தர்மபுரி: 'மாற்றுத்திறனாளிகள் தங்களின் வேலைவாய்ப்பு பதிவை இனி, சென்னைக்கு செல்லாமல், தர்மபுரியிலேயே பதிவு செய்யலாம்' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காதுகேளாதோர், கண் பார்வை தெரியாதவர், வாய்பேசாதோர் போன்ற மாற்றுத்திறனாளிகள் தாங்கள் கற்ற கல்வியை பதிவு செய்ய, சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். அங்கு செல்ல முடியாதவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று மனுக்கள், சான்றிதழ்களை ஒப்படைத்துவிடுவர். பின்னர் அவை சரிபார்க்கப்பட்டு சென்னை அனுப்பிவைத்து, அங்கிருந்து ஒப்புதல் பெறப்பட்டவும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. நேரம், அலைச்சல் போன்றவற்றை கருத்தில்கொண்டு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவை துவங்கி அங்கேயே பதிவுகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட, 18 மாவட்டங்களில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவுகள் கடந்த வாரம் துவங்கப்பட்டது.
* தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கடகத்தூரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்கள் கல்வி சான்றிதழ்களை பதிவு செய்து பயன் பெறலாம். விவரங்களுக்கு, 04348-235006 என்ற எண்ணில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment