறனாளிகளுக்குதையல் இயந்திரம் வழங்க நேர்காணல்

17.10.2014, சேலம் :
சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 54 பேருக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, மத்திய, மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவி, ஊனத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று சக்கர சைக்கிள், டூ வீலர், செயற்கை கால், காதொலி கருவி, இரும்பு ஸ்டிக், தையல் இயந்திரம், உதவித்தொகை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், 2014ம் ஆண்டுக்கு, 80 தையல் இயந்திரங்கள் வந்தன. அவற்றில், முதல் கட்டமாக கொடுத்ததுபோக, 54 இயந்திரம் இருந்தது.அதையடுத்து, 120 பேருக்கு நேர்காணலுக்கான கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று, மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், தையல் பயிற்சி முடித்தவர்கள், தங்களுடைய சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையுடன் வந்து கலந்து கொண்டனர். தையல் இயந்திரத்தை சரியான முறையில் இயக்குகிறார்களா என்பது குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தங்கமணி, அதிகாரிகள், சேகர், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின், அவர்கள் தைத்த துணிகள் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓரிரு வாரத்தில், தகுதியானோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment