FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, October 24, 2014

போலியோவை ஒழிக்க போராடி வரும்ஆஸ்திரேலிய மாற்றுத்திறனாளி பெண்

24.10.2014, ஆத்தூர் :
போலியோவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண், போலியோவை ஒழிக்க, உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, கெயின்ஸ் சன்ரைஸ் பகுதியை சேர்ந்தவர் சுஷேன்னேரியா, 71. அவர், போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், போலியோ நோயை கட்டுப்படுத்த, தனது சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சென்று, ரோட்டரி சங்க விழாவில் பங்கேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நன்கொடை வழங்கி வருகிறார்.ரோட்டரி சங்க விருந்தில் பங்கேற்று, அவருடன் விருந்து சாப்பிடுவோரிடம், 200 ரூபாய் வசூல் செய்து, உணவுக்கு, 50 ரூபாய் போக, மீதம், 150 ரூபாயை வாங்கிக் கொண்டு, அத்தொகையை, போலியோ ஒழிப்புக்கு உதவித் தொகையாக வழங்கி வருகிறார்.நேற்று, ஆத்தூர், சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில், "போலியோவை ஒழிக்க எங்களுடன் சாப்பிட வாருங்கள்' என்ற விழிப்புணர்வு விழா நடந்தது.விழாவில் கலந்து கொண்டு சுஷேன்னேரியா பேசியதாவது:சிறு வயதில், போலியோ நோய் ஏற்பட்டால், மாற்றுத் திறனாளியாகவும், உடல் பலவீனமான நிலை ஏற்படுகிறது. போலியோ நோயால், நானும் சிறு வயதில் பாதிக்கப்பட்டேன். என்னை போல், மற்றவர்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, நன்கொடை வழங்கி வருகிறேன்.போலியோ நோய், உலகளவில் கட்டுப்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் இல்லாதவகையில், எதிர் கால சந்ததியினர் உருவாக்குவதே என் வாழ்நாள் லட்சியம்.இவ்வாறு பேசினார்.விழாவில், ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் பாலசுப்ரமணியம், மாவட்ட தலைவர் நிர்மல்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment