![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7gB5mnyNyfxK9aZ9iqCA3zK_X11yVRLoAIDWHQ9WdzUWvuWTPFZ4sc5XQ09YUDwfFL4b_qkc_IayDS4y_qYIZanYnAqGR9-55bkEtdDYO3TOCc9DJQX1kExYUT1TgkyQFInLbOla71Gyj/s400/%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg)
04.01.2019
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் மட்டுமே வேலை வாய்ப்புக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யபட்டு வந்தனர். கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய் பேசமுடியாத மனுதாரர்கள் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். சிறப்பு பிரிவு ராமநாதபுரத்தில் துவக்கப்பட்டிருப்பதால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்துகொள்ளலாம். அரசுத்துறைகளால் அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களை பரிந்துரை செய்தல், தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களை பணியமர்த்தல் உள்ளிட்ட பணிகள் இப்பிரிவின் மூலம் செயல்படுத்தபட உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்த மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவிதொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment