FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, October 19, 2014

ஐ.ஏ.எஸ் ஆவதே லட்சியம்: மாற்றுத் திறனாளி மாணவர்

16 October 2014,
ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் அதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே காரணம் என்று கூறுகிறார் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கைகள் இல்லாத எம்.சையத் காதர் (21).

இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வருகிறார்.

இது குறித்து அவரிடம் பேசுகையில் அப்பா முகமது யூசுப் சர்க்கஸ் குழுவில் பணிபுரிகிறார் நிரந்தர வருவாய் இல்லை. குடும்ப வறுமையின் காரணமாக தனது தாய் ஆசியா பேகம் சிரமப்பட்ட போது சென்னை அண்ணாநகரில் உள்ள கில்ட் ஆஃப் சர்வீஸ் இல்லம் பற்றி அறிந்து என்னை அங்கே சேர்த்தார்கள்.

அங்கே தன்னுடன் சேர்த்து பிறவிக் குறைபாடுகள் உடைய 60 பேருடன் தங்க நேர்ந்தது. அவர்களை விட எனக்கு இது பெரிய ஊனமாக தெரியவில்லை. கல்வி மட்டுமே வாழ்வில் ஒளி தரும் என்பதை உணர்ந்து படிக்கத் தொடங்கினேன். முன்னாள் குடியரசுத்தலைவரின் அக்னி சிறகுகள் நூலை படித்தபோது தன்னம்பிக்கை வளர்ந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாறவேண்டும் என்ற கனவும் அதற்கான முனைப்பிலும் ஈடுபட்டேன்.

தினசரி செய்தித்தாள்களில் அரசியல், சமூகம் உள்ளிட்டவைகளை ஆழ்ந்து படிக்கத்தொடங்கினேன். 9-ஆம் வகுப்பு வரை காலால் தான் தேர்வு எழுதினேன். ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்குவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியர் ஒருவர் துணைக்கு அமர்த்தப்பட்டார் அதில் 366 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே 2 - ஆவது இடத்தை பெற்றேன். அரசின் இலவச பஸ் பாஸ் தனக்கு பேருதவியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment