FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, September 20, 2017

செவித்திறன் குன்றியோர் பள்ளியை மேம்படுத்த உத்தரவு

19.09.2017
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அலங்காநல்லுார் கருப்பையா தாக்கல் செய்த பொதுநல மனு: விருதுநகர் சூலக்கரையில், செவித்திறன்குன்றியோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மற்றும் விடுதி கட்டடத்தை சீரமைக்க வேண்டும். போதிய கழிப்பறை, குடிநீர் வசதி செய்ய வேண்டும். 'இன்டர்நெட்' இணைப்பு வழங்க வேண்டும்.

நகல் எடுக்கும் இயந்திரம் நிறுவ வேண்டும். தலைமை ஆசிரியர் உட்பட இதர காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுபோல் மாநிலத்தில், 10 பள்ளிகள் போதிய வசதிகள், ஊழியர்கள் இன்றி உள்ளதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். இவற்றை மேம்படுத்த, தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் இதர வசதிகள் செய்ய அரசின் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்துத்துறை முதன்மை செயலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரக கமிஷனரும் பொது நலன் கருதி நடவடிக்கை எடுப்பர் என, இந்நீதிமன்றம் நம்புகிறது. வழக்கை பைசல் செய்கிறோம்.

இவ்வாறு உத்தரவில் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment