30.10.2014, சென்னை :
தமிழக அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகள் தினமான, டிச., 3ம் தேதி, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக பணிபுரிந்தோர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. சிறந்த பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோர், ஐந்து பேர், சிறந்த ஆசிரியர் மூன்று பேர், சிறந்த சமூகப் பணியாளர் ஒருவருக்கு, விருது வழங்கப்படும்.
மேலும், ஒரு தொண்டு நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும், சிறந்த ஆசிரியர்கள் இருவர், மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பாக பணியாற்றிய டிரைவர் மற்றும் கண்டக்டர் என, மொத்தம், 14 விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறுவோருக்கு, 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விருது பெற தகுதியானவர்கள், சென்னை, கே.கே.நகர், நேரு உள்வட்ட சாலையில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில், விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாநில ஆணையருக்கு, அடுத்த மாதம், 12ம் தேதிக்குள், அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:
Post a Comment