''பிறவியிலேயே செவித்திறன் பாதித்த 50 குழந்தைகளுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நுண்துளை சிகிச்சை மூலம் காது கருவி பொருத்தப்பட்டுள்ளதாக,'' காது மூக்கு தொண்டை பிரிவு துறைதலைவர் தினகரன் பேசினார்.மதுரை அரசு மருத்துவமனையில் நுண்துளை ஆப்பரேஷனில் காதுகருவி பொருத்துதல் குறித்த கருத்தரங்கு நடந்தது. டீன் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ஷீலா மல்லிகா ராணி முன்னிலை வகித்தார். சென்னை காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர் மோகன் காமேஸ்வரன் நவீன சிகிச்சை குறித்து பேசினார்.
காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவர் தினகரன் பேசியதாவது:பிறவியிலேயே காது கேட்காத 1 முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுண்துளை ஆபரேஷன் மூலம் காதுகருவி பொருத்தும் பணி 2016 ஜனவரியில் இங்கு துவங்கியது. இதன் மூலம் 50 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். ஆப்பரேஷன் முடிந்த பின் ஒரு ஆண்டு பேச்சு பயிற்சி அளிக்கப்படும்.பின்னர், பிற குழந்தைகளை போல பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.இந்த அறுவை சிகிச்சையில் தமிழகத்தில் மதுரை 3 வது இடத்தில் உள்ளது.பிறவியில் செவித்திறன் பாதித்த குழந்தைகளின், பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை அழைத்து வந்து செவித்திறன் பெறச் செய்யலாம், என்றார்.
No comments:
Post a Comment