FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, September 4, 2017

திருச்சியில் காதுகேளாத மாணவர் சாதனை


சிவகாசியில் கடந்த 30, 31 ம் தேதி நடைபெற்ற Tamil Nadu Sports Council of the Deaf சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்கள். திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மணிகண்டன் என்ற மாணவர் பங்கேற்றார். இவர் துறையூர்  ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். ஜூனியர் பிரிவில் 100m., 200m, 110m Hurdles ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் Long Jump, High Jump, Triple Jump என வெவ்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 6 தங்கப்பதக்கமும் 1 வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தில் மணிகண்டனை பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். அவர் பயின்ற பள்ளியில் நிறுவினர், விளையாட்டு ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். காதுகேளாதோர் விளையாட்டு பிரிவில் மணிகண்டன் பங்கேற்று சாதனை புரிந்து உள்ளார்.

No comments:

Post a Comment