![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiekA59WM0QOrKb48jONS_OLOvx3WvSzvOFiudDV4-eRRK2184l1UV-jC-29Bn68vF8f99zfaxSVLd-pRlce56jIH5XkxdXcjQdY2OQ05D8vjdEgy_TvmnM1QI8Ul6abIpCXX4lteTPeVjg/s400/Villupuram+District.jpg)
19.01.2019
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவித்திறன் உதவியாளர் பணியிடம் நிரப்ப விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி நேர்காணல் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு;கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவித்திறன் உதவியாளர் ஒரு பணியிடம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 'டிப்ளமோ இன் ஹியரிங் லாங்வேஜ் அன்டு ஸ்பீச்' படித்திருக்க வேண்டும். பொதுப்போட்டி முன்னுரிமை பெற்றவர்கள் இனசுழற்சி பின்பற்றப்படும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு. மாத சம்பளம் ஒப்பந்த முறையில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கும் நேர்காணலில் உரிய கல்வி, சாதி, அனுபவம் சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment