07.10.2014,திண்டுக்கல் :
மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் புதிய திட்டம் முதல்முறையாக திண்டுக்கல்லில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் இருந்து தொலைவில் உள்ள கிராம மக்களுக்காக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாம் நடக்கும் கிராமங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவர். அதேபோல் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமமான வடகரைபாறை பழங்குடியினர் குடியிருப்பில் சிறப்பு முகாம் இன்று நடக்க உள்ளது.மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மதிவாணன் கூறியதாவது: "கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மலைக்கிராம மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.
நன்றி தினமலர்

No comments:
Post a Comment