FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, September 13, 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரம்: விண்ணப்பதாரர்களுக்கு தகுதிகள்

சென்னை, செப். 12–
சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் இதுவரை தையல் இயந்திரம் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்கவேண்டும். கல்வித்தகுதி தேவை இல்லை எனினும் வயது 18 முதல் 45 வரை இருத்தல் வேண்டும், வருமான வரம்பு ஏதும் இல்லை. அரசு அல்லது தனியார் நிறுவனங்களிலிருந்து தையல் தெரியும் எனச் சான்று பெற்று இருத்தல் வேண்டும். இத்தகுதி உடையவர்கள் காது கேளாத மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வெள்ளைத்தாளில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மேலே கேட்கப்பட்டுள்ள தகுதிகளின் நகல்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், டி.எம்.எஸ் வளாகம், சென்னை (தொலைபேசி எண் 044-2431 5758) என்ற முகவரியில் விண்ணப்பிக்கவும். இவ்வாறு கலெக்டர் அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment