FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, January 8, 2019

மார்த்தாண்டம் அருகே அதிர்ச்சி; காணாமல் போன காது கேளாத 10 வயது மாணவன் பிணமாக மீட்பு!

03.01.2019
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகன் ஹரி பிரசாத்(10). இவன் நாகர்கோவிலில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்தார்.

நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார். அப்பகுதியில் ஐஸ் விற்க வந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பல இடங்களில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடினர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை சுபாஷ் வீட்டிற்கு அருகிலுள்ள குட்டையில் ஹரி பிரசாத் பிணமாக கிடந்தார். அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

வாய்பேச முடியாத சிறுவனின் உயிரிழப்பால் உறவினர்கள் மற்றும் அப்பகுதியியை சேர்ந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment