FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, November 22, 2017

ஹலோ பிறந்த கதை...

22.11.2017
தொலைபேசியை கண்டு பிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பது மட்டும் நமக்கு தெரியும். அதை கண்டுபிடிக்க அவருக்கு ஊக்கமாக இருந்தது எது? என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் தந்தை மெல்வில்பில். இவர் பிறவியிலேயே வாய் பேசவும், காது கேட்கவும் இயலாதவர். அதனால் மற்றவர்கள் பேசும் வாய் அசைவுகளை வைத்து எப்படி கருத்துகளை புரிந்து கொள்ள முடியும், விளக்க முடியும் என்று ஒரு புத்தகம் எழுதி அதன் மூலம் பிரபலமானார். தந்தையின் காது கேளாத, வாய் பேசமுடியாத நிலைதான் அலெக்சாண்டர் கிரகாம்பெல்லை ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. 1871ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஒரு காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த கிரகாம்பெல், செவிட்டுத் தன்மையை நீக்கி ஒலியை உணர்வதற்கான கருவி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். காது கேட்காதவர்களுக்கு செயற்கை காது பொருத்த முடியுமா என்றும் ஆராய்ந்தார். அதனால் இறந்தவர்களின் காதுகளை அறுத்தும் ஆய்வு செய்தார்.

1874ம் ஆண்டில் தனது உதவியாளர் தாமஸ் வாட்சன் என்பவருடன் போஸ்டன் நகரில் தங்கி இருந்த போது கம்பி மூலம் ஒலியை அனுப்பி கேட்க முடியுமா என்றும் ஆய்வு செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அவர் கண்டுபிடித்த கருவி வேலை செய்யவில்லை. கோபத்தில் இருந்த அவர் வேகமாக எழுந்த போது அருகில் இருந்த அமிலம் அவர் மேல் கொட்டி விட்டது. அதனால் உதவிக்கு தனது வாட்சனை கத்தி அழைத்தார். அவர் அழைத்தது கீழ் அறையில் இருந்த வாட்சனுக்கு கேட்டது. எப்படி கேட்டது. அவர் கண்டுபிடித்த டிரான்ஸ் மிஷின் முன்பு நின்று கத்தியுள்ளார். அதனால் அது வேலை செய்வதாக உறுதிப் படுத்தினார்.

அதற்கு பிறகு பல முயற்சிகளின் அடிப்படையில் கம்பி மூலம் பேசும் தொலை பேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் அதை வர்த்தகப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதை பலருக்கு செயல்விளக்கம் செய்து காட்டினார். குறிப்பாக விக்டோரியா ராணி முன்பு செய்து காட்டினார். அந்த செயல்விளக்கம் செய்யும் போது அவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘‘ஹலோ’’ என்ற வார்த்தைதான்.

இந்த ‘‘ஹலோ’’ என்ற வார்த்தை ஒரு பெண்ணின் பெயர். யார் அந்த பெண் என்ற கேள்வி நமக்கு தோன்றும். அவர் வேறு யாருமல்ல. அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் காதலிதான். மார்கரெட் ஹலோ என்பது அவர் பெயர். அதை சுருக்கி ஹலோ என்று அழைத்தார் கிரகாம்பெல். டெலிபோன் பேசுவோர் எல்லோரும் அவரது காதலியின் பெயரை உச்சரிக்கும்படி செய்துவிட்டார். ஆனால், கப்பலில் உச்சரிக்கப்படும் ‘‘அஹாய்’’ எனப்படும் சொல்லைத்தான் கிரகாம்பெல் ஹலோ என்று மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1876ம் ஆண்டு முழுமையான தொலைபேசி முறையை வர்த்தகப்படுத்தினார். அப்போது தொலை பேசி இணைப்பு கேட்டு வெறும் 8 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்தனர். 1922ம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகாம்பெல் இறந்த போது, அமெரிக்கர்கள் ஒரு நிமிட நேரம் தொலைபேசிகளை இயங்காமல் வைத்து கிரகாம்பெல்லுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment